கார்க்கியின் பார்வையில்

மோடியின் ராம ராஜ்ஜியம்

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும்,
அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.
ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட
காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன்
அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி  இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்?
இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில்
ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம்
இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்
ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம்  என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

கார்கி

ஒக்ரோபர் 26, 2007 - Posted by | politics, terrorism |

9 பின்னூட்டங்கள் »

 1. தோழருக்கு… உங்களது கருத்துப்பதிவு அருமை. நான் இதனை எனது பதிவில் மீள்பதிவு செய்யலாமா? இவ்வார தமிழ்மணம் நட்சத்திரப்பதிவாக இதை வெளியிடுவது பரவலாக அறிய வாய்ப்பிருப்பதால். எழுதவதற்கே மனம் துனக்குறும், மனச்சிதைவாக்கும் இச்செயல்கள்பற்றி இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக என்னால் எழுத முடியாது. தங்களது அனுமதிக்காக….

  தோழமையுடன்
  ஜமாலன்.

  பின்னூட்டம் by ஜமாலன் | ஒக்ரோபர் 26, 2007 | மறுமொழி

 2. அன்பார்ந்த நன்பர் ஜமாலனுக்கு,

  தாங்கள் என்னிடம் எனது பதிவுகளை எடுத்தாள அனுமதி கேட்கவே வேண்டியதில்லை. தாராளமாக பயன்படுத்திக்
  கொள்ளுங்கள். இன்றைய சூழலில் நமது நாட்டில் மத அடிப்படைவாதிகளின் இயங்கியலையும், அதனால் ஏற்பட்டுவரும்
  சமூகப் பொருளாதார பாதிப்புகளையும், உளவியல் பாதிப்புகளையும் நாம் விரிவாக வாசகர்கள் மத்தியில் வைப்பது அவசியமாகிறது.

  வாழ்த்துக்கள்!

  கார்க்கி

  பின்னூட்டம் by kaargipages | ஒக்ரோபர் 27, 2007 | மறுமொழி

 3. நன்றி நண்பர்…

  வெளியிட்டுவிட்டேன்..
  இணைப்ப: http://jamalantamil.blogspot.com/

  பின்னூட்டம் by jamalan | ஒக்ரோபர் 27, 2007 | மறுமொழி

 4. உணர்ச்சிகள் ஒன்றிணையும் இடத்தில் இடைவெளியை நீட்டிக்காட்டும் அனுமதிகளுக்கு இடமில்லை.

  சகோதர உரிமையுடன் உங்கள் பதிவு மீள்பதிவாக மலர்களில்…

  http://copymannan.blogspot.com/2007/10/blog-post.html

  அன்புடன்
  இறை நேசன்

  பின்னூட்டம் by இறை நேசன் | ஒக்ரோபர் 27, 2007 | மறுமொழி

 5. சகோதரர் இறைநேசன்,

  மீள்பதிவு செய்தமைக்கு நன்றி! பார்ப்பன பயங்கரவாதிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய ரத்த கடன்
  இன்னும் பாக்கி இருப்பதை இங்கே உள்ள சொரனையுள்ள சூத்திர பஞ்சமர்களும் இஸ்லாமிய சகோதர்களும் நினைவில்
  நிறுத்த வேண்டும்..

  பின்னூட்டம் by kaargipages | ஒக்ரோபர் 28, 2007 | மறுமொழி

 6. நேரத்திற்கு ஏற்ற தேவையான பதிவு தோழா,

  உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தோழர்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளேன்.

  இந்த பதிவைப் படித்து மிகவும் உணர்ச்சிவசப் பட்டுள்ளேன்.

  பின்னூட்டம் by இயல் | ஒக்ரோபர் 29, 2007 | மறுமொழி

 7. உணர்ச்சி தெறிப்பு மிக்க பதிவு
  சில இடங்களில் இயலாமையும்
  சில இடங்களில் மிருகத்தனமான
  வெறியும் மட்டு மீறுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

  இந்த நிலமைகளின் கீழ் நாமும் வாழ்கிறோம் என்பதை எண்னும் போது அவமானகரமாக இருக்கிறது பார்ப்பன பயங்கரவாத கும்பலில்
  உள்ள ஒவ்வொருவனுடைய ஈரல் குலையையும்
  மோடி,அத்வானி,தெகாடியா,எச்.ராஜா,இல.கணேசன்
  என்று ஒவ்வொருவனுடைய ஈரல் குலையையும் உருவி எடுக்க வேண்டும் என்கிற வெறித்தனமான
  ஆசை மீண்டும் மீண்டும் எழுகிறது நாம் அந்த ஆசையை
  நிறைவேற்றித் தான் ஆக வேண்டும் இல்லையெனில்
  நாமும் குற்றவாளிகள் தான்….

  ஆனால் இது பற்றி எந்த குற்றவுணர்வுமற்று,
  சொரணையுமற்று
  வாழும் ஜென்மங்களை என்ன செய்வது ?

  தாய் நாவலில் கார்க்கி கூறியிருப்பதைப் போல
  அவர்களின் மூளைக்குள் முள்ளம்பன்றிகளைத் தான்
  தினிக்க வேண்டும் தன் முற்களை சிலுப்பிக்கொண்டு நிற்க்கும்
  முள்ளம் பன்றிகளை !

  சரியான தருணத்தில்
  உணர்ச்சி மிகை படாமல்
  பிறரையும் அந்த உணர்ச்சிக்குள் தள்ளிவிடும் பதிவை எழுதிய தோழர் கார்க்கிக்கும் பதிவை மீண்டு பதிப்பித்து பரவலான கவனத்திற்கு
  கொண்டு சென்ற தோழர்களுக்கும் நன்பர்களுக்கும் நன்றி.

  பின்னூட்டம் by paavel | ஒக்ரோபர் 30, 2007 | மறுமொழி

 8. DEAR KAARKI,
  THANK YOU FROM MY HEART FOR WRITING THIS ARTICLE.

  YOUR WRITINGS GAVE ME HOPE.
  REGARDS
  IZZATH

  பின்னூட்டம் by IZZATH | ஒக்ரோபர் 31, 2007 | மறுமொழி

 9. avasiyamana ontr

  பின்னூட்டம் by kutty | ஏப்ரல் 7, 2008 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: