கார்க்கியின் பார்வையில்

பொறுக்கித்தனம் a.k.a பின்னவீனத்துவ அறம்…!

முதலில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந்தனியாளாக நின்று தன் மேல் திட்டமிட்ட ரீதியில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளையும், பாலியல் தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றி கொண்டு வரும் தோழர் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தமான தகவல்களை முழுமையாக இல்லாவிட்டாலும் துண்டு துக்கடாவாக அவ்வப்போது கேள்விப் பட்டிருந்தும் எதிர்விணையாற்றாமல் வெறும் பார்வையாளனாகவே இருந்து விட்ட தடித்தனத்திற்காக சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்கிறேன். இணையத்தை பாவிப்பது சமீப வருடங்களில் மிகவும் குறைந்து விட்டது என்பதை இதற்கான சமாதானமாக அல்லாமல் ஒரு தகவலுக்காக மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த 15ம் தேதியன்று கீற்று தளத்தில் தோழர் மினர்வா எழுதிய பதிவையும் அதைத் தொடர்ந்து தோழர் தமிழச்சி அவர்கள் எழுதிய பதிவையும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய பின் வாசித்த போது தான் ஒரு தொகுப்பாக இவ்விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. விவகாரம் இன்னதென்று மறுபடியும் ஒருமுறை இங்கே விலாவாரியாக விவரித்து எழுதும் உத்தேசம் எனக்கு இல்லை. அவை இணையம் முழுக்க அனைவரும் வாசிக்கக் கிடைக்கிறது. குறிப்பாக தோழர் தமிழச்சியின் பதிவுகளிலும் கீற்றிலும் வாசிக்கக் கிடைக்கும் கட்டுரைகளை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

இந்த விஷயத்தைப் பொருத்தளவில் நகரப் பேருந்துகளில் புட்டங்களைத் தேடியலையும் ஒரு நாலாந்தர பொறுக்கியைப் போல் நடந்து கொண்டிருக்கும் சோபாசக்தியை விட அவனை ஆதரித்து இணையத்தில் பேசி வரும் பெண்ணுரிமை_பின்னவீனத்துவ_பெரியாரிய புடுங்கிகள் தான் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்துகிறார்கள்.

மனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவங்களை நமக்கு அளித்துச் சென்ற ஆசான்களை இழிவு படுத்திக் கவிதை எழுதிய கவிதாயினியிடம் கவியின் பொருளை விளக்கச் சொல்லிக் கோரியதையே பெண்ணுரிமைக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய ஆபத்தாக ஊதிப் பெருக்கி இணையத்தில் சாமியாடிய இந்த பீ.ந வாதிகளும் இன்ஸ்டன்ட் பெண்ணுரிமைப் போராளிகளும் இன்று சோபாசக்தி அவுத்துப் போட்ட கிழிந்த ஜட்டியில் முகம் பொத்தி நிற்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

இலக்கியம், பெண்ணுரிமை, பின்னவீனம் என்று பல்வேறு முகம் காட்டி வந்தாலும் தனது வயிற்றுப் பிழைப்புக்கு சோபாசக்தி எனப்படும் இந்தப் பொறுக்கி நாய் புலியெதிர்ப்பையே கைக் கொண்டிருந்தது. கை நிறைய உழைக்காமல் கிடைத்த காசு; பெரும் அரசாங்கங்களின் உளவு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு; அது கொடுக்கும் திமிரும் கொழுப்பும்; சதா நேரமும் குடி. இதெல்லாம் சேர்ந்து அவரது இச்சைகளுக்கு எவளையும் வளைத்து விடலாம் என்கிற மைனர் மனோபாவத்தைக் கொடுத்திருக்கலாம்.

மைனர்களின் எத்து வேலைகளுக்கும் சித்து விளையாட்டுகளுக்கும் மயங்கி விட தோழர் ஒன்றும் உலகின் அழகிய முதல் பெண்ணில்லையே. நெருப்பென்று அறியாமல் நெருங்கிய மைனரின் பிடறியில் மிதித்துத் துரத்தியடித்துள்ளார் தோழர் தமிழச்சி. பிரான்சின் இரயில்வே நிலையம் அருகே நடந்தேறிய அந்தக் காட்சிகளைப் பெரியார் உயிரோடிருந்து கண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக தோழர் தமிழச்சி மேற்படி மைனரும் ஈழத்துப் பிள்ளைப் பெருந்தகையுமான சோபாசக்தியின் இந்த இழிசெயலை பகிரங்கமாக அம்பலப்படுத்தி எழுதிய பின்னும் அவனோடு ஒரு நல்லுறவைப் பேணுவதில் இங்குள்ள சில ‘உலகின் அழகிய முதல் கவிதாயினிகளும்’ அந்தோனியாரின் பக்தர்களும் எந்த வெட்கமும் அடையவில்லை.

எத்தனையோ ஆண்டுகளாக பெரியாரிஸ்டு வேடம் புனைந்து இணையவெளிகளில் மிதந்து கொண்டிருக்கும் சுகுணா திவாகர் பிள்ளைவாள் கூட சோபாசக்தி பிள்ளைவாளின் இந்தச் செயல்களைக் கண்டிக்காமல் மௌனம் காத்திருப்பதை என்னவென்று சொல்லலாம்? ‘சாதிபுத்தி’ என்று சொல்லலாமா?

சுகுணா, உங்கள் மேல் இன்னமும் கொஞ்சமே கொஞ்சம் மரியாதை மீதமிருக்கிறது. பார்ப்பனியவாதிகளோடு இணையத்தில் நீங்கள் சமரசமின்றி மோதிய அந்த நாட்கள் நினைவிலாடுகிறது. ஆனால் இன்று நீங்கள் காக்கும் இந்த மௌனம் மீதமிருக்கும் அந்த மரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து வருகிறது. இதே ‘சாதிபுத்தி’ எனும் குற்றச்சாட்டை வளர்மதி உங்கள் மேல் வைத்தபோது அவர் மேல் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால், இன்றோ வளர்மதியின் வார்த்தைகள் உண்மையாய் இருப்பதற்கான சாத்தியங்களை உங்கள் மௌனம் மெய்ப்பிக்கிறது. உங்கள் மேல் இங்கே நான் வைத்திருக்கும் கடுமையான வார்த்தைகளை மிகுந்த வருத்தத்தோடே எழுதுகிறேன்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் இக்ஸா அரங்கில் கூடிக் கும்மியடித்த பெண்ணுரிமைப் போராளிகள் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்? Cocktail சீமாட்டிகளினதும், கூட்டுக்கலவிக்கு உடன்படும் சீமாட்டிகளினதும் கெட்டவார்த்தைக் கவிதையால் கார்ல் மார்க்சை ஏசும் அல்பைகளினதும் உரிமை மட்டும் தான் பெண்ணுரிமையா? பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்று நினைக்கும் பெரியாரியப் பெண் தோழரின் உரிமை பெண்ணுரிமையில் சேர்த்தியில்லையா? தனது இச்சைகளுக்கு உடன்பட மறுத்து செருப்பால் அடித்துத் துரத்திய அந்தப் பெண் தோழரை இழிவு படுத்தும் விதமாக ‘நான் அவளோடு படுத்தேன்’ என்று பச்சையாக புளுகியிருக்கிறான் ஒரு பொறுக்கி நாய். அதற்கு நாலைந்து மலப்புழுக்கள் ஆதரவு தெரிவித்து பிண்ணூட்டமிட்டுள்ளனர். இதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் பின்னவீனத்துவ அறமா?

இவர்கள் போற்றும் பெண்ணுரிமை என்பது ஷக்கீலா படம் பார்க்கும் வாலிப வயோதிப அன்பர்கள் அது போன்ற திரைப்படங்களுக்குத் தடையேற்படும் போது கோரும் உரிமைக்கு ஒப்பானது என்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளனர். இந்த வாலிப வயோதிப அன்பர்கள் பட்டியலில் அந்தோனிசாமி மார்க்ஸ் போன்ற ரெண்டு பொண்டாட்டிக்கார மைணர்கள் இருப்பது கூட ஆச்சர்யமில்லை; சுகுணா திவாகர் போன்ற அக்மார்க் முத்திரை பெற்ற பெரியாரிஸ்டுகளும் இருப்பது தான் எமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பொதுவெளியில் செயல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சோபா எழுப்பியிருக்கும் இந்தக் கீழ்தரமான குற்றச்சாட்டின் பின்னேயுள்ள மைணர் மனோபாவத்தைக் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் கணித விஞ்ஞானி ரோசாவசந்த், சோபாவின் வக்கிர வார்த்தைகள் ‘நேர்மையுடனும் கம்பீரத்துடனும்’ இருக்கிறது என்று சான்றளித்துள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் சாட்சியமும் இல்லாத நிலையிலும், இந்தக் குற்றச்சாட்டை அதில் சம்பந்தப்பட்ட தோழர் தமிழச்சியே மறுத்துள்ள நிலையிலும், கடந்த மூன்றாண்டுகளாகவே சோபாவின் அத்துமீறலைப் பற்றியும் செருப்பால் அடித்தது பற்றியும் அவர் தொடர்ந்து எழுதிவந்துள்ள நிலையிலும் இப்படி ஆபாசமாகப் பேசுபவனை என்னவென்று அழைக்கலாம்? சுரேஷ் கண்ணனைக் கேட்டால் ‘மலப்புழு’ என்றழைக்கலாம் என்று சொல்வாராயிருக்கும்.

இது தான் இவர்களின் அறம். அதாவது செலக்டிவ் அறம். மேட்டுக்குடி சிந்தனைகள் கொண்ட சீமாட்டிகளுக்கும் அலுக்கோசுகளுக்கும் ப்ரீசெக்ஸ் பேசும் பெண்களுக்கும் ஆதரவான அறம். பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது. தமது பாலியல் இச்சைகளுக்கும் வக்கிரங்களுக்கும் இசைவான பெண்களின் ‘உரிமை’ என்று பேசும் இவர்களுக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணுடலை ஒரு நுகர்வுப் பண்டமாக அனுபவிக்கப் போட்டுக் கொள்ளும் ஒரு தத்துவ முகமூடி தான் பாலியல் விடுதலை, பின்னவீனம், இத்யாதி இத்யாதி எல்லாம்..

இக்ஸா அரங்கின் நாயகியான கவிதாயினி போன்றவர்கள் இவர்களுடைய உலகின் காபரே தேவதைகள். அந்த ஆபாச ஆட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கியதும் இவர்கள் என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்கள்? இன்று அதே கும்பலில் ஒரு பொறுக்கிப் பயல் போகிற போக்கில் பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எந்த அடிப்படையும் இல்லாமல் புளுகியதைக் கண்டும் காணாமல் போவது தான் இவர்களின் பின்னவீனத்துவ அறம். ப்ரான்ஸ் தேசத்துப் பொறுக்கி தோழர் தமிழச்சி குறித்து சொன்னது போல இவர்கள் வீட்டுப் பெண்கள் குறித்து எவராது பேசியிருந்தால் இவர்கள் அவனையும் ஒரு மனிதனாக மதித்து பேட்டி கண்டு வெளியிடுவார்களா என்று தெரியவில்லை. பாலியல் விடுதலை என்பதெல்லாம் ஊரார் வீட்டுப் பெண்களுக்கு மட்டுமா அல்லது இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் தானா என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தி விடலாம்.

தோழர் தமிழச்சியின் எதிர்விணை – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263

தோழர் மினர்வாவின் பதிவு – http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264

|| கார்க்கி ||

பிப்ரவரி 21, 2011 - Posted by | Alppaigal, சாதி வெறி, பதிவர் வட்டம், போலி கருத்துரிமை | ,

9 பின்னூட்டங்கள் »

  1. இது குறித்து படித்தறிந்த போது எவரும் இதனை கண்டிக்கவில்லையே என்ற வேதனையும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வேதனையும் கொண்டேன். உங்கள் கட்டுரை சாட்டையடியாய் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி

    பின்னூட்டம் by baskar | பிப்ரவரி 21, 2011 | மறுமொழி

  2. http://powrnamy.blogspot.com

    பின்னூட்டம் by nilavu | பிப்ரவரி 21, 2011 | மறுமொழி

  3. எனக்கு விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் ஆனா கருத்துக்கு அளவுகோல் இல்லையா !!!!! சோபாசக்தியை புரந்தள்ளவும் ….

    பின்னூட்டம் by anbu | பிப்ரவரி 21, 2011 | மறுமொழி

  4. பொதுவெளிகளில் பெண்குறிக்கு ஆசைப்படும் ஆண்குறிகளும்,ஆண்குறிகளுக்கு ஆசைப்படும் பெண்குறிகளின் பின்நவீனத்துவ அறம் அப்படித்தானிருக்கும் நண்பரே!பின்நவீனத்துவமும் ,பெண்ணியமும் குறிகளில்தான் குடிகொண்டிருக்கிறது போலும்!

    பின்னூட்டம் by படைப்பாளி | பிப்ரவரி 21, 2011 | மறுமொழி

  5. சோபாசக்தியின் பொறுக்கித்தனம் மீது : இணங்கிய பின்னும், வன்முறையாக உணருதல் கூட ஆணாதிக்கத்துக்கு எதிரானது

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7741:2011-02-21-121458&catid=343:2011

    பின்னூட்டம் by tamilcircle.net | பிப்ரவரி 22, 2011 | மறுமொழி

  6. i realy wanna have a coherent argument abt this matter.. can i have a contact mail id from u?
    thank u

    பின்னூட்டம் by Anupama Jeyakumar | மார்ச் 4, 2011 | மறுமொழி

  7. பெண்களுக்கான பாலியல் விடுதலை என்று இவர்கள் பேசுவதெல்லாம் காபரே நடனம் ஆட காபரே டான்சருக்கு இருக்கும் உரிமை குறித்து காபரே ரசிகன் பேசுவதைப் போன்றது

    adada arumai
    kootu kalavithaan penn urimai suthanthiram endral

    soba sakthiyil vettu pengalai en padukkai araikku kootaaga varaverkiren antha suthanthirathi naan avargalukku vazhangukiren……..

    பின்னூட்டம் by raaman krishan | மார்ச் 6, 2011 | மறுமொழி

  8. regarding with this matter a post published in my website:marubadiyumpookkum.wordpress.com also. we are having similarities in writing and having same opinion. thank u sir. vanakkam.

    பின்னூட்டம் by kavignarThanigai. | மே 1, 2011 | மறுமொழி

  9. கடந்த ஐந்து வருடங்களாக பள்ளி இன்றி சிறுநெசலூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை எழுத்தறிவற்ற தற்குறிகளாக ஆக்கிய அரசை எதிர்த்து விருத்தாசலம் பகுதி வி வி மு,போரட்டகுழுவை கட்டமைத்து , மக்களை அணிதிரட்டி போர்குனமுள்ள போராட்டத்தை நடத்தியது. . இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, மக்களின் அடுத்தகட்ட போராட்டங்கள் அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுத்தகூடிய நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு முன்னனியாளர்களின் மீது பொய்வழக்கு போட்டு போராடத்தை முடக்கவும், அதன் மூலம் மக்களிடம் பயஉணர்வை ஏற்படுத்தி போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைகளையும் அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னெடுக்கவும், போராடத்தின் நோக்கமான பள்ளி கட்டிடத்தை மாணவர்களுக்கு பெற்றுத்தரவும் தொடர்ச்சியாக மக்களிடமும், ஊடகங்களின் துணையுடன் அணைத்து மக்களையும் சென்றடைந்து போராட்டத்திற்கு ஆதரவை போராட்ட குழு திரட்டி வருகிறது. இதன் ஒரு அங்கமாக இணையங்களில் உள்ள ஜனநாயக சக்திகளிடமும் இந்த போராட்ட செய்திகளை பிரசுரம் செய்யுமாறு வேண்டுவதன் மூலம் மக்களிடம் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நண்பர்களும், தோழர்களும் இந்த கட்டுரையை தங்களின் தளங்களில் வெளியிட்டு மக்களை சென்றடையும் முயற்சியில் உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

    http://suraavali.blogspot.com/2011/06/blog-post_22.html

    நன்றிகளுடன்

    போராட்ட குழு
    சிறுநெசலூர்

    பின்னூட்டம் by baskar | ஜூன் 22, 2011 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: