கார்க்கியின் பார்வையில்

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!

சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..

நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.

இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.

ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?

என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –

லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.

எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –

சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –

லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..

அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.

திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.

அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.

விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.

ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்

அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.

அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஜூன் 3, 2010 Posted by | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism | 8 பின்னூட்டங்கள்

தமிழ்மணி ஒரு கோமாளியா : பரபரப்புத் தகவல்கள்!!

தமிழ்மணம் வட்டாரங்களில் கோமாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒவ்வொரு முறை கோமாளிப் பஞ்சம் ஏற்படும் போதும் புதிது புதிதாக எதாவது ஒரு தெருப்புழுதி தோன்றி கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டேயிருப்பான்கள்.. அந்த வகையில் எனது இரண்டாண்டு தமிழ்மண வாசக அனுபவத்தில் எவர்கிரீன் கோமாளி ஜோடிகள் அரவிந்தன் நீலகண்டனும் ஜடாயுவும் தான். சமீப காலமாக அவர்கள் வீற்றிருக்கும் அந்த முதலிடத்துக்கு பயங்கரமான ஒரு ஆபத்து தோன்றி இருக்கிறது தமிழ்மணி என்பவர் வடிவத்தில்! மார்க்சியத்தை உடைத்துக் காட்டுவோம் என்று முயன்ற பலரும் பரிதாபகரமாக மண்ணைக் கவ்விவிட்ட நிலையில் புதிதாக நமது தமிழ்மணி மேற்படி முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார். உண்மையில் நமது மூளைக்கு வேலை தரும் வகையில் ஏதாவது கேள்விகள் கேட்டிருப்பார் என்று முதலில் நான் நினைத்துக் கொண்டு தான் அவர் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன்.. பிறகு தான் தெரிந்தது.. நீல்ஸின் பர்மெனெண்ட் ஜாபுக்கே இவர் குண்டு வைக்கப் பார்க்கிறார் என்று..

அவர் சமீப காலத்தில் நிகழ்த்திக் காட்டிய சர்க்கஸ் வித்தைகளில் எனக்குப் பிடித்த சில வித்தைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.. நீங்களும் சிரித்து மகிழலாம்.. வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாந்தி பேதி, சீத பேதி என்று ஏதாவது ஏடாகூடம் ஆகிவிட்டால் நான் ஜவாப் அல்ல! இப்போதே சொல்லி விடுகிறேன்.

ஒரு புத்தகத்தை அதன் முன்னுரையை மட்டும் படித்து விட்டு அட்டை டூ அட்டை இவ்வளவு தான் மேட்டர் என்று சொல்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சமாவது கூசும்.. நுனிப்புல் மேயும் கூமுட்டை கூட அவ்வாறு விவாதிக்க கூசுவான். ஆனால் அந்தோ பரிதாம் நமது டமிள்பெல்லுக்கு அந்தளவுக்குக்கூட இங்கிதமோ, வெட்கமோ, கூச்சமோ, கிடையவே கிடையாது. குறைந்த பட்சம் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய நானயம் கூட இல்லை.. உலகமயம் பற்றி ஒரு நூலில் தோழர் இராயகரன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.. அதற்கான முன்னுரையை மட்டும் வாசித்து விட்டு பெரிய புடுங்கியைப் போல  நம்ம புத்திசாலி மொத்த புத்தகத்திற்கும் மறுப்பு எழுதிக் கொண்டிருக்கிறது!

அதில் தலைப்பில் நம்ம புத்திசாலி சொல்லியிருக்கும் காரணம் என்ன தெரியுமா? “கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்” அடடா.. என்ன ஒரு அறிவு! என்ன ஒரு அறிவு! இவரு பெரிய செவுரு… இவரு வந்து விவாதத்துக்கு எடுத்திட்டா எல்லோரும் போயி கைகட்டி பதில் சொல்லனுமாம்ல? எனக்குத் தெரிந்து தோழர்கள் கடுமையான வேலை நெருக்கடியின் மத்தியிலும் மதிப்பான நேரத்தை செலவு செய்தும் இனையத்தில் பரவலாக இருக்கும் so called அறிவு ஜீவிகள் மத்தியில் “இப்படியும் ஒரு மாற்றுப் பார்வை” இருக்கிறது என்பதை நிறுவிக்காட்டவே இனைய விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். இது போன்று மண்ணாங்கட்டிகள், தெருப்புழுதிகள் போன்ற
கழிசடைகளிடம் வந்து அரட்டைக் கச்சேரி நடத்தவெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்க நியாயமில்லை.

( அப்ப நீ மட்டும் ஏண்டா…? என்று கேட்பது புரிகிறது.. செல்லா போன்ற அஷடுகளுக்குக் கூட நேரம் ஒதுக்கிய நான் இன்று எனக்குப் பிடித்த கோமாளிகளான நீலகண்டன் / ஜடாயு இடத்திற்கு போட்டி போடும் தமிழ்மணிக்கும் போனால் போகிறதென்று ஒரு அரைமணி நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.. அதாவது… தமிழ்மணி வார்த்தையில் சொன்னால்… “இவர் பதிவுகளில் சட்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறவனின் வார்த்தைகள் அதிகம் தென்படுவதால் இதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்”)

ஒக்கே பேக் டு த மேட்டர்..

இதில் இவருக்கு அங்கே கொஞ்சம் அனானி நன்பர்கள் வேறு இருக்கிறார்கள்.. பெயர்கள் காமெடியாக இருக்கும் “பழைய அனானி” “புதிய அனானி” “ரெண்டுக்கும் நடுப்புற அனானி” “புதிய அனானி வெர்ஷன் 2.1.0” இப்படி எத்தனை பேரில் வந்தாலும் கொண்டை மட்டும் ஒன்றே! மொதல்ல கொண்டைய மறைங்கோ அம்பிகளா! இதில் அவருக்கு என்னா சவுரியம்னா.. முதல் அனானியா அவரு வரும்போது ஒரு விஷயத்தை உளரியிருப்பார்.. அதற்கு நமது தோழர்கள் பதில் கொடுத்திருப்பார்கள்.. கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ரெண்டாவது அனானிய வந்து அதே மேட்டரை வேறு வார்த்தைகளில்
கேட்பார்… நாமும் அதான் சொல்லியாச்சே என்று சும்மா மட்டும் இருந்து விட்டால் – கேம் ஓவர்.. நம்ம தல மூனாவது அநானியா வந்து, “இரண்டாவது  அனானி கேட்டதற்கு நன்பர் தியாகு ஏன் பதில் சொல்லலை?” என்று ஒரே மடக்காக மடக்கி விடுவார்.. மொத்தத்தில் “பொழப்புக் கெட்டவன் பொண்டாட்டி தலைய செரச்சான்” என்பது போல இவர் புல்டைம் ஜாபாக இதே வேலையாகவே இருக்கிறார்..

இப்போது இவர் “விவாதத்திற்கு” எடுத்துக் கொண்டிருப்பது புராதன பொதுவுடைமை பற்றி. “எச்சூஸ்மி இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்பது போல் தான் இவர் ஆரம்பத்தில் தொடங்குவார்.. நாமும் முன்பக்கமாக மட்டும் பார்த்து விட்டு படித்துப் பார்த்தால் தான் முழு மேட்டரும் புரியும்… அவசரப்பட்டு பதில் சொல்ல இறங்கி விட்டு பின்னால் “ரொம்ப நேரம் நல்லாத்தானய்யா பேசிக்கிருந்தான்…?”  என்று புலம்பி பிரயோசனமில்லை..

உதாரணமாக இப்போது அவரிடம் போய்,

“பொதுவுடைமை என்பது உற்பத்தி சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவான உடைமையாக இருக்கும் ஒரு சமுதாயத்தைக் குறிப்பது, அதிலும் வர்க்கமற்ற, பிரிவுகளற்ற சமுதாயத்தைக் குறிப்பது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இங்கே சமூக அமைப்பு முறை அப்படித்தான் இருந்தது.. இது உலகில் பல பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்கள் மூலமும், அகழ்வாராய்ச்சி மூலமும் நிரூபனமாகி இருக்கிறது” என்று சீரியஸாக சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்கு அவர்,

“கற்களை எப்படி உற்பத்தி சாதனம் என்று சொல்ல முடியும்? குகையில் வரையப்பட்ட ஓவியம் குகையில் மட்டும் தான் செல்லும்.. வெளியே செல்லாது செல்லாது.. வர்க்கம் ஏன் இல்லை? அதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது” என்று “விவாதிப்பார்” அதே நேரம் அல்லையில் அனானியாக ஊடுருவி, இதே “கேள்வியை” வேறு மாதிரி ஒரு தரம் கேட்டு வைத்துக் கொள்வார் – “அதெப்படி புராதனம் என்று சொல்ல முடியும்? கற்கள் இப்போது கூடத்தான் இருக்கிறது, அப்படியென்றால் அது புராதனமாகதல்லவா?”

இப்போது உண்மையான அக்கறையுடன் அங்கே விவாதிக்கப் புகுந்த நமது தோழருக்கு தலை பம்பரம் போல சுழல ஆரம்பித்து விடும்.. சரி ரெண்டும் ஒரே மாதிரி கேள்வி தானே ஒன்றுக்காவது பதில் சொல்வோம் என்று சொல்லி விட்டு வந்தால், ரெண்டு நாள் கழித்து பதில் சொல்லாமல் விட்ட அந்தக் “கேள்வியை” தனியே கட் பேஸ்ட் செய்து ஒரு பதிவாக போட்டு “இரண்டாவது அனானி நன்பர் தியாகுவுக்கு கேள்வி” என்று ஒரு தனிப்பதிவாக போட்டு விடுவார்..

இது இப்படியே தொடரும்.. எங்கே எதற்கு பதில் சொன்னோம், எந்தெந்த அவதாரத்தில் வந்து என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டது என்று
ஒரு எழவும் புரியாது. இதே புல் டைம் ஜாபாக வைத்திருப்பவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் தோழர்கள் தங்கள் பல சொந்த வேலைகளுக்கு மத்தியில் இந்த கிறுக்குத்தனங்களையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியை நடத்திக் கொண்டிருப்பது இயலாத காரியம்.

மொத்தத்தில் வடிவேலுவின் பஞ்சாயத்துப் போலத்தான் நமது தமிழ்மணியின் விவாத முறையும்,

“என்னடா கையப் புடிச்சி இழுத்தியா?”

“என்ன கையப்புடிச்சி இழுத்தியா”

“இல்லப்பா பக்கத்து ஊருக்கும் நமக்கும் ஏற்கனவே தகறாறு.. நீ ஏன் அந்தப் பொண்ணு கையப் புடிச்சி இழுத்தே?”
“என்ன கையப்புடிச்சி இழுத்தியா?”

“அது வந்துப்பா….”

“என்ன வந்துப்பா…?”

“இல்ல….”

“என்ன இல்ல..?”

இப்படியாக அவர் “விவாதித்துக்” கொண்டேயிருப்பார்.. எனக்கென்னவோ கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால்
நீலகண்டன் டெப்பாசிட்டு காலியாகிவிடும் போல் தான் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், பேசாமல்
இவன் பேசப் பேச ஒதுங்கி நின்று பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தான். இவனும் உண்மையடியான் போல தனியே
குரைத்துக் கொண்டு நிற்பான். இல்லையா.. அவனே “இரண்டாவது அனானி” பழைய அனானி, புத்தம் புதிய அனானி, புதிய அனானி ரிலீஸ் வெர்ஷன் 2.1.0 என்று அவன் மனம் திருப்தி அடையும் வன்னம் ஏதாவது ஒரு கமெண்டைப் போட்டு சுவத்தில் சொரிந்து கொள்ளும் எருமை போல சுயஇன்பத்தில் ஆழ்ந்து கிடப்பான்..

பொதுவான குறிப்பு :- பொதுவாக ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து ( அதிலும் இந்தியாவில் நம்மைச் சுற்றியுள்ள நான்கில் ஒருவன் இரவு பட்டினியோடு படுத்துறங்குகிறான், பத்தில் எட்டுப் பேர் நாளுக்கு இருபது ரூபாய்கள் மட்டும் சம்பாதிக்கும் நிலையில் இருக்கிறார்கள் ) இதையெல்லாம் மாற்றியமைக்க மாட்டோமா என்னும் தவிப்பில், அந்த மக்கள் மேல் இருக்கும் காதலின் பேரில் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்கிறான். ஒருவன் வந்து
உனது சித்தாந்தம் தவறு என்று சொல்வானானால் அவன் அதற்கு மாற்று என்ன என்பதை முன்வைத்து தான் உரையாட வேண்டும். வெறுமனே  எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “எதிர்க்க” முடியும். அப்படிச் செய்வது பொருட்படுத்தத் தக்கதல்ல!

தோழர்களுக்கு ஒரு குறிப்பு :- தமிழ்மணியின் உத்தி பைத்தியகார உரையாடல் உத்தி. இவனுக்கு பதில் சொல்வது நமது தொண்டைத்தண்ணியை நாம் தெரிந்தே வீணடிக்கும் வேலை என்பது எனக்கு இப்போது தான் புரிகிறது. நீங்கள் ஏற்கனவே அவனுக்கு கொடுத்த பதில்கள் உண்மையில் உங்களது அக்கறையை காட்டுகிறது. ஆனால் நமது அக்கரைக்கோ, பொருட்படுத்தலுக்கோ இவன் தகுதியானவன் அல்ல. எனவே நாம் இந்த அரட்டைக் கச்சேரியில் இறங்குவதை விட எதார்த்த நிலைகளைப் பற்றி மேலும் பல பதிவுகளை எழுதுவதே சிறந்தது! இது எனது தனிப்பட்ட
கருத்து மட்டும் தான் – மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.

நவம்பர் 29, 2007 Posted by | Alppaigal, tamil blogsphere | | 4 பின்னூட்டங்கள்

தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி?

இது கொஞ்சம் சிக்கலான மேட்டர் தான். முதலில் எழுத்தில் நடிப்பது எப்படி என்று ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருத்தல் நலம். அப்புறம் இந்த பிரபஞ்சத்தின் கீழ் வரும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லித் தொலைக்கும் ‘தில்’ மிகவும் அவசியம். இன்னுமொரு முக்கிய விசயம் என்னவென்றால்.. “கட்டற்ற சுதந்திரம்” போன்ற எந்த ஒரு அர்த்தமும் இல்லாத வார்த்தைகளாகப் பார்த்து ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.. இது பதிவெழுதும் போது மறந்து விடாமலிருக்க
உதவும்.

இனி இந்த முற்போக்கு வேடம் போடும் போது முக்கியமாய் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்…

முன்பே சொன்ன மாதிரி நாட்டில் கழுதை பேண்டது, பன்றி மோண்டது என்று என்ன நடந்தாலும் அதில் நம்முடைய கருத்து என்று ஏதாவது ஒரு கன்றாவியை சொல்லித் தொலைத்து விடுவது அவசியமானது. இடையிடையே, “எனக்கு கம்யூனிஸம் பிடிக்கும் ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. ஏங்கெல்ஸ் ஒரு தெய்வப்பிறவி ஆனால் மார்க்ஸ் கொஞ்சம் சரியில்லை. பெரியாரை நான் காதலிக்கிறேன் – இந்த பெரியாரிஸ்டுகள் ரொம்ப மோசம். ஓஷோவை நான் காதலிக்கிறேன் – ஆனால் எனக்கு இடது கண் மட்டும் தான் அவர் ( ஏன்னா.. வலது கண்ணைத்தான் ஏற்கனவே பெரியாருக்கு பட்டா போட்டாச்சே)” இப்படி படிப்பவன் மயிரைப் பிய்த்துக் கொள்வது போல எதையாவது உளரிக் கொண்டே இருக்கவேண்டும்.

அவ்வப்போது “ஆயிரம் வருசத்துக்கு முன்னே போவோம்”, “ரெண்டாயிரம் வருசத்துக்கு பின்னே போவோம்”, “கற்பனைக் கழுதைக்கு காகிதம் போடுவது எப்படி?” என்பது போன்ற தலைப்புகளில் எதையாவது கிறுக்கி வைத்துக் கொள்வது மிக அவசியம். எக்குத் தப்பாய் உள்ள பூந்து கொண்ட எவனையும் ஒரு நிமிடம் “இப்ப நான் எங்கே இருக்கேன்?” என்று பேந்தப் பேந்த முழிக்க வைத்து விடுவதில் தான் நம் தொழில் ரகசியமே அடங்கி இருக்கிறது.

யாரும் நம்மை சீந்தாமல் விட்டு விடும் நிலை மிகவும் ஆபத்தானது. அப்படி ஏதாவது ஒரு நிலைமை ஏற்படுவது போல் வாசனை தென்பட்டால் “18 வயதுக்கு மேல் மட்டும் உள்ளே வரவும்” என்னும் மசால்வடை டிஸ்கியைத் தலைப்பில் போட்டு விட்டு, உள்ளே ஏதாவது ஒரு மூன்று X போட்ட இனையதளத்தில் இருந்து உருவிய ஆபாச வீடியோ காட்சியை ஓட விட்டால் போதும். எதிர்த்து எவனும் – “ஏண்டா பெண்மையைப் போற்றுவோம்னு நீ தானடா சொன்னே?” என்று எக்குத்தப்பாய் கேட்டு விட்டால், “அப்ப நீ பாத்தே தானே? கக்குடா எல்லாத்தையும்..” என்று முற்போக்காகப் பேசி சமாளித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் “அழகை ஆராதிக்கத்
தெரியாத தலைகீழாய்த் தொங்கும் முண்டங்கள்” என்று அடுத்த பதிவிலேயே சொல்லி நம்மை ஒரு ‘கலா’ ரசிகனாகவும் காட்டிக் கொள்ளலாம்.

மூத்திரச் சந்தில் ஒன்னுக்குப் போனது, கக்கூசில் கக்கா போனது, பாரின் விஸ்கி குடித்தது, தம்மடித்தது, சட்டை போடாமல் சலம்பல் பண்ணியது என்று வகை தொகையே இல்லாமல் செய்த அத்தனை அல்பத்தனங்களையும் வீடியோ படக்காட்சிகளாக பதிவு செய்து
கொள்வது நல்லது. ஏனென்றால் கற்பனைக் கழுதை காலை நொண்டும் சமயங்களில் இந்த வீடியோக்களைத் தனித்தனியாக ரிலீஸ் செய்து பார்ப்பவர்களைப் பதற வைத்து விடலாம். நமக்கும் பொழுது குஷாலாகப் போகும். வீடியோக்கள் கையைக் கடிக்கும் போது நமீதாவோ
சகீலாவோ இல்லை வேறு ஏதாவது ஒரு கழிசடையோ பனியனைக் கழட்டுவது மாதிரியான “தூய கலைப்” படங்களை எங்காவது சுட்டுப் போட்டுக் கொள்ளலாம். இந்தப் பின்ன-வீனத்துக்கும் (பின்காலனீயம்!?) இப்படிக் கழட்டிப் போடப்பட்ட பனியன்களுக்கும் விட்ட குறை தொட்ட குறை ஏதோ இருந்து தொலைப்பதால் நம்மை ‘அந்த’ மாதிரி பதிவர்களும் “இவனை நம்ம லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா?” என்று மண்டையைக் குடாய்ந்து கொண்டே இருப்பார்கள்.

இத்தனையையும் செய்து விட்டு வலையுலகில் “அடுத்தவன்” செய்யும் ஆபாசத்தை எதிர்க்காவிட்டால் எப்படி? அதனால் பார்ட்டைமாக
அதையும் எதிர்த்து ஒரு பத்துப் பதினைந்து பதிவுகள் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் எழுதப்படும் ( வேற எவன் எழுதுவான் நாமே தான்) இந்த ஆபாச எதிர்ப்பு வரலாற்றில் நாமக்கும் ஒரு இடம் கிடைத்தது போலாகி விடும். இப்படி ஆபாசத்தை எதிர்த்த கையோடு செக்ஸை எப்படி கண்டபடி கொண்டாடுவது என்றும் இடையிடையே சொல்லி வைக்கலாம். எவனும் நம்மைப் பார்த்து, “அப்ப உங்க வீட்ல “எல்லாமே” நடுத்தெருவிலே தான் கொண்டாடுவீங்களா?” என்றெல்லாம் கேட்டு விடமாட்டான். பின்னே ‘அதென்ன’ பொங்கலா கொண்டாட?

எந்த இமேஜும் இல்லாத பதிவர் என்ற இமேஜ் தான் இருப்பதிலேயே ரொம்ப முக்கியமான ஒன்று. கூடவே, “தத்துவமே இல்லாத தத்துவம்”, “எந்த இஸமும் இல்லாத இஸம்” இப்படி சில தத்துவங்களையும் இஸங்களையும் உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது. இப்படி படாத பாடுபடெல்லாம் படுவது எதற்காக?… கரெக்ட்! “க்ரூப்பிஸமே இல்லாத ஒரு இஸம் கொண்ட ஒரு க்ரூப்பை” உருவாக்கத்தான். இந்த க்ரூபிற்கு பல்வேறுபட்ட “வரலாற்றுக் கடமைகள்” இருக்கிறது. முக்கியமானதை அடுத்த பத்தியில் சொல்கிறேன். உடனடி வரலாற்றுக் கடமை பற்றி மட்டும் இந்தப் பத்தியில். “காலையில் எனக்கு நீளமா குசு பிரிந்தது” என்று நாம் ஒரு பதிவு போடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதர் ஆப்சனை பயன்படுத்தி ஊடுருவும் நம்ம க்ரூப் மெம்பர் பிடல் காஸ்ட்ரோ பெயரில் வந்து “தோழர், எனக்கு படாரென்று பிரிந்தது. உங்களுக்கென்ன புஸ்ஸென்றா?” என்று “விவாதத்தைத்” தொடங்கி வைப்பார். அடுத்து ஜார்ஜ் புஸ் வந்து “யார்ராவன் என்னோட பேரை இழுக்கறது” என்று சீறுவார். பின்னாடியே சேகுவேரா பாய்ந்து வந்து “பார்த்தீர்களா தோழர் இந்த ஏகாதிபத்திய திமிரை?” என்று பதறுவார். இப்படியாக கும்மியடிப்பது கூத்தடிப்பது என்று சமூகத்துக்குத் தேவையான சகலத்தையும் நமது மெம்பர்களே கவனித்துச் செய்து கொள்வார்கள்.

நமது கீபோர்டு சமூகத்துக்காக இப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பின்னும் நன்றியில்லாத இந்த வலைச் சமூகம் நம்மை புறக்கனிக்கும் ( ஹிட் கவுண்டர் ஏறலைன்னா பின்ன இன்னா அர்த்தம்?) ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஏதாவது ஒரு சமூகக் கொடுமை நமக்கு நேர்ந்து விட்டால்…? “மன வருத்தத்துடன் என் எழுத்துக்களுக்கு நிரந்தர ஓய்வு தருகிறேன்” என்று ஒரு பதிவைப் போட்டு விட்டு, “அக்கா நான் போறேன்”, “அண்ணே நான் போறேன்”, “மதினி நான் போறேன்”, “ஐயா நான் போறேன்”, “தாய்க்குலமே நான் போறேன்”, “தம்பிமார்களே நான் போறேன்”, “ஒன்னு விட்ட பெரியப்பா நான் போறேன்”  “ரெண்டு விட்ட சித்தப்பா நான் போறேன்” “மூனு விட்ட மாமா நான் போறேன்” “நாலு விட்ட அத்தே நான் போறேன்” என்று சில பல பின்னூட்டங்களை சிதற விட வேண்டும். இப்போது தான் மேலே நாம் உருவாக்கிய “க்ரூபிஸமே இல்லாத க்ரூப்பின்” வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த அந்த வரலாற்றுக் கடமை ஆரம்பமாகிறது. ஒவ்வொருத்தராக ஓடி வந்து “ஐயையோ போகாதீங்க தோழர்”, “நீங்க மட்டும் திரும்பி வர்ரேன்னு சொல்லைன்னா நான் டீக்குடித்துக் கொள்வேன்”, “ஒரு அப்பாவா சொல்றேன், திரும்ப வந்துடுங்க ப்ளீஸ்” என்றெல்லாம் பாசத்தை பிழிந்து விடுவார்கள்.

நாமும் கொஞ்சம் பிகு பன்ன வேண்டும். அதிகமில்லை ஜெண்டில்மேன், ஜஸ்ட் ஒரு மூணு மணி நேரத்துக்குத் தான். பதிவைப் போட்டோ மா.. மார்னிங் ஷோ போனோமா( போறேன்னு சொன்னதே அங்க தானே!)… திரும்பி வந்து அடுத்த பதிவைப் போட்டு விட வேண்டும். இல்லையென்றால் “சர்தான் போடா நாயே” என்று நம்மைக் கழட்டி விட்டு விடும் அபாயம் நிறைந்த விளையாட்டு இது. “ஆப்ரிக்காவில் இருந்து தந்தி வந்தது”, “அண்டார்டிக்காவில் இருந்து டிரங்கால் வந்தது” “செவ்வாய் கிரகத்தில் இருந்து டிரங்கு பெட்டி வந்தது” என்று எதையாவது சொல்லிக் கொள்ளலாம். காரணமா முக்கியம்? “போனதற்கும்”, “வந்ததற்கும்” கவிதைகள் எல்லாம் கூட வரும். ரொம்பவே சுவாரஸ்யம் தரும் ஆபத்தான விளையாட்டு இது. எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

திரும்பி வந்த பின்? பழைய விளையாட்டுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ( இதற்கும் அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரு மூணு பதிவுக்குத் தான்) பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்குக் ஜாக்கி போட்டு உயர்த்தும் நம்முடைய வரலாற்று லட்சியத்தை செயல்முறைப் படுத்த ஆரம்பித்து விட வேண்டியது தான். “புகைப்படம் எடுப்பது எப்படி?”, “சோறு தின்பது எப்படி?” “தின்ற பின் முக்காமல் முனகாமல் கக்கா போவதற்கு என்ன செய்ய வேண்டும்?” “போன பின் சரியாக எப்படி கழுவுவது?” என்று பல்வேறு பட்ட அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் (பதிவுலக)மக்களுக்கு ( ஒட்டு மொத்தமா கூட்டிக் கழிச்சா ஒரு முன்னூனூனூறு பேர் தேறுவாங்க!) பயன்படும் பதிவுகள் சிலவற்றை அள்ளித் தெளித்து விட வேண்டும்.

இப்படி ஒரு வழியாக நம்முடைய பொழுதும் போவதோடு முற்போக்கு முலாம் பூசிக் கொண்ட மாதிரியும் ஆகிவிடும்.

ஒரு குறிப்பு : கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்த அனுபவத்தில், இதன் போக்குகளைப் பற்றியும் இந்த தளத்தில் இயங்கும் பதிவர்கள் சிலரின் போக்குகள் பற்றியும் எனக்குள் ஏற்பட்ட ஒரு சித்திரத்தின் சிறிய பகுதி தான் இது. மக்கள் பிரச்சினைகள் பற்றி ஒரு பக்கம் சில பதிவர்கள் மிகவும் அக்கறையோடு, தங்கள் மதிப்பான நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து பேசிக் கொண்டிருக்க, மறுபுறமோ போலித்தனமான முற்போக்கும், வெட்டி மேட்டிமைத்தனமும் நிறைந்த குட்டிமுதலாளித்துவ அல்பைத்தனங்களே பரவலான கவனிப்பைப் பெறுகிறது. இந்த போக்குகள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எந்த தகவலும் சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்பு பெற்ற, நல்ல அறிவு கொண்ட இவர்களின் இந்த போக்குகள் ஆதங்கத்தைத் தான் தருகிறது. அதன் கிண்டலான வெளிப்பாடு தான் இது. அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் – ஜஸ்ட் கும்மி!

ஒக்ரோபர் 18, 2007 Posted by | Alppaigal, tamil blogsphere | , | 9 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: