எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!
சனிக்கிழமை மாலை நன்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்ற நேரமாகப் பார்த்து மொத்த குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எகிறிக் குதித்து விடும் கொலைவெறியோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவே நானும் ஆர்வத்தோடு என்ன நிகழ்ச்சி என்று கவனிக்க ஆரம்பித்தேன். அது எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நடிகை “ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் படையோடு வந்து கேதாரத்தைக் வென்றனர் தமிழர்கள்; இப்போது மீண்டும் மனங்களை வெல்ல எந்திரனாக வந்துள்ளனர்” என்று ஏதேதோ பில்டப் கொடுத்து நிகழ்ச்சியை இனிதே ஆரம்பித்தார்.
தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர்களும் இன்னபிற அல்லுசில்லுகளும் தமக்கு பெரிய நகம் இருப்பதையும் சொரிந்து விடுவதில் தமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியவாறே இருந்தனர். பெரும்பாலும் எல்லோரது பேசு பொருளின் நாயகனும் மேடையின் கீழே பத்தாயிரம் வருடம் வாழ்ந்து வரும் இமயமலை பாபாவிடம் கற்றுக் கொண்ட மோன தவத்தில் அமர்ந்திருந்த ரஜினி தான் என்பதை இங்கே குறிப்பிடத்தேவயில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கிழண்டு போன காலத்தில் நடித்த திரைப்படங்களில் தமது சூப்பர் பவர் இமேஜையோ நடிப்புத் திறமையையோ நம்பியதை விட அன்றைக்கு புதிதாய் திரையுலகிற்கு வந்த இளவயது நாயகிகளின் தொடையையும் மார்பையுமே நம்பியிருந்த அதே அவலமான நிலைக்கு ரஜினி காந்தும் வந்து விட்டதை அவ்வப்போது காட்டிய டிரெய்லர் காட்சிகளில் உணர முடிந்தது.
ரஜினியின் வழக்கமான உத்திகளான அரசியல் கண்ணாமூச்சி, பஞ்சு டயலாக் சவடால், தலையைச் சொரியும் கிறுக்குத்தனங்கள் போன்றவை இனிமேல் தனது இரசிகர்களிடம் செல்ப் எடுக்காது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். பாபா பட வெளியீட்டு சமயத்தில் ஓவர் டோ சாகிப் போன ஆன்மீகவாதி வேடமும் எருமைக்கு பவுடர் அப்பிய கதையாக பல்லிளிக்க ஆரம்பித்து விட்டதால் அவரது இப்போதைய நம்பிக்கை ஓவர் பில்டப்பும் ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களும் தான். ஷங்கரும் லேசுபட்டவரல்ல.. கம்யூட்டரையே சோசியக் கிளியாக்கி விட்ட மக்கள் கூட்டம் தான் தனது டார்கெட் ஆடியன்ஸ் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். தொப்பையின் படம் வரைவது, தார் ரோட்டில் பட்டுப்புடவை டிசைன் வரைவது போன்ற உயர்ரக கலாரசனை கொண்டவர். அவரது மூளையில் உதிக்கும் இது போன்ற புதுமையான கற்பனைகளுக்கெல்லாம் கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் துணை இருக்கும் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன.
இந்தப்படம் இயந்திர மனிதன் சம்பந்தப்பட்டது என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலமும் முன்னோட்டக் காட்சிகளின் மூலமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹாலிவுட் திரைப்படங்களோடு போட்டியிடும் திறமை கொண்டவர் என்று போற்றப்படும் ஷங்கரும், கிழண்டு ஓய்ந்து போன ரஜினியின் இன்றைய பரிதாப நிலையையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயமாக உலக அழகியோடு ரோபாட் போடும் குத்து டான்சு ஒன்று படத்தில் இடம் பெரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய தேதியில் அஜித் விஜய் போன்ற லுச்சா பயல்களே திரையில் தமது காதலியைப் பார்த்து “நான் நடந்தா அதிரடி, நான் ஆய் போகலைன்னா குசு வெடி” என்று காதல் மொழி பேசும் போது, வைரமுத்து போன்ற வார்த்தை வியாபாரியையும், ஹாலிவுட்டிலேயே தேங்காய் மூடிக் கச்சேரி நடத்தி வந்திருக்கும் ரகுமான் போன்ற ஹைடெக் பாகவதரையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? “இவன் பேர் சொன்னதும் நிலவும் தரைதட்டும், அடி அழகே உலகழகே இவன் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்” என்கிற காதல் ரசம் சொட்டும் இலக்கியத்தரமான கவிதை வரிகளைக் கேட்க முடிந்தது.
ரொம்ப காசு கொழுப்பு இருக்கிறவனெல்லாம் காதலியைக் கொஞ்சும் போது கூட பில்டப்போட தான் கொஞ்சுவானுக போலிருக்கு. பாவம் அந்தக் காதலிகள். கர்த்தாவே நீர் அவர்களுக்காகவும் மனமிரங்கும்.
விடாது கறுப்பு…!
எல்லா சொரிஞ்ஞர்களும் சொரிந்து முடிந்த பின் கடைசியாக தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். ஒரே கல்லில் அதிகபட்சம் எத்தனை மாங்காய் அடிக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கமாகக் காட்டினார். பேரனின் சன்பிக்சர்ஸ் செய்து வரும் செம்மொழிச் சேவையை பாராட்ட வேண்டும், ரஜினியைப் புகழ்ந்து அவரது ரசிகர்களை கவர் செய்ய வேண்டும், ரகுமானைப் புகழ்ந்து அவரது ரசிகர்களையும் கவர வேண்டும், மொத்தமாக தமிழர்களுக்கு குச்சி ஐஸ் விற்க வேண்டும், இத்தனையையும் தாண்டி திராவிட இயக்கத்தின் சமீப காலத்திய அரசியல் பண்பாட்டின் படி ‘கல்யாண வூட்லயும்…..; எளவூட்லயும்…..’ எனும் தத்துவத்தை நிலைநாட்டியாக வேண்டும். ஒரே பந்தில் நாலு சிக்ஸர் அடிக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் தான் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினார்.
ஆரம்ப வாக்கியத்திலேயே அவர் மற்ற சொரிஞ்ஞர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதையும் தான் அகம் புறம் எனும் இலக்கிய எல்லைகளில் கரைகண்டவர் என்பதையும் நிறுவிக் காட்டிவிட்டார். புறத்தில் சொரியும் அதே நேரத்தில் அகத்தையும் சொரிந்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அண்ணாவின் இதயத்திடம் இளவல் கற்றுக் கொண்ட அரசியல் ட்யூஷன். புரியும் விதமாகச் சொன்னால் ஒரே நேரத்தில் அடுத்தவனைப் பாராட்டியது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னையே பாராட்டிக் கொண்டது போலவும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவர் வீசிய கூக்ளி கீழ்கண்ட விதமாக வெளிப்பட்டு தமிழர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தது – “ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் நான் எந்திரன் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
“தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் மலேசியாவுக்குப் போய் ஒளிந்து கொண்டால் மட்டும் நான் சும்மா விட்டு விடுவேனா அங்கேயும் வந்து ஆட்டையைக் கலைப்பேன்..” என்பது போல் இருந்தது அவர் தொடர்ந்து சொன்ன வாழ்த்துச் செய்தி. ஏற்கனவே அந்த அரங்கில் மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்திருக்கும்; ஆனாலும் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபா கற்றுக் கொடுத்த யோக சாதனைகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார். கஞ்சாவுக்கு இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது எனும் பேருண்மை முந்தாநேற்று தான் எனது சிறு மூளைக்கே எட்டியது.
எல்லோரும் கண்டிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.
படத்தின் பட்ஜெட் நூற்றம்பது கோடி என்றார்கள் சிலர். இருநூறு கோடி என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளையின் மதிப்பு அத்துனையென்றால் கறுப்பின் மதிப்பு எத்தனை இருக்கும் என்பதை யோசித்தால் லேசாகக் கிறுகிறுப்பே ஏற்படுகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட்டிற்கு கோலிவுட் விடுத்துள்ள சவால் தான். ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஏப்பை சாப்பைகளெல்லாம் ஷங்கரின் தொழில்நுட்ப அறிவுக்கு முன் இனி பிச்சையெடுக்க வேண்டியது தான். இல்லையா பின்னே நவீன தொழில் நுட்பத்தை வைத்து அவனெல்லாம் பண்டோரா கிரகத்தை தான் உருவாக்கினான் – நம்மாளுக மாதிரி (எந்திரன்) சிட்டி டான்ஸ் எடுக்க முடியுமா? தொப்பைல அந்த தொங்கிப் போன சொங்கியோட மூஞ்சியத்தான் வரைய முடியுமா? என்ன ஒரே குறைன்னா… இந்த விஷயத்துல ஷங்கர் தனது முன்னோடியான இராம. நாராயணனுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்திருக்கலாம். என்ன
இருந்தாலும் அம்மனையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் குத்து டான்ஸ் ஆட விட்டு ஷங்கருக்கே இந்த விசயத்தில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பது அவர் தானே.
இந்தியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான ஏழைகளின் எண்ணிக்கைப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து இந்தியர்களை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள நமது அரசு,
இன்னொரு பக்கம் சீனாவோடு வல்லரசு போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நமது திரைக்கலைஞர்களோ சீனா போன்ற அல்லுசில்லுகளோடு மோதாமல் டைரக்டாக அமெரிக்க
ஹாலிவுட்டின் மீதே தமது தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்தப் புனிதமான புனிதப்போரில் ஈடுபட்டுள்ள நமது கலைஞர் பெருமக்களுக்கு நாம் நமது ஆதரவை நல்க வேண்டியது நமக்கான வரலாற்றுக் கடமையாகிறது. எப்படிப் பார்த்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு ரஜினியின் ரசிகக்கோமுட்டிகளே இந்தத் திருப்பணியை பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றி விடுவார்கள். ஆனாலும் நூற்றுக்கணக்கான கோடிகளை பிக்பாக்கெட் அடிக்க ஒருவாரமும் ஊருக்குப் பத்து கோமுட்டிப்பயல்களும் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை.
அவர்கள் வருவார்கள். நம்மிடம் வருவார்கள். ஏன்னா தமிழன் நெத்தியில் தானே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அவர்களை நமது வீட்டுக்கே கூட்டி வருவதை விட இலவசமாக் கொடுத்த
டீ.விக்கு வேறு என்ன புடுங்குற வேலை இருக்க முடியும்? நமது ஆதரவை எதிர்பார்த்து நமது வீடுகளுக்கே வரும் அவர்களை நாம் செமத்தையாக ஆதரித்து விடுவோம். நாம் ஆதரிக்கும்
ஆதரிப்பில் இன்னும் ஒரு பத்து வருசத்துக்காவது இந்த படத்தின் சாதனை முறியடிக்கப் பட முடியாததாக இருக்க வேண்டும். வேற எவனுக்கும் இப்படி இருநூறு கோடியில் படம் எடுக்க தில்லு வரவே கூடாது.
எனவே மக்களே.. இப்படி பெரும் பொருட் செலவில் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பை – திரைக் காவியத்தை – திரை ஓவியத்தை நாம்
கட்டாயமாகப் பார்த்து நமது பர்மா பஜார் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து யாரும் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே காசு கொடுத்து வாங்குங்கள் – ஏனென்றால் Piracy kills என்று திரைத்துறை ஜாம்பவான்களே சொல்கிறார்கள். பர்மா பஜார் வியாபாரிகள் ஏற்கனவே பாவம் கடும் தொழில் நசிவையும் காவல்துறை அடக்குமுறையையும் மீறி மக்களுக்காக இப்படி கலைச்சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்..!
எந்திரன்…. ஆபாசக் கவுண்ட்Down Starts…. 1,2,3
உங்களது உள்ளடக்கம்…இந்த அபத்தவாதிகளின் மீதான அருவருப்பு..அவ்வப்பொழுது சிரிப்பை வரவழைக்கும் உங்களது நையாண்டி.. சரளமாக கொட்டும் மொழி வளமை…உங்களைப்போன்ற ஒருவர்தான் இப்படியான சவுக்கடியை தரமுடியும்… தொடர்ந்து எழுதுங்கள்.. என்னைப்போன்ற ஒரு தீவிர வாசகன் (ர்கள்) தங்களது கனல் தெறிக்கும் கட்டுரையை வாசிக்க காத்திருக்கிறோம்
vaazhthukkal kaargi…thodarndhu ezhuthungal.. yetho sila naaigal asingama pesuthu…. athai kandukkama neenga unga thairiyaamaana paarvaiyai velipaduthungal… ennai pontra nanbargal ungal pinnal….. by vendhan
எந்திரனின் ஆடியோ ரிலீஸே இவ்வளவு டென்சன் பண்ணுது! பதிவு சிறப்பு!
ஆனால், வடிவத்தில்… பதிவில் நீங்களே நிறைய திட்டுகிறீர்கள்! அது நாங்களாக திட்டுவதை நிறைய குறைத்துவிடுகிறது! 🙂
ஆகையால், செய்திகளோடு, கருத்துகளோடு பதிவிடுங்கள். உங்களுக்கு கோபம் நிறைய வருகிறது. கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்!
ஐயா கார்க்கி அவர்களே பிரிச்சு மேஞ்சுடீங்க போங்க……. உண்மையா சொன்னா இவ்ளோ செலவு பண்ணி படம் எடுத்து நமக்கு எல்லாம் என்ன வர போகுது? வீனா செலவு தான்……. அதையும் புரிஞ்சுக்காம இருக்காங்க நம்ம மக்கள்…… ஆங் ரசிகப்பெருமக்கள்…….. இவங்களெல்லாம் எப்டி திருத்துறது? நேதிடியா சொன்னீங்க……… இன்னைல இருந்து நானும் உங்க ரசிகன்……….
மன்னிக்கவும். அப்படியும் ஆதரிக்க எனக்கு மனமில்லை.. எனவே நான் ஒரு நாள் இரவு உறக்கத்தை மட்டும் தியாகம் செய்து, சென்னை டூ காரைக்குடி வண்டியில் படம் பார்த்துக் கொள்கிறேன்.
http://princenrsama.blogspot.com/2007/09/blog-post_08.html
////தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். //
மகா எரிச்சல் வந்தது இதற்குத் தான்.
ஒரு நாட்டோட முதல்வர்?!
ஹூம்…நம்ப முடியாத அக்கிரமம்.
Engayo theeyara vaada varala!!! Fire engine auppava??
ஆமா… நானும் ரஜினியும் அங்காளி பங்காளி பாரு.. பத்திக்கிட்டு வருதாம்ல..
The only problem with you guys is You people didn`t see cinema as cinema.For these two years, the word ENTHIRAN made many magics with me.Even i get 1crore,i`m not sure whether i can feel like this.
Note that i`m ready to give anything for my happiness.
Thats why we are living.If you look into this quote, Its purely a selfish kind.Yes i`m doing for my satisfaction like wat u r doing for such a opposition. So we both are perfect if u got wat i said.
மன்னிக்கவும்…என்னக்கு உங்கள் எழுத்துகள் மீது உடன்பாடு இல்லை….
Cinema is a Business..If someone is investing Rs. ) 100 they will aim for at least 50 rs Profit……i don’t find any wrong in the way Sun pictures are advertising….They have their own channel..so they will advertise their own movie……
If you don’t like this movie…please don’t watch it…
Do you think Tamil nadu will become prosper state if Sun Pictures stops releasing this movie…
Regards
Raj.K
ராஜ்குமார்,
சினிமா என்பது பெட்டிக்கடைத் தொழிலோ இல்லை ஒரு பேக்டரி போன்றதோ அல்ல. அது மக்கள் மத்தியில் ஒரு கருத்தை
விட்டுச் செல்கிறது. உலகில் ஏழைகளையும் பசியால் இறப்பவர்களையும் அதிகம் கொண்டுள்ள ஒரு நாட்டில் இருநூறு முன்னூறு
கோடிகளை அள்ளித் தெளித்து ஆடம்பரத்தைக் காட்டிக் கொண்டிருப்பது எப்பேர்பட்ட ஒரு ஆபாசம்?
இதில் அவர்கள் சம்பாதிக்கும் லாபம் என்பது அப்பாவி ரசிகக் கோமாளிகளிடமும் மக்களிடமும் அடிக்கும் பிக்பாக்கெட் தான். அதுவும்
காட்சி ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்கள் எதைப் பார்க்க வேண்டும் பார்க்கக் கூடாது என்று
ஒரு சில தனிநபர்கள் தீர்மானித்து நம்மேல் தினிக்கும் இது போன்ற குப்பைகளை கடுமையாக அம்பலப்படுத்தி எதிர்த்து முறியடிக்க
வேண்டியது நமது கடமை.
நன்கு படித்த உங்களைப் போன்றவர்களே இப்படி சிந்திப்பது வருத்தமளிக்கிறது
உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் சில பதிவுகள் – கட்டாயமாக வாசித்துப் பாருங்கள்
http://www.vinavu.com/2010/07/22/indian-poverty/
http://www.vinavu.com/2009/09/29/hunger-deaths/
http://www.vinavu.com/2010/05/12/hunger-deaths-children/
http://www.vinavu.com/2008/08/29/eyes/
http://www.vinavu.com/2010/07/29/commonwealth-games-india/
http://www.vinavu.com/2010/03/02/hunger2/
http://www.vinavu.com/2009/11/02/naadu-song/
உங்களுக்கு இதயம் என்பது இருந்தால் – அதில் ஈரம் கொஞ்சமாவது இருந்தால் – மானம் ரோஷம் கோபம் என்பதெல்லாம் இருந்தால் –
நீங்களும் நான் சிந்திப்பதைப் போல் தான் நன்பா சிந்திப்பீர்கள்.
Sir,
கண்டிப்பா அந்த பதிவுகள் படித்து முடித்த உடன் மிகவும் வேதனை அடைந்தனே …..நான் ஒன்றும் க்ல் நெஞ்ச காரன் இல்ல..hunger-deaths-children புள்ளி விவரம் ரொம்ப ரொம்ப கவலை அளிக்க கூடியது……அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று……….உங்கள் நோக்கம் புனிதமானது………மசுற்றாது….hats of to you………….
Basically i like Rajini Kanth very much…..after seeing ur comments on Rajini…i felt you were criticizing him for no reason…..To be more truthful..i didn’t understand your real thoughts behind this article……now i am clear….Even i am going to ignore this type of hyped movies…which is of no use to society..
I truly apologize for my previous comments..
Regards
Raj.K
மிக்க நன்றி ராஜ்,
நானும் உங்களைப் போல் ஒரு காலத்தில் சினிமா ரசிகனாக இருந்திருக்கிறேன். பின் அந்த மாயையில் இருந்து வெளியேறியும்
இருக்கிறேன்.
வினவு தள கட்டுரைகளையும் poar-parai.blogspot.com , மற்றும் எங்கள் தோழர்கள் கட்டுரைகளையும் வாசித்து வாருங்கள்..
எங்கள் தோழர்களின் தளங்களுக்கான லிங்குகள் superlinks.blogspot.com தளத்தில் கிடைக்கும்..
வாழ்த்துக்கள்..
ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா. ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் இருநூறு கோடி போட்டு எடுக்கும் அளவிற்கு, அதை வாங்கும் அளவிற்கும் மக்கள் இங்கு இருக்கின்றார்கள்.
ரகசிகர்களும் இருக்கின்றார்கள்.
ஊருக்குப் பத்து கிறுக்குபய இருக்கத் தானே செய்வான்?
இல்லையே. நீ, வினவு, போர்பரை அப்படீன்னு நாலஞ்சு பேரு தானே தேருறிங்க?! வேணுமுன்னா அந்த வீணாப்போன பிரன்சுசாமனையும் சேத்துக்க.
எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!
பின்னே ஆதரிக்காம? பர்மா பஜார்காரர்களும் வாழ வேண்டுமல்லவா? அதைத் தான் நானும் சொல்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி
உங்களது பதிவை படித்துப் பார்த்து திருந்திய பல லட்சம் பேரில் நானும் ஒருவன். இதை பிரிண்ட் எடுத்து தமிழ்ர்கள் அனைவருககும் அனுப்பி வையுங்கள். அப்பவாது தமிழனுக்கு புத்தி வரட்டும்.
கரெக்ட் ராம்கி. நீங்க புத்திசாலி. சரியா புரிஞ்சுகிட்டீங்க.
பாருங்க எல்லாருமா சேர்ந்து ஒரு கஞ்சா குடிக்கி படத்த பார்த்திட்டு இருக்கானுகளே தடுக்க வாணாம்?
வாழ்த்துக்கள்
அருமைங்க தோழர் கார்க்கி
கோவைக்கே உரித்தான கோபமான கிண்டல் கலந்த நடை சூப்பருங்கோ!
அப்பறம் அந்த திருட்டு நாயி, வெந்து போன வாயன், படத்த பஜார்ல போயி வாங்கி பாக்கற அளவுக்கு
எம்பட மூளைக்கு பொறுமையில்லிங் (பர்மா பஜாரும் எங்க ஊர்ல நை).
தொடர்ந்த எழுதுங்கள் தோழர் வாழ்த்துக்கள்,
nandri thozar viduthalai…
நன்பர் கார்க்கி,///மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு/// ரஜினி அரைக்கிழமல்ல முக்கால் கிழம் மேக்கப் போட்டு ஒங்கலையும் ஏமாத்திட்டய்ங்க அதுதான் ஷாங்கரு
YENGA SIR ORU WEBSITE IRUNTHAL ENNAVENA ELZHUTHUVINGALA PUDIKALANA NEETA VITRUNGA WHY U DISTRUB ALL
சார்.. எனக்குப் பிடிக்கலைன்னா விட்டீங்களா சார்? ரோட்ல போனா போஸ்டரு… பேப்பர தொறந்தா அட்வர்டைசுமெண்டு, அட ஏதாவது
புக்கத் திறந்தா பேட்டி.. தக்காளி தலை காஞ்சி போயி ஊட்டுக்கு வந்து டீ.விய போட்டா அதுலயும் இந்தாளோட பிஞ்சு போன
டப்பா மூஞ்சிய திரும்பத் திரும்ப காட்டுனா ஒரு மனுசன் என்ன தான் பண்ணுவான்? சுத்தி சுத்தி அடிக்கிறீங்களே..? விட்றுங்க சார்…
நாங்க பாவம்…
ஒருத்தன் எந்தப் படத்தைப் பார்ப்பது எதைப் பார்க்கக் கூடாது என்று தீர்மானிக்கும் உரிமையை ஒரு சில முதலாளிகள் கையில்
வைத்துக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்துவதை சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இது ஒரு கருத்து பயங்கரவாதம். எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய ஒன்று
avlo edirpaarpu irukku anda padathuku.. adu theriyama sila muttalgal(ungala madri) vayitherichal paduraanga. ena seiradu :p
Boss,
sema vayitherichal pola iruku ungaluku.. i m really happy.. ungala madri aal elam vayitherichaleye saaganum.
For this itself i m thanking endhiran team.
adai,
unaku dairiyam irunda… endhiran release apo edachu oru theatre ku veliya vandu.. ne inga sonada solu.. ne aambalanu nan othukuren. pota paiya !
its really time waste to read ur lines.
v have to be proud as Indian about Endhiran. They used first time for Indian star for robotronices(animatrix).
idellam ungaluku sonalum puriyadu…
anyways.. unga vayitherichala maatra mudiyadu. carry on.
sema comedy sir neenga.
vayitherichal party.. 😛
கமல் , சிந்தியா ,மற்றும் ராபர்ட் ஆகியோருக்கு என்னுடைய கருத்தை கார்க்கி பக்கத்தில் பதிய ஆசைப் படுகிறேன்.
நண்பர்களே .. கார்கிக்கும் இரஜினி காந்துக்கும் முன்விரோதமோ பங்காளி பிரச்சனையோ அல்ல .. அவரும் உங்களைப் போல ரஜினியை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம். எதுவும் நஸ்டமாகப் போவதில்லை ..
ஆனால் அவர் ரஜினிகாந்த்தையும் சன் பிக்சர்ஸையும் சங்கரையும் விமர்சனம் செய்வதற்கான காரணம். .. நாட்டில் எவ்வளவோ பேர் அடுத்த நேர சோற்றுக்கு வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. மேலே குறிப்பிட்ட ரஜினியோ , கலா நிதி மாறனோ, சங்கரோ யாருமே இந்த பிரச்சனைகள் குறித்து அந்த திரைப்படத்திலாவது பேசியிருக்கிறார்களா ?.. இல்லை … இவ்வளவு பேசும் நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா ?..
மக்கள் கஸ்ட்டத்தில் இருக்கும் போது இருனூற்றைம்பது கோடி செலவழித்து படம் எடுத்து திரும்ப திரும்ப விளம்பரம் செய்து , மக்கள் மனதை பலாத்காரமாக போதையாக்கி ஒரு டிக்கெட் விலை நூறுக்கும் அதிகமாக விற்று காசு சேர்க்கிறார்கள் அந்த சினிமா கொள்ளையர்கள் .. உழைக்கும் தொழிலாளியின் பல நாள் சேமிப்பை சுலபமாக சுருட்டிக் கொள்கிறார்கள் … அதெல்லாம் உங்களுக்கு ரோசத்தையும் கோபத்தையும் வரவழைக்கவில்லை . ஆனால் உங்களுக்கு ரஜினியை சொன்னால் மட்டும் கோபம் வருகிறது .பல லட்சக்கணக்கான மக்களின் கஸ்ட்டத்தை விட … ரஜினி மீதான விமர்சனம் உங்களுக்கு வெறுப்பு ஏற்றுவதை எண்ணி வியக்கிறேன் .
தமிழகத்தில் இந்த அளவுக்கு மனிதத் தன்மை செத்து விட்டதா ?.
@ கார்க்கி …
மிக அருமையான பதிவு தோழர் ..
@தமிழகன்
என்ன தமிழகன் … கார்க்கி மேல அவ்வளவு கோபப் படுறீங்க ?..
அது என்னாங்க ’பொட்டப் பையா’னு திட்டிருக்கிங்க ..
உங்க வீட்டுல உங்க அம்மா , தங்கை , அக்காள் , மனைவி யாராச்சும் இருந்தா அவங்க எல்லாரும் பெண்கள் தானே ..
உங்க பாசையில் சொன்னா பொட்டை தானே .. (மேற்கூறிய தாய்க்குலங்கள் மன்னிக்கவும்). . அந்த வார்த்தையை திட்டுவதற்காக பயன்படுத்தி உள்ளீர்கள் .. அப்படியெனில் உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரும் கேவலமானவர்களா ?.
பதிவிடும் முன் யோசித்து விட்டு பதியவும் …
அந்த ரஜினிகாந்துக்கு நானும் ரசிகன் தான். பெரிய ஹீரோ என்று மனதிற்குள் புளகாங்கிதம் அடைந்து சிவாஜி படத்திற்கு சத்தியம் தியேட்டரில் டிக்கெட் எடுக்க ரிசர்வேசனுக்கு முதல் நாள் இரவே சென்று காத்திருந்த அளவுக்கு நானும் ரசிகன் தான் … ஆனால் ஒரு காலத்தில் .. இங்கு தமிழகத்தில் இந்தியாவில் கஸ்ட்டப் படும் ஒவ்வொரு மக்களையும் எண்ணிப் பார்த்தால் இந்த ரஜினிகாந்த போன்ற எத்தனையோ கறுப்புப் பண முதலைகளை நீங்களும் புறக்கணித்து தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்களைப் போன்ற தீவிர வெறியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்…
””எததனைக் காலம் தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே ?.”””
அடித்த அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து நார், நாராக தொங்குகின்றன……
ம்ம்ம் தூள் கிளப்புங்கள்….
எனக்கென்னவோ மிளகாய் நெடி கொஞ்சம் குறைச்சலாக இருப்பதாய் தோன்றுகிறது!
கோவணங்கள் தொடர்ந்து கிழியட்டும் 🙂
வாழ்த்துக்கள்.
ggdgfjgjhgnvnb gbnbgnnhjvbnbnv
neenga budisaali nu nenachikitu irukeengala….lolz…
I love this blog post. It is really what I felt on seeing these kind of cine-political stunts. I quit watching movies 7 years back. I spend that money that I may use (150 per month 7 years back, 500 per month now) to help needy school children. If you think I am talking out of jealousy, I earn a good salary, I have a good job, good life and on whom and on what I have to have stomach burn?
Bonnie FAIL!
Terrance