கார்க்கியின் பார்வையில்

கல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..

சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங் என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி
கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர். மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.

பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற
தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.

கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல்
படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.

இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.

உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ்  என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.

தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.

ஜூலை 6, 2010 Posted by | கல்வி, பதிவர் வட்டம், culture, Education, politics | , , , , , | 3 பின்னூட்டங்கள்

செயலின்மையிலிருந்து செயலுக்கு…

நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…

திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…

உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது

மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….

இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….

நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…

அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..

ஜூலை 1, 2010 Posted by | Alppaigal, கவிதை, போலி கருத்துரிமை, culture, facist, politics | , , , | 2 பின்னூட்டங்கள்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!

சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..

நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.

இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.

ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?

என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –

லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.

எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –

சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –

லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..

அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.

திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.

அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.

விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.

ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்

அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.

அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஜூன் 3, 2010 Posted by | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism | 8 பின்னூட்டங்கள்

இந்தியா விற்பனைக்கு..!!

சில மாதங்கள் முன்பு பி.டி கத்தரிக்காய்க்கு சந்தையில் விற்க அனுமதி வழங்குவதற்கு எதிராக இங்கே கடும் அமளி ஏற்பட்டது. ஜனநாயக
முற்போக்கு சக்திகளோடும், விஞ்சானிகள், அறிவுத் துறையினர், விவசாயிகள் பொது மக்கள் என்று பரவலாக பி.டி கத்தரிக்காய்க்கு ஒரு கடும் எதிர்ப்பு உருவாகியது. பரவலான எதிர்ப்புக் குரல்களோடு  சேர்ந்து கொண்டு என்.ஜி.ஓக்கள் சிலரும் கூட வித விதமான வடிவங்களில்
பி.டி.கத்தரியை எதிர்த்து போராடிய காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கொஞ்ச நாட்கள் மக்கள் கருத்தறியும் கருத்தரங்கங்கள் என்ற பெயரில் நடத்திய
நாடகங்களையும் தொடர்ந்து பி.டி கத்தரி விஷயத்தில் ‘பொதுக்கருத்து’ ஒன்றை எட்டும் வரையில் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அறிவித்திருந்தார். உடனே ஆங்கில ஊடகங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக என்.ஜி.ஓக்கள் தமது வெற்றியை அறிவித்துக் கொண்டாடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

இதுவரையில் நீங்கள் கேட்டது திரைப்படத்தின் இடைவேளை வரையிலான கதையைத் தான். இடைவேளைக்குப் பின் தான் கதையில் மிக முக்கியமான திடுக்கிடும் திருப்பங்களும் சதிகளும் அரங்கேறுகிறது.  கடந்த மாதத்தின் மத்தியில் இந்தியா அமெரிக்காவோடு விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மத்திய அமைச்சரவையின் இரகசிய ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்கிறது. இதனடிப்படையில் இந்திய – அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கார்கில், மான்சாண்டோ  போன்ற பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களை பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறது.

மேலும் அமெரிக்காவோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு விவசாயத்தில் அன்னிய நேரடி தலையீட்டை அனுமதிப்பதற்கும் ஓசையில்லாமல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நேரடியாக நமது விளைநிலங்களின் மேல் கைவைக்க முடியும். போதிய சட்ட அறிவு இல்லாத ஏழைவிவசாயிகளிடம் நேரடியாக ஏமாற்று ஒப்பந்தங்களைப் போட்டு நல்ல செழிப்பான விளைநிலங்களில் மரபணு மாற்ற விதைகளையும் வீரிய சக்தி கொண்ட உரங்களையும் கொட்டி விஷமாக்கப் போகிறார்கள்.

மேலும் ஏற்கனவே இருந்த தேசிய உயிரிதொழில் நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தில் ( National Biotechnology Regulatory Authority) திருத்தங்கள்
செய்து, உயிரிதொழி நுட்ப ஒழுங்காற்று சட்டம் எனும் பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முயற்சிகள் நடந்து
வருகிறது.

இந்தச் சட்டம் உண்மையில் எவ்வகையிலும் ‘ஒழுங்காற்றப்’ போவதில்லை. இது உயிரிதொழில் நுட்பத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்துபவர்களையும் ஆராய்ச்சியையும் ‘ஒழுங்குபடுத்துவது’ போல ஒரு பாவ்லா காட்டுகிறது. அதாவது மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது – ஆனால் அதற்காக அது ஏகப்பட்ட ஓட்டைகளுடனும், விதிகள் மீறப்பட்டதை சட்டரீதியாக நிரூபிப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கும்படியும் சிக்கலான ஒரு நடைமுறையை முன்வைக்கிறது.

மறுபுறம், மிகக் கச்சிதமாக பொதுமக்களைக் கவ்வுகிறது. அந்தச் சட்டத்தின் 13(63)ம் பிரிவின் படி, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஒருவர் எதிர்த்து பேச வேண்டும் என்றாலே தகுந்த ‘அறிவியல்’ ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் சிறை தண்டனையோ அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மற்றொரு பிரிவின் படி, மாநில அரசாங்கம் மரபணு தொழில்நுட்பம் தொடர்பாக கொண்டு வரும் எந்தவிதமான சட்டத்தையும் மத்திய அரசின் இந்தச் சட்டம் அமுக்கிவிடும். இதன் 27(1) பிரிவின் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூட மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் செல்லுபடியாகாது.

இப்போது ஜெயராம் ரமேஷ் பின்வாங்கிய சூழலையும் அந்தப் பின்வாங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். மக்களிடையேயும், விஞ்ஞான அறிஞர்கள் மட்டத்திலும், விவசாயிகள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு மற்றும் சில மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காயை தடை செய்யும் அரசாணை வெளியிட்டிருந்த சூழலில் தான் மத்திய அரசு பின்வாங்கியது. இப்போது போடப்படவிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க எத்தனிக்கிறார்கள்.

நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் விவசாய நிலங்களை ஒப்படைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் – அவர்கள் விளைவிக்கும் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்தும் போது எதிர்ப்புகள் உருவானால் அதை அடக்கி ஒடுக்க ஒரு சட்டம். சுதந்திரச் சந்தையைப் பற்றி வாய்கிழிய பேசும் ஆங்கில ஊடகங்கள் இந்த சுதந்திரச் சந்தையில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. நாளைக்கு பி.டி காய்கறிகளையும் அரிசியையும் வாங்க மறுப்பீர்களானால் உங்கள் மேல் கூட இந்தச் சட்டம் பாயும். நீங்கள் எதைத் தின்ன வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க விடாத சுதந்திரம் தான் தனியார்மய தாசர்கள் பேசும் சுதந்திரச் சந்தை.

இது முதலாளிகளுக்கான – அதுவும் அமெரிக்க பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான – சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டம். மக்கள் மேல் மரபணு மாற்றப் பயிர்களை தினிக்க பின்வாசல் வழியாய் நுழையப்போகும் கருப்புச் சட்டம். நேற்றைய செய்திகளில் குஜராத்தில் பி.டி பருத்தியில் அதன் விஷத்தையும் முறியடித்து தாக்கும் காய்ப்புழுக்கள் தோன்றி பரவுகிறது எனும் செய்தி படத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், இப்படிச் செய்தி வெளியிடுவதும், அதை நீங்கள் வாசித்து இன்னொருவரிடம் சொல்லுவதையும் கூட குற்றமாக்கி
தண்டிக்க முடியும்.

அவுரிச் செடி பயிரட மறுத்த விவசாயிகளை அன்றைக்கு பிரிடிஷ் காலனிய போலீசு அடித்து உதைத்து கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடவும் – அதை சந்தையில் நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. அது காலனிய யுகம் என்றால் இது மறுகாலனிய யுகம். முதலில் பி.டி கத்தரியை அனுமதிக்கப் போவதாகச் சொல்லி ஒரு முன்னோட்டம் பார்த்து விட்டு; அதற்கு எந்த விதமான எதிர்ப்பு எந்த வகையிலெல்லாம் வருகிறது என்று ஆழம் பார்த்து விட்டு – இப்போது எதிர்ப்புகளை முற்றிலும் ஒடுக்க
பக்காவான சட்டங்களை இயற்றி நேரடியாக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது ஆளும் கும்பல்.

மக்கள் எதிர்ப்புகளை மக்களோடு மக்களாக ஊடுருவி அந்த எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திச் சென்று சரியான தருணத்தில் கைகழுவி மக்களின் முதுகில் குத்தும் துரோகத்தை அன்றைக்கு காலனிய காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசு செய்தது என்றால் – இன்றைக்கு அதே வேளையை என்.ஜி.ஓக்கள் செய்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு மேஸ்திரி வேலை பார்க்கிறது. பாத்திரங்கள் மட்டும் தான் மாறியிருக்கிறது – கதை அப்படியே தான் தொடர்கிறது.

பி.டி கத்தரியை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு – மத்திய அரசு தற்காலிகமாய் தள்ளிவைக்கிறோம் என்று சொன்னதையே வெற்றியாக அறிவித்து விட்டு இப்போது அரசு மீண்டும் கருப்புச் சட்டங்களின் மூலம் மரபணு தொழில்நுட்பத்தை பின்வாசல் வழியாக அனுமதித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு வரையில் பிலிம் காட்டிக் கொண்டிருந்த என்.ஜி.ஓக்கள் இப்போது தலைமறைவாகி விட்டார்கள்.

இது உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய தருணம். தமக்குள் ஒன்றுபட்டு இந்த அமெரிக்கதாசர்களைத் தோற்கடித்து தூக்கியெறியாத வரை விடிவுகாலம் கிடையாது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் மெய்யான நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஒன்றுபட்டு போராடி மக்கள் எதிரிகளையும் துரோகிகளையும் முறியடிக்க முன்வர வேண்டும்.

மார்ச் 24, 2010 Posted by | politics | , , , , , | 5 பின்னூட்டங்கள்

நித்ய லீலைகளும் சாரு நிவேதிதாவும் பின்னே சில எதிர்வினைகளும்..!

காலை வழக்கம் போல பக்கத்துப் பெட்டிக்கடையில் முரசொலியும் தந்தியும் வாங்கச் சென்ற போது கடைக்காரர் ‘பாஸ்.. இன்னிக்கு தினகரன் வாங்குங்க.. செம்ம மேட்டரு’ என்றார்.. அந்த நொடியிலிருந்தே இந்த நாள் ஒரு இனிய நாளாகத் துவங்கியது. நித்தியின் நித்திய லீலைகள் ஒருபக்கம் என்றால் ‘பகவான்’ கல்கி வேறு இன்னொரு பக்கம் சீப்பட்டுக் கொண்டிருந்தார். வடக்கில் இச்சாதாரி சாமி என்றொருத்தன்… ம்ம்… இந்த வாரம் சாமியார் வாரம் போலிருக்கிறது.

காலையிலிருந்து இந்த நிமிடம் வரை நான் சந்தித்த நபர்களெல்லாம் ஒரு வித பரவசத்திலிருந்தார்கள் – பின்னே அது நடிகை ரஞ்சிதாவாச்சே. அப்போதே எனக்கு பதிவுலகில் இந்த மேட்டருக்கு என்ன விதமான எதிர்வினைகள் இருக்கும் என்று ஒருவிதமான அனுமானம் இருந்தது. பதிவர்கள் அதைப் பொய்யாக்கிவிடவில்லை என்பதை மாலை பிரவுசிங் செண்டரில் ஒரு ரெண்டு நேரம் செலவழித்த பின் உறுதியானது.

சென்ற மாதம் என்.டி திவாரி குத்தாட்டம் போட்டு மாட்டிக் கொண்ட போது பல செயின் மெயில்கள் வந்தது. அதிலாகட்டும் இப்போது இந்த சம்பவத்திலாகட்டும் ஒரு கணிசமான பிரிவினரின் எதிர்வினைகளில் சூடான பெருமூச்சை உணர முடிகிறது. ஒரு நன்பர் தேனீர் கடை உரையாடலின் போது சொன்னார் –

“என்பத்தஞ்சு வயசுல கெழவன் என்னா ஆட்டம் போட்டிருக்கான்? ச்சே.. மனுசன் என்னா சாப்டறான்னே தெரியலையே பாஸு..”

இன்றைக்கு வலைத்தளமொன்றில் ஒரு அன்பர் ‘ரஞ்சிதா செம்ம வெயிட்டாச்சே.. இவன் எப்படி சமாளிச்சான்?” என்று மறுமொழி எழுதியிருக்கிறார்.

“என்ன தான் சாமியாருக்கு சக்தியிருந்தாலும் மாத்திரைய போட்டுட்டு தான் களத்தில இறங்கியிருக்காரு” என்கிறார் டீக் கடையொன்றில்
மாலை முரசு வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்.

வலைத்தளங்களில் கண்ட வேறு சில மறுமொழிகளின் பின்னேயும், பல இடங்களில் கேட்க நேர்ந்த உரையாடல்களின் பின்னேயும் கூட
இதேவிதமான வெப்பப் பெருமூச்சுகளைக் காண முடிந்தது. செக்சின் மேல் தமக்கு இருக்கும் அச்சம், பிரமிப்பு, தனக்குக் கிடைக்க வில்லையே என்கிற பொறாமை போன்றவையே அம்மறுமொழிகளின் உள்ளார்ந்த அர்த்தமாக இருக்கிறது. பீனிஸ் என்வி போல ‘இந்த’ பொறாமைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் போடும் கூச்சல் என்பது பெண் நாயைக் கவர நடந்த சண்டையில் தோற்றுப் போன சொரி நாய்கள் தெரு முனையில் நின்று ஊளையிடுமே அப்படித்தான் இருக்கிறது.

கைக்கும் வாய்க்கும் பத்தாத நடுதர வர்க்க அல்ப்பைகளுக்கு தமது பிரச்சினைக்கு நேரடிக் காரணம் யார் என்பதை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது. ஒரு சாமானிய உழைக்கும் வர்க்கத் தொழிலாளிக்குத் தெரியும் தனது இல்லாமைக்கு யார் காரணம் என்று. படித்த நடுத்தர் வர்க்கமோ படித்த முட்டாள்கள்; கண்ணிருந்தும் குருடர்கள்.. இவர்களுக்கு மேல் வர்க்கத்தவர்களைப் பற்றிய கிசு கிசுக்களில் தான் அக்கறையே ஒழிய தன்னை வஞ்சித்த அந்த வர்க்கத்தை தோற்கடித்து தூக்கியெறிய வேண்டும் எனும் முனைப்போ அக்கறையோ கிடையாது. இந்தக் கிசு கிசுக்கள் தரும் கிளுகிளுப்பில் இரண்டொரு நாட்களை ஓட்டி விட்டு அடுத்து ஒரு சத்தியானந்தத்தையோ வித்தியானந்தத்தையோ தேடி ஓடிவிடும்.

அடுத்து சில அலுக்கோசுகள்.. “என்ன இருந்தாலும் சாமி செஞ்சதெல்லம் ஒரு தப்பா? அவரு ஒரு ஆண் – அவள் ஒரு பெண் – அவரிடம் காசு இருந்தது – அவளுக்கு அது தேவையாய் இருந்தது – அவருக்கு அரிப்பு இருந்தது – இவள் அதைச் சொரிந்து விட தயாராய் இருந்தாள்.. அது எப்புடி சன் டீவி பெட்ரூமுக்குள்ள போயி கேமரா வைக்கலாம்? மனித உரிமை மாட்டு உரிமை லொட்டு லொசுக்கு” என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்..

ஏண்டா… அந்தாளு நான் சாமி.. பிரம்மச்சாரி… ரொம்ப யோக்கியன்.. நீயும் வா யோக்கியனா இருக்க சொல்லித் தாரேன்னு சொல்லி காசு
வாங்கியிருக்கான்; என்னய பாரு எம் மூஞ்சிய பாருன்னு ஊரெல்லாம் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டி நல்லா கல்லா கட்டியிருக்கான்; அஞ்சு
வருசத்துக்கு மின்ன அட்ரஸ் இல்லாம அலைஞ்சிட்டிருந்த லூசுப் பயலுக்கு இன்னிக்கு ஆயிரங் கோடி சொத்திருக்குது.. இதெல்லாம் எங்கயிருந்த எப்படி வந்தது?

இதெல்லாம் அவனுடைய ஒழுக்க சீலன் முகமூடியின் மேல் நிறுவப்பட்ட இமேஜ் காரணமாகத்தானே சாத்தியப்பட்டது? இந்த அஞ்சு வருசத்தில் அவன் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளும், உலகெங்கும் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளும் எந்த அடிப்படையில் அவனால் சேர்க்க முடிந்தது? அந்த அடிப்படையே நொறுங்கிக் கிடக்கும் போது உனக்கு அவனது தனி மனித உரிமை பரிபோனது தான் பிரச்சினையா? லட்சக்கணக்கானவர்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது உனக்கு பிரச்சினையாக இல்லையா?

எல்லா கார்பொரேட் சாமியார்களுக்கும் அமெரிக்கா தொடங்கி உலகெங்கும் கிளைகள் தொடங்கி ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் நிறுவி விடுகிறார்கள்.. பத்து வருடங்களுக்குள் அறுவடையைத் தொடங்கி விடுகிறார்கள். ஹவாலா பணத்தைக் கொண்டு வருவது, கருப்பை வெள்ளையாக்குவது போன்ற பொருளாதாரக் குற்றங்கள் மூலமாகத்தான் ஓரு சில ஆண்டுகளிலேயே ஆயிரக்கணக்கான
கோடிகளில் புரளுகிறார்கள். இது அரசுக்குத் தெரியாமல் இருக்க அது ஒன்றும் வாயில் விரல் வைத்துச் சூப்பும் பாப்பா அல்ல; அரசுக்குத்
தெரியும். தெரிந்தே தான் இவர்களை நீடிக்க அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பஃபர் ஸோன் (buffer zone) தேவைப்படுகிறது. மக்களின் கோபம் தம்மை நோக்கித் திரும்பாமலிருக்க இது போன்றவர்கள் ஆளும் வர்க்கத்துக்குத் தேவை.

அட லூசுகளா.. நீங்கள் கண்ணை மூடி மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்களேடா.. கண்ணைத் திறந்து பாருங்களடா என்று கத்த வேண்டும் போல தோன்றுகிறது.

சில நாட்கள் முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களிடம் சென்று தான் பேசி அவர்கள் மீட்டெடுத்து சீர்படுத்துவதாகச் சொன்னானே.. அதன் அர்த்தம் இது தான். யார் யாரை மீட்டெடுப்பது; யார் யாரை சீர்படுத்துவது – தில்லிருந்தால் அவன் மட்டும் அங்கே கால் வைத்துப் பார்க்கட்டும் தெரியும் சேதி. எவனுக்கு வேண்டும் இங்கே நிம்மதியும் அமைதியும்? இந்த சாமியார் பாடுகள் உண்டாக்கப் பார்க்கும் அமைதி மயான அமைதி.. இவர்கள் ஏற்படுத்தப் பார்க்கும் நிம்மது மரணத்தின் நிம்மதி. இங்கே தனி மனித உரிமையாவது வெங்காயமாவது – கோடிக்கணக்கான மக்களின் உரிமையே நாசப்படுத்தப்பட்ட பிறகு தனிமனித உரிமையாம். அயோக்கிய ராஸ்கல்ஸ்

சில அப்பாவி நல்லவர்கள் சொல்கிறார்கள் “பெரியார்வாதிகளின் வேலையை இந்த சாமியார்கள் குறைத்து விடுகிறார்கள்” என்று.

இதெல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமா? உலகம் தட்டை என்று நம்பியது வேண்டுமானால் நம்பிக்கை எனலாம் – அது உலகம் உருண்டை என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெட்டத் தெளிவாக நிரூபனமாகும் ஒரு நாளுக்காக காத்திருந்து கலைந்து போய்விடும். ஆனால் இதுவோ வெறும் நம்பிக்கை அல்ல. நீங்கள் கரடியாய் கத்தினாலும் சரி.. ஜெயேந்திரன், பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, நித்தியானந்தன், இச்சாதாரி, கிச்சாதாரி என்று ஆயிரம் – லட்சம் சாமியார்கள் அம்பலப்பட்டு ஜட்டி கிழிந்து நின்றாலும் கூட – அடுத்த ரெண்டாவது வாரம் ஒரு xxxஆனந்தன் பின்னே போய் விழுவார்கள். அவனும் அயோக்கியனாகத்தானிருப்பான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

இந்த சாமியார்களெல்லாம் சல்லிவேர் தான். இந்த மதம், அதன் நம்பிக்கைகள், அதன் புரோக்கர்கள் என்று இதெல்லாம் நிலைத்து நிற்க
காரணமாயிருக்கும் இந்தப் பொருளாதாரச் சூழல் தான் ஆணி வேர். உடலுறவும் சுய இன்பமும் அளிக்கும் கண நேர நெகிழ்வுணர்ச்சியும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் இரண்டரை மணி நேர ஆன்மீக உரை அளிக்கும் புல்லரிப்பு ஒன்று தான் – புறநிலையில் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஏதோவொன்றில் இளைப்பாருதல் தேவையாயிருக்கிறது – இரு கரம் நீட்டி அணைத்துக் கொள்ள அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன்; அம்பானியும் மன்மோகன் சிங்கும் ஏறி மிதித்த வலி தெரியாமல் வாழும் கலையைச் சொல்லித் தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிடுகிறார் ஸ்ரீ ஸ்ரீ.

கான்சர் முற்றிப் போன நிலையில் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக செயலிழக்கும். அப்போது கான்சருக்கு மருந்தளிப்பீர்களா அல்லது கைவலிக்கு அமிர்தாஞ்சன், இடுப்பு வலிக்கு மூவ், தலைவலிக்கு ஆக்சன் பைவ் ஹண்ட்ரட் என்று தனித்தனியாக மருத்து சாப்பிடுவீர்களா? “நோய் முதல் நாடி” – இந்த கார்ப்பொரேட் சாமியார் நோயின் மூலம் இந்த சமூகப் பொருளாதார அமைப்பு! இது நீடிக்கும் வரை இவர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

கேள்விப்பட்டிருப்பீர்களே – இந்த வருடம் சபரி மலையில் போன வருடத்தை விட கூட்டமாம். இத்தனைக்கும் போன வருடம் தான் மகர ஜோதியின் பூலவாக்கு அம்பலமானது.

பெரியார் இயக்கத் தோழர்களே.. இன்னமும் நீங்கள் இருளில் தொலைந்த சாவியை வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

அடுத்து சாரு நிவேதிதாவின் நிலை தான் உள்ளதிலேயே மிக வேடிக்கையாய் இருக்கிறது. இந்த மொத்த திரைப்படத்தில் கடைசியில் சீரியஸ் காமெடியனானது சாரு நிவேதிதா தான்.  இத்தனை நாட்களாக ஒரு அயோக்கியனுக்கு பிரண்ட் அம்பாஸிடராக இருந்து விட்டு, அம்புலிமாமா பாலமித்ரா பூந்தளிர் ரேஞ்சு கதைகளை உற்பத்தி செய்து விட்டுக் கொண்டு அந்த நாதாரி நாய்க்கு விளக்குப் பிடித்துக் கொண்டிருந்த எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் எப்படி இந்தாளால் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. இயற்கை அவரின் இதயத்தை டில்லி எருமையின் தோலைப் போல படைத்திருக்குமோ என்னவோ.

இவரு ரொம்ப நல்லவராம்.. ஏமாளியாம்.. ஏமாந்துட்டாராம் – எருமை ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்கிறார் – இதையும் கூட இலக்கியம் என்பார்கள் அவரது சொம்பு தூக்கிகள்!

முதல் முறை தேட்டைக்குப் போகும் கள்ளனுக்கு உறுத்தும் – மனசு குத்தும்; அதே இருபதாவது முறை களவெடுக்கப் போனவனுக்கு? அதையே உணர்வுப் பூர்வமாய் ஆத்மார்த்தமாய் படைப்பூக்கத்தோடு மனப்பூர்வமாய் செய்வான். நீங்கள் பார்த்திருப்பீர்களே, சி.பி.எம் கட்சியினர் சிங்கூரிலும் நந்திகிராமிலும் அவர்கள் கட்சியினர் நடத்திய படுகொலைகளை எத்தனை உணர்வுப் பூர்வமாய் தற்காத்துப் பேசினார்கள் என்று. நீங்கள் படித்திருப்பீர்களே, எத்தனை முறை முறியடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டாலும் சொரனையே இல்லாமல் புளுகுகளையே எழுதிவரும் ஜெயமோனை. சா.நி கூட அப்படித்தான் – மரத்துப் போயிருக்கும். அவரைச் சொல்லும் எந்த வார்த்தைகளும் அவரது உள்ளத்தைக் குத்தாது. அதிகமாகப் போனால்
அப்ஸொலூட் வோட்கா ரெண்டு ஷாட் – ஸ்பான்ஸர் செய்யத்தான் இணையக் கோமாளிகள் சிலர் இருக்கிறார்களே.

இது ஜாடிக்கேத்த மூடி. கிருஷ்ணனின் கதையை வியாஸன் எழுதியதைப் போல – ராமனின் கதையை வால்மீகி எழுதியதைப் போல. வியாஸர்களுக்கு கிருஷ்ணன்கள் தேவை – இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவார்கள். கிருஷ்ணனின் இருப்பை வியாஸனும், வியாஸனின் இருப்பை கிருஷ்ணனுமே உறுதி செய்து கொள்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன், இன்னும் சில மாதங்கள் போய் வேறு ஏதோவொரு ஆனந்தாவுக்கோ இல்லை இதே நித்தி ஒரு வேளை சுப்புணியைப் போல ஜஸ்ட் எஸ்க்கேப்பாகி விட்டால் அவருக்கேவோ மீண்டும் சாரு விளக்குப் பிடிக்கப் போவார்.
காலி டப்பாவுக்குள் எதையாவது போட்டால் தானே சப்தம் வரும்? சாருவுக்குள் எந்த எழவாவது இறங்கினால் தானே இலக்கியம் பீரிட்டடிக்கும்? வயது வேறு ஆகிவிட்டது இனிமேலுமா விந்து வங்கிக்குப் போய்க் கொண்டிருப்பது? ச்சே.. தமிழ் நாட்டு
தாஸ்த்தாவ்யெஸ்க்கிக்கு நேர்ந்த கதி இத்தனை கேவலமாய்ப் போயிருக்க வேண்டாம்.

அவர் மிக குழம்பிப்போய் இருக்கிறார். அனேகமாக நித்தியைக் கூப்பிட முயற்சித்து தோற்றிருப்பார்; முதலில் ‘அயோக்கியன், இரட்டை
ஆயுள் தண்டனை’ என்று ஒரு நாலு வரி போட்டுத் தூக்கினார். அடுத்து தியானபீட இணைய தளத்தில் வெளியான அறிவிப்பைப் பார்த்திருப்பார் – உடனே ‘அயோக்கியத்தனம் தான்… ஆனாலும் சாமிக்கு நெம்ப சக்தி’ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு கூக்ளி போன்றது – நாளைக்கு இப்படியும் சாயலாம் அப்படியும் சாயலாம். என்ன இருந்தாலும் பின்னவீனத்துவ இலக்கியவாதியில்லையா.. எத்தன பின்னவீனத்துவம்
படிச்சிருப்பாரு? இது கூட செய்யலைன்னா அப்புறம் அந்த எழவை படிச்சுத்தான் என்னாத்துக்கு?

கடைசியாக…

ஓயாமல் அலறும் கைப்பேசியால் அவதியுறும் லக்கி லூக் மெய்யாலுமே பரிதாபத்துக்குரியவர். என்ன செய்ய லக்கி, நாயை அடித்தால் பீயைச் சுமக்கத்தானே வேண்டும்?

– கார்க்கி

குறிப்பு: ஹலோ… இருங்க பாஸ் இன்னொரு மேட்டரையும் கேட்டுட்டு போங்க; சாருவோட இணைத்துல அவரோட மூஞ்சிய க்ளோசப்புல
போட்டிருக்காங்க – எதுக்கும் பாத்து பதனமா தொறங்க.

மார்ச் 3, 2010 Posted by | culture, politics | , , , , | 6 பின்னூட்டங்கள்

விளையாட்டுத் துறை – சில என்னங்கள்..!

சில நாட்கள் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடிய செய்தி ஆங்கில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அப்புறம் எப்போதுமே ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் போது ஒரே ஒரு மெடலாவது வாங்கி விட மாட்டோ மா..? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஊடகங்களில் வருவதுண்டு.

‘அதெப்படி சார்… நூறு கோடி மக்கள் வாழற நாட்டுக்கு ஒரு பதக்கம் கூட ஜெயிக்கற அருகதை இல்லாமப் போயிடுமா? எல்லாம் பாலிடிக்ஸ் சார்…எங்க பாத்தாலும் கரப்ஷன்..” என்று அங்கலாய்க்கும் நடுத்தர வர்க்க குரல்களை நிறைய கேட்டிருப்போம். இது போன்ற ஒரு விவாதம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் விவாதம் செய்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் துறையில் நேரடியான அனுபவம் இருப்பதால் இது பற்றி எனது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். ரீனா – செந்தில். நான் ஜித்தோ குகாய் கராத்தே பள்ளியில் ப்ரொவிஷனல் ப்ளாக் பெல்ட் பெற்ற தகுதியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ரீனா எனது மானவி. பின்னர் ஜித்தோவில் எனது ப்ளாக் பெல்ட்டை உறுதி செய்ய எனது அப்போதைய மாஸ்ட்டர் மூவாயிரம் லஞ்சம் கேட்டதால் கோவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அங்கே எனது சக மானவன் செந்தில். இந்த இருவருமே சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு தகுதி கொண்ட வீரர்கள். குறிப்பாக ரீனா 2003ம் ஆண்டு தமிழ்நாடு அளவிலான கத்தா / குமிட்டே என்று இருபிரிவிலும் இண்டர் டோ ஜோ போட்டிகளில் முதலிடம் வென்றவர்.

“ஒரு தேவதையின் மரணம்” என்ற ஒரு சிறுகதை சில நாட்களுக்கு முன் எழுதியிருப்பேன். அதில் வரும் ஜெனி எனும் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் ரீனா தான். எனக்கு அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம். அப்போது நான் அவரது பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் கராட்டே இன்ஸ்ட்ரக்டராக இருந்தேன். பின்னர் அவரது ஆர்வத்தைப் பார்த்து இலவசமாகவே எங்களது மெயின் டோஜோவுக்கு
வரவழைத்தேன். (டோஜோ என்பது பயிற்சி செய்யும் இடம் அல்லது பள்ளி என்று பொருள் கொள்ளலாம். மெயின் டோஜோ என்பதை தலைமைப் பள்ளி என்று சொல்லலாம்)

சேர்ந்து மூன்றே வருடங்களில் அவர் கருப்புப் பட்டை பெறும் அளவுக்கு ஆர்வமாக கற்றுக் கொண்டார். பெண்கள் என்றால் குழைவான உடல்வாகு கொண்டவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள், அவர்களுக்கு தற்காப்புக் கலையெல்லாம் ஒத்துவராது என்கிற பொதுவான அபிப்ராயங்களை ரீனா உடைத்து நொறுக்கினார். மாநில அளவில் நடந்த சில போட்டிகளில் அனாயசியமாக வெற்றிகளைத் தட்டி வந்தார். நாங்களெல்லாம் அவர் மேல் மிக எதிர்பார்ப்போடு இருந்தோம். ஜப்பானில் நடக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு அவரை அனுப்ப மற்ற மானவர்களெல்லாம் சேர்ந்து ஸ்பான்சர்ஷிப்புக்காக அலைந்து கொண்டிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் எனக்கும் எங்கள் மாஸ்ட்டருக்கும் மனக்கசப்பாகி நான் ஜித்தோவில் இருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அதற்க்குப் பின் சில ஆண்டுகளாக ரீனாவைப் பார்க்க முடியவில்லை. அப்புறம் ஒரு நான்கு வருடம் கழித்து எதேச்சையாக சாலையில் எதிர்பட்டார். அப்போது அவர் பழைய ரீனாவாக இருக்கவில்லை. உருக்குலைந்து போயிருந்தார். முன்பு கிராப் வைத்திருப்பார் – இப்போது நீளமாக தலைமுடி.
என்னோடு சரியாக பேசாமல் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். பின் நான் எனது பழைய நன்பர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்ததும் அவர் கனவர் இது போன்ற விளையட்டுக்களில் ரீனா ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. கலியாணத்துக்குப் பின் ஒரு நாள் ரீனா பயிற்சியில் இருக்கும் போது டோஜோவுக்குள் புகுந்த அந்த ஆள் ரீனாவுக்கு பளீர் என்று ஒரு அறை விட்டு தர தரவென்று இழுத்துச் சென்றிருக்கிறான். அதன் பின் ரீனா எப்போதும் டோ ஜோவுக்கு வந்ததேயில்லை. ஒரு வேளை ரீனா தொடர்ந்து பயிற்சி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்னவோ.

எத்தனையோ ஆண் மானவர்களை குமிட்டேயில் அனாயசியமாக வீழ்த்தும் திறமை கொண்ட ரீனா அவள் கனவனை சும்மா ஒரு தட்டு தட்டியிருந்தாலே அவன் மூஞ்சி எட்டாகி இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடும் அளவுக்கு சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்களை நமது சமூகம் பஜாரி என்று தானே சொல்கிறது. ஒருவேளை ரீனா அப்படிச் செய்திருந்தால் இன்றைக்கு அவள் மெடல் வாங்கியிருப்பாளோ இல்லையோ வாழாவெட்டி எனும் பட்டத்தை வாங்கியிருப்பாள். மக்கள் தொகையில் சரிபாதி கொண்ட பெண்களை இப்படி மொக்கையாக்கி வைத்திருப்பது தான் நமது சமூக அமைப்பு. பொருளாதார ரீதியில் அவர்களை சார்பு நிலையில் இருக்க வைத்தே வீணடித்து விட்டது. ஏதோ லீணா மணிமேகலை போன்று நாலு கெட்ட வார்த்தைகள் பேசுவதையே பெண் விடுதலையின் உச்சம் என்று நினைத்துக் கொள்ளும்
அலுக்கோசுகள், அந்த நாலு கெட்ட வார்த்தைகளையும் கவனமாக அவரது கனவரை நோக்கி உதிர்க்காததன் மர்மம் என்னவென்று யோசிக்க வேண்டும்.

செந்தில் ஒரு டைலர். ஒரு ஆயத்த ஆடை தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தான். அங்கே குறிப்பான வேலை நேரம் கிடையாது. ஆர்டர் இருக்கும் போது இரவு பகலாக வேலை செய்தாக வேண்டும். இரவு முழுக்க வேலை செய்து விட்டு சிவந்த கண்களோடு காலையில் மைதானத்தில் வந்து எங்களோடு நிற்பான். உடல் தொய்ந்து போய் ஓய்வு கேட்டு கெஞ்சும். அந்த நிலையிலும் செந்தில் அடிக்கும் ஜம்ப்பிங் ரிவர்ஸ் சைடு கிக் எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம். நான் மிகச் சிலரோடு தான் குமிட்டே பயிற்சி செய்ய அஞ்சி இருக்கிறேன். அதில் செந்தில் என்றால் எனக்கு எப்போதும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். தைய்யல் மிஷினை மிதித்து மிதித்து உரமேறிய கால்கள் அவன் கால்கள்.

டேக் வாண்டோ ஒலிம்பிக்கில் இருக்கிறது. அனேகமாக ஒலிம்பிக்கில் இருக்கும் ஒரே மார்ஷியல் ஆர்ட் டேக் வாண்டோ தான் – கராத்தே கூட ஒலிம்பிக்கில் இல்லை. செந்திலின் லட்சியமே எப்படியாவது இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டிருப்பான். எந்த சூழ்நிலையிலும் வகுப்பை தவிர்த்ததேயில்லை. இந்த நிலையில் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு கொரியாவில் இருக்கும் டேக் வாண்டோவின் தலைமைப் பள்ளியில் இருந்து சில தலைசிறந்த வீரர்கள் இந்தியா வந்தார்கள். அதையொட்டி இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மானவர்கள் அவர்களோடு மோதும் ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் செந்திலும் எங்கள்
டோஜோ சார்பில் இறங்கினோம்.

பொதுவாக டேக் வாண்டோ வைப் பொருத்த வரையில் கொரிய வீரர்களே முன்னனி வகிப்பார்கள் (குங்ஃபூ என்றால் சீனர்கள் கராட்டே என்றால் ஜப்பானியர்கள் என்பது போல) அந்தப் போட்டியில் அவர்கள் எந்தவிதமான சவாலையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார்கள். ஆனால் செந்தில் அது வரையில் இருந்த மாயைகளை (Myth) நொறுக்கித் தள்ளினான். அவனது ரிவர்ஸ் சைட் கிக் அன்றைக்கு அற்புதங்களைக் காட்டியது.
கொரியர்கள் மிரண்டு போனார்கள். எங்கள் தலைமை இன்ஸ்ட்ரக்டர் இந்திய டேக் வாண்டோ வின் எதிர்காலம் செந்தில் என்று வீரர்களிடையே தனிப்பட்ட முறையில் பேசும் போது சொன்னார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எப்படியும் தேர்வாகிவிடுவான் என்றும் எப்படியும் மெடல் தட்டிவிடுவான் என்றும் நாங்களெல்லாம் செந்தில் மேல் மிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். இந்த நிலையில் தான் அவனது குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து அவனை நிர்மூலமாக்கியது.

செந்திலுக்கு மொத்தம் மூன்று அக்காக்கள். அவன் அப்பா சின்ன வயதிலேயே அவன் அம்மாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய் விட்டார். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு வந்து விட்டான். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆள் செந்தில் தான். இந்த நிலையில் தான் செந்திலின் முதல் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடானது. திருமண செலவுகளை ஈடுகட்ட செந்தில் ஓவர் டைம் பார்க்கத் துவங்கினான். ஓவர் டைம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல – தொடர்ந்து மூன்று சிப்டுகள் வேலை செய்வான். ஆறே மாதத்தில் அறுபத்தைந்து கிலோவில் இருந்து ஐம்பது கிலோவாக எடை குறைந்தான். பின்னர் இரண்டாவது அக்கா.. மூன்றாவது அக்கா…

இடையில் எனது பொருளாதார நிலைமையும் என்னை ஊரை விட்டு விரட்டி விட்டது. பதினான்கு ஆண்டுகள் எத்தனையோ ஆசைகளோடு கற்று வந்த கலைகளை தூக்கி உடைப்பில் போட்டு விட்டு பிழைப்பைப் பார்க்க கிளம்பி விட்டேன். காலை எழுந்தவுடன் துவங்கும் ஓட்டம் இரவு படுக்கையில் மயங்கி விழும் வரையில் நிற்காது. இப்படியே சில ஆண்டுகள் போனதில் எனது பழைய நன்பர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்த போது செந்திலைத் தேடிக் கண்டுபிடித்து போய் பார்த்தேன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தான். இளைத்த உருவம், களைத்துப் போய் அலைபாயும் கண்கள், தைய்யல் இயந்திரத்தை மிதித்து மிதத்து
ஸ்லிப் டிஸ்க் பிரச்சினை வேறு.. இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரும் வல்லமை கொண்டிருந்தவன் இன்று எங்கோ ஒரு ரெடிமேட் துணிக் கடையில் இன்றைக்கு எப்படியாவது ஓவர் டைம் கிடைக்காதா ஒரு அம்பது ரூவா கூட கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் நிதர்சனம்..

இன்றைக்கான சோறை இன்றைக்கே சம்பாதித்தாக வேண்டிய நெருக்கடி. கல்யாணம் என்றாலே பெண் வீட்டை தேட்டை போடலாம் என்று கருதும் ஒரு சமூகத்தில் செந்தில் போன்று மூன்று சகோதரிகளைக் கொண்ட ஒருவன் எங்கிருந்து பதக்க லட்சியங்களைச் சுமப்பது? இது பொதுமைப்படுத்தும் முயற்சியல்ல – ஆனால், நாட்டில் பெருவாரியாக இருக்கும் கீழ்நடுத்தர ஏழைக் குடும்பங்களில் பதின்ம வயதுகளின்
இறுதியிலேயே பொருளாதார பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. யாராவது “நூறு கோடி பேரு இருக்கற நாட்டுல ஒரு தங்கப் பதக்கம் கூடவா வாங்க வக்கில்ல” என்று நீட்டி முழக்குவதை பார்க்கும் போதெல்லாம்.. ” யோவ்.. உன்னோட இந்தியாவுல மொத்தமாவே மூனு கோடி பேரு தான்யா தேறுவாங்க.. மிச்சம் இருக்கற தொன்னுத்தியேழு கோடி பேரு எங்க இந்தியாவுல இருக்காங்கய்யா” என்று கத்த வேண்டும் என்று தோன்றும்.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் என்பது சதவீதம் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டையெல்லாம் ஒரு பிழைப்பாகவா பார்க்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் மாநில அளவில் முதல் இரண்டு இடங்கள் பெற்று சான்றிதழ் வைத்திருந்தால் ரயில்வே துறையில் டி.டி.ஆர் வேலை கிடைக்கலாம். அதுவும் கூட நிச்சயமில்லை. 1975 ஹாக்கி உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியின் கேப்டனே இன்று ரயில்வே துறையில் தலைமை டிக்கெட் பரிசோதகராகத் தான் குப்பை கொட்டுகிறார் – இது இன்றைய டைம்ஸில் வந்திருக்கும் செய்தி. அதே நேரம் 83 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டனின் நிலை இன்று என்ன?

இந்த பிரச்சினையில் பல பரிமாணங்கள் இருக்கிறது. அதில் லஞ்ச ஊழலும் ஒன்று. எனது நன்பன் வைபவ் பற்றி எனது வட இந்திய பயனக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் நினைவிருக்கிறதா? அவன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உ.பி கிரிகெட் அணியில் விளையாடியவன். ரஞ்சி கோப்பை போட்டியில் இறுதி செய்யப்படப் போகும் ஐம்பது பேரில் ஒருவனாக தேர்வாக அவனிடம் ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்கள். கேட்டது வேறு யாரும் இல்லை – இன்று ஆங்கிலச் சேனல்களில் கிரிக்கெட்டின் புனிதம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் ஒரு முன்னாள் வீரர் தான். லாலு ப்ரஸாத்தின் மகன் டில்லி கிரிகெட் அணியில் விளையாடுகிறான்.

ஆனால் இந்த லஞ்ச ஊழலும் அரசியல்வாதிகளும் மட்டுமே இந்தியா விளையாட்டுத் துறையில் பிரகாசிக்காமல் போனதற்கு முதன்மைக் காரணம் அல்ல. அதைத் தாண்டி மிக முக்கியமான காரணம் பொருளாதாரமும் நமது சமூக அமைப்பு முறையும். இங்கே தான் சூத்திரன் பஞ்சமன் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே சமூக விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்றைய உணவை சேகரிப்பதே பெரும்
பாடாக இருக்கும் போது, எப்படி விளையாட்டுத் துறைக்கு வந்து விட முடியும்? நமது சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி பெரிதாக சொல்லித் தெரியவேண்டியதில்லை. ரீனா போன்று எத்தனை பேர் தங்கள் கனவுகளை லட்சியங்களை மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு சமையலறையில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்? ஒரு சானியா மிர்ஸாவை கொண்டாடும் ஊடகங்கள் இப்படி கவனிப்பாரே இல்லாமல் திறமைகள் வீணடிக்கப்படும் லட்சக்கணக்கான சானியா மிர்ஸாக்களைப் பற்றி பேசுவதில்லை. இதே சானியா மிர்ஸா அழகியாக இல்லாமலும்
சிவந்த தோல் இல்லாமலும் இருந்திருந்தால் இப்படி ஒரு கவனிப்பை பெற்றிருப்பாரா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவுக்கு பதினோரு க்ராண்ட் ஸ்லாம் பெற்றுத் தந்த லியாண்டர் பயஸை விட பெரிதாக எதையும் சாதிக்காத சானியா மிர்ஸா ஊடகங்களில் கொண்டாடப்படுவது ஏனென்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஏன் கிரிக்கெட்டுக்கு இந்தளவுக்கு கவனிப்பும் முக்கியத்துவமும் தருகிறார்கள் என்பதை யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் தேசிய விளையாட்டே கிரிக்கெட் தான் என்று நம்பும் படிக்கு ஊடகங்கள் கடந்த ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் தொடர்ந்து பொதுபுத்தியில் பதிய வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வீரர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ பல விளம்பர காண்டிராக்டுகளில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். இவர்கள் மேல் – அதாவது இவர்களின் கவர்ச்சியின் மேல் – கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகள்
இவர்கள் அணியில் தேர்வாவது வரைக்கும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆமாம்.. கடைசியாக யுவராஜ் சிங் எப்போது உருப்படியாக விளையாடினார் என்று நினைவுக்கு வருகிறதா உங்களுக்கு? தொடர்ந்து ரஞ்சி கோப்பை மேட்சுகளில் நன்றாக விளையாடு தினேஷ் ஏன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதில்லை?

உலகமயமாக்கல் எல்லா துறையையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் துறைகளாக மறுவார்ப்பு செய்து வருகிறது. பன்னாட்டு கம்பெனிகள் தமது பிரண்டு அம்பாஸிடர்களாக தேர்வாக ஏதோ கொஞ்சம் திறமையும் நல்ல அழகும் கொண்ட வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது – இவர்கள் தான் தவிர்க்கவியலாத படிக்கு அணிகளில் இடம் பெறுவர். சச்சின் டோனி போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம் (அப்படிப் பார்த்தாலும் எனது தனிப்பட்ட கருத்து சச்சினை விட காம்ப்ளி திறமையானவர் என்பதே) – இவர்கள் இயல்பிலேயே திறமை கொண்டவர்கள் – அதை பன்னாட்டு கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எத்தனையோ திறமைசாலிகள் இந்த நூறு கோடி கூட்டத்துக்கு நடுவே எங்கோ இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் வெளியே தெரிவதில்லை?

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பும் அணிகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி கொண்ட மேல் நடுத்தர வர்க்க குடும்பத்துப் பிள்ளைகளே இருப்பர். உண்மையான திறமைசாலிகள் எங்கோ ஒரு மூலையில் தைய்யல் இயந்திரத்தை மிதித்து இடுப்பு ஒடிந்து கிடப்பார்கள். அவர்களின் கோப்பை வெல்லும் கனவுகளெல்லாம் தகர்ந்து போய் இன்றைக்கு ஓவர் டைம் கிடைத்தால் தேவலம் எனும் எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 3, 2010 Posted by | culture, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

3 idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும்

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதிவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயனமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.

வந்தநாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் ( ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாக சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்திபடத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை. அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல
மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள் தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேரெதோவொரு பார்ப்பான்..  என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.

கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக்கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கிறது.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி  (ஆமிர்கான் ) கல்லூரி மானவன்(!). கூட்டாளிகளாக இன்னும் ரெண்டு மானவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை). இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொரியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமர்சனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மானவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாலரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொரியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறார் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மானவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை
கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ
கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).

படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மானவன். இந்த பாத்திரப்படைப்பைப் பற்றி தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேணாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.

படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாலரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரேரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நன்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்து தான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை – அவரைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத் தான் மொத்த கதையும் விரிகிறது.

ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும்  “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொகிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது

ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை
மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம்  கோமாளித்தனமானதாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடிக் வில்லன் போல! பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மானவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மானவனை(ஹீரோவை) கண்ணாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மானவர்களெல்லாம்  அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.

பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொருத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மானவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  ராமலிங்கம்  ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.

எப்படி?

பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்களின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக்
கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு
தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மானவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொரியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம்
கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூ தான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.

ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தாஷுக்காக என்றும் ஆமிர் தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நன்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..

இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்ற
வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.

“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”

“Sorry I dont know hindi”

என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும் தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை
ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கனித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.

திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க
வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவது தான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயனத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது. வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை –
நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுரல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான். உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்குத் தேவையாய்த் தான் இருக்கிறது. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்கு வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

திசெம்பர் 29, 2009 Posted by | Films, medias, politics | | 10 பின்னூட்டங்கள்

மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!

இன்று வலைப்பதிவுகளை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது இந்த வலைப்பதிவு. ஏதோ சில்லறை வோணும்னு சொல்றாகளே என்னா மேட்டருன்னு போய் பாத்தா…”ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவோம்” என்று காரசாரமாக போட்டுத்தாக்கியிருந்தார்கள். கொஞ்சம் பின்னே போனால், ” தமிழகக்திற்கு மாற்றம்: காங்கிரசுக்கோ,திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ, ஓட்டு போடக்கூடாது; போட மாட்டோ ம்” என்று பிளிறி இருந்தார்கள். யார்ராதுன்னு பாத்தா…. நம்ம குழலி! அப்ப பா.ம.கவுக்கு? நிச்சயம் பா.ம.கவுக்கு ஓட்டுப்போட்டுத்தான் ஆக வேண்டும்.. ஏன்னா, இவுக தான் மத்திய அரசுல இருந்துகிட்டு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதம் கொடுப்பதையெல்லாம் தட்டிக் கேட்டுப் புடுங்கிக் கத்தை கட்டிவிட்டார்களாச்சே..

அட, கொறஞ்சது “அய்யா.. நமக்கும் உனக்கும் இனி ஆவாது. நீ எங்க மக்கள கொல்றவனுக்கு ஆயுதம் தர்ரே.. நீயே கூட நின்னு கொல்றே.. நமக்குள்ளே ஒட்டாது.. அத்துக்கலாம்”அப்படின்னு சொல்லி காங்கிரஸ் கூட்டனியிலிருந்தாவது வெளியே வந்திருந்தா… லிஸ்டுல பா.ம.க பேர் விட்டுப்போனது நியாயம்னு சொல்லலாம். அட இவங்கய்யாவே இன்னும் சொனியா காலை நக்கிட்டு இருக்கான்… கேவலம் அமைச்சர் பதவி – அத்தத் தூக்கியெறிய மனசில்லெ – துப்பில்லெ… பொறுக்கி அரசியல் ( அதாவது காங்கிரஸ் போடறதபொறுக்கித் திங்கர அரசியல் ) செய்யற கட்சி பா.ம.க – அந்தாளு போன வாரம் பேப்பர்ல சொல்றான் “ஜெயலலிதா கூட கூட்டனி வைக்க கருணாநிதி நிர்பந்திக்கிறார்” அப்படின்னு… எந்த ஜெயலலிதா…….? விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களையே எதிரிகளாகக் கருதும் ஜெயலலிதா! விடுதலைப்புலிகளையல்ல – ஈழத்தமிழ் மக்களின் ஈரக்குநலயை அறுத்தெறியத் துடிக்கும் பாப்பாத்தி ஜெயலலிதா! நல்லா இருக்குடா ஓன் யோக்கியத… இவனெல்லாம்…. தமிழினவாதி – தமிழ் குடி தாங்கி – லொட்டு… லொசுக்கு – மயிறு….மட்டை.

நம்ம நன்பர் குழலி நியாயமா பா.ம.கவயும் லிஸ்ட்ல சேர்த்திருந்தா பாராட்டியிருக்கலாம். செல்லமா சொல்றாப்ல.. “ராமதாஸ் மீனுக்கு வாலாகவும்….பாம்புக்குத் தலையாகவும்….”…ஏன் மென்னு முழுங்கறீங்க?? நான் சொல்றேன் – ராமதாஸ் மொத்தமாகவே பாம்பு தான்! சாதி தான் ராமதாஸின் அரசியல்.. இந்த தமிழினவாதி வேஷமெல்லாம் ஒரு பரந்து பட்டதளத்தில் பா.ம.கவை எஸ்டாப்ளிஷ் செய்யும் முயற்சி. அந்நியர் ஓட்டு பா.ம.கவுக்கு இல்லை என்ற செருப்படி பட்டவுடன் இப்போ தமிழின அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டு டகுல் பாச்சா காட்டுகிறார் – அதையும் ஒழுங்கா செய்யாம சொதப்பல் வேறு – வேணும்னா டகுல் பாச்சா காட்டுவது எப்படி என்று சீனியர் ராமதாஸான கருணா(நிதி)விடம் போய்ஜூனியர் கருணா(நிதி)யாகத் துடிக்கும் ராமதாஸ் ட்யூஷன் கற்றுக் கொள்ளலாம்.

ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்குவார்களாம். எதுக்கு……?

இன்னிக்கு காங்கிரஸ் காலை நக்குவதில் இருந்து முன்னேறி இன்னொருத்தன் காலை நக்குவதற்கா? இந்திய ஓட்டரசியல் சட்டகத்திற்குள் நின்று கொண்டு எந்தக் கொம்பனாக இருந்தாலும் ஈழ விடுதலைக்காக ஒரு மயிரையும் புடுங்கி விட முடியாது. ஈழ விடுதலை என்றில்லை இந்தப் பிராந்தியத்தில் நிகழும் எந்த இன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்..

சேஞ்சு சேஞ்சுன்னு ஓபாமா கணக்கா பிளிர்ராங்களே… அப்படி அந்த ஓட்டரசியலின் லிமிட்டேசன் என்னவென்பது தமிழகத்தில் பாயில் சுச்சா போகும் சுள்ளான் கூட சொல்லி விடுவான்.. தி.மு.க ஏற்கனவே வெளக்கெண்ணையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கிறது… இலங்கைக்கு ஆயுத உதவி செய்வது மத்திய அரசின் உரிமை அதையெல்லாம் நம்மாளே கேட்க முடியாதுன்னு சொல்லியாச்சு….. மனித சங்கிலி, ஆட்டு சங்கிலி, மாட்டு சங்கிலி, குரங்கு சங்கிலின்னு கலைஞர் கைவசம் ஏகப்பட்ட ஐடியா இருக்கு.. முழுமையான தரகுவர்க்க கட்சியாகிவிட்ட தி.மு,க இந்தப் போரில் இந்திய ஆளும் தரகு வர்க்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு மாறாக வாயைத் திறக்கக் கூட முடியாது.

காங்கிரசுக்கும் அ.தி.மு.கவுக்கும் தமிழன் செத்தா சந்தோஷம்; அவன் ஈழத்தமிழனா இருந்தாலும் சரி தமிழகத் தமிழனா இருந்தாலும் சரி. பாமக யோக்கியதை என்னான்னு இன்னொரு தடவ சொல்லத் தேவையில்லை… திருமா ஏதோ பிட்டு போட்டு பாக்கறாரு… ஆனா, தமிழ்நாட்டின் பரம்பரை வழக்கமான தி.மு.க vs அ.தி.முக என்ற தேர்தல் கள நிலைமையை ஒத்துதான் திருமாவின் அரசியல் அமையும். தனியே ஈழத்தை முன்னிட்டு ஒரு கூட்டனி அமைவதற்கான லேசான அறிகுறி கூட இல்லை. வழமை போலவே கூட்டனிக் கணக்குகள் அமைந்து விட்டால்….? அவரும் வைக்கோவைப் போல – அதாவது காயடிக்கப்பட்ட நாயைப் போல – அம்மா கிட்டயோ அய்யா கிட்டயோ அப்ரூவல் வாங்கிட்டுத் தான் மேற்கொண்டு பேசவே முடியும்…

தே.மு.தி.க? இந்தத் தேர்தலுக்கு அப்புறம் விஜயகாந்து சூட்டிங்ல பிஸியாய்டுவார் – இப்பவே கதை கேட்க ஆரம்பித்து விட்டதாக கேள்வி.. ப்ரொடியூசர் கெடைக்கலீன்னா கலைஞர் டீவி மெகா சீரியல்ல அப்பா வேசம் குடுக்கறதா அழகிரி சொல்லியிருக்காரம் !

ச.ம.க ? 1977 ரிலீஸ்

வக்காளி… விஜயகாந்து சரத்துகுமாரெல்லாம் அரசியல்வாதி… இந்த கேவல நிலை தான் இந்திய தேர்தல் அரசியல் வந்து சேர்ந்திருக்கும் நிலை.

அப்புறம் ஒரு ஜோடி தோலாந்துருத்திக இருக்கானுங்க. அதுல ஒன்னு சி.பி.எம் இன்னொன்னு சி.பி.ஐ. மொதல் ஆளு ஜெயா மாமி வீட்டு டாய்லெட்ல அடைப்பை எடுக்க போயிக்கான்.. அடுத்தாளு அவிங்க தோட்டத்துக்கு தண்ணி காட்டப் போயிருக்கான்.. அவ்வளவு தான்

இதெல்லாம் ஒன்னும் வெளங்காது..

சரி…. ஒரு வாதத்துக்காக ஈழ விடுதலையை அங்கீகரிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி கட்டி தேர்தலை வென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்து விடுவார்கள்? சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவார்கள் – அவ்வளவு தான் முடியும்! அவ்வளவுக்கு தான் உரிமை இருக்கிறது. சரி அப்படியே தில்லா மைய்ய அரசுக்கு விரோதமாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டே மக்களை அணி திரட்டினால் – ஆட்சியைக் கலைப்பான் – இல்லேன்னா ராணுவத்தை அனுப்பி நொங்கைக் கழட்டுவான். இங்கே இருக்கும் தேர்தல் அரசியல் என்பது மக்களை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியாத விதிகளைக் கொண்டிருக்கிறது – அப்படியே வருந்திக் கூப்பிட்டாலும் மக்கள் கிட்டே
நெருங்க முடியாத அளவுக்கு ஜனநாயகமற்று இருக்கிறது.. எனவே அப்படியான ஒரு நெருக்கடி மத்தியிலிருந்து ஏவிவிடப்படும் போது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கும் கட்சிகளின் டப்பா டான்ஸாடி விடும்.

இன்னிக்குத் தேதியில் தமிழகத்தில் பரவலாக மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்… ஈழத்திலிருந்து வரும் ஒவ்வொரு செய்தியும் இங்குள்ள தமிழனின் உள்ளத்தை பதறச் செய்து கொண்டிருக்கிறது… அங்கே மக்கள் படும் பாடு நம் உள்ளத்தை குத்திக் கிழிக்கிறது… இந்த உணர்வுகளை அரசியல்படுத்த வேண்டும் ( அரசியல்படுத்த வேண்டும் வோட்டுப்படுத்தக் கூடாது) தமிழக மக்களின் அரசியல் எழுச்சி இந்தியக் கட்டமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்னும் நிலை வந்தால் தான் அங்கே போர் நிற்கும். ஆனால் மேற்சொன்ன வலைத்தளமாகட்டும், இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் களத்திலிறங்கியிருக்கும் ஓட்டுக்கட்சிகளாகட்டும் இதை எப்படி தமது கட்சிக்கு சாதகமான ஓட்டுக்களாக கன்வெர்ட் செய்வது
என்பதிலே தான் குறியாக இருக்கிறார்கள்.

ஆனானப்பட்ட கருணாநிதியே இத்தனை வருச தேர்தல் அரசியலுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் நிலை இந்தப் பரிதாபகரமான நிலைதான் என்னும் போது.. அரசியலில் பல பழங்களைத் தின்று பல கொட்டைகளையும் சில ***ட்டைகளையும் போட்டவரே இன்றைக்கு சாத்திக்கிட்டு ஓக்காந்திருக்கும் போது… வேறு எவராலும் இந்த தேர்தல் அரசியல் பாதையில் மக்களைத் திரட்டவோ – அதன் மூலம் மைய்ய அரசைப் பணிய வைக்கவோ – அதன்மூலம் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவரவோ – இந்தியாவையும் இலங்கையையும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வைக்கவோ – முடியாது.

மக்கள் எழுச்சியை தேர்தல் அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் இட்டுச் செல்வது என்பது இவ்வெழுச்சிக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகவே முடியும்.

மார்ச் 3, 2009 Posted by | politics | | 1 பின்னூட்டம்

பார்ப்பனியத்தின் இருப்பு!!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்
திரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்
செய்யப் போறானுகளா? அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத
“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..
வினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

அந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ –

1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்!!

2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

பிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்
இருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,

1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன? தப்பு தப்பு தான் சார்

2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில
இடங்களில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3) என்னாது…??? வன்முறைக்கு தீர்வு வன்முறையா? என்னவொரு சாடிசம்? – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.

பொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன
நடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க? நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்
சிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்
சாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.

அந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு
தலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்?” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.
அப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ? தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்
தலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா? பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்
குவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ
மவுனமாய்த் தானே இருந்தாய்? – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..

நேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று
இவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்?” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது
ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்?” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து
உட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு
வந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
விழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.

“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்?” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக
ஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.
மேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது? கிராமங்களில் தலித்துகளின் சேரி
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த
முயன்றிருக்கலாமே?

ஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்
மாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்
இன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

சமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா?” என்ற ரீதியில்,
“என்னாது சாதி இருக்கா? அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா? என்ன கொடுமை சார்?” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி
விட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை
மூலதனமாகக் கொண்டு மீண்டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்
காரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன?

இந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே –

1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்!

2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்!

நவம்பர் 21, 2008 Posted by | Alppaigal, medias, politics | | 4 பின்னூட்டங்கள்

%d bloggers like this: