கார்க்கியின் பார்வையில்

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!

சுகுணா சிவராமனின் இமெயிலைத் திருடிப் பெற்று வெளியிட்டதன் மூலம் நர்சிம் விவகாரத்தில் அடுத்த சுற்று காவாளித்தனம் ஆரம்பமாகியுள்ளது.சில நாட்களாக வெறுமனே கத்திக் கொண்டிருந்த தவளைகள் சிலதுக்கு இப்போது சாரலடித்தது போல – அல்லது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஆகியுள்ளது. நேற்று வேலை அதிகம் இருந்ததால் இவ்விவகாரத்தி சுருக்கமாக எனது கருத்தை வினவு தளத்தில் பின்னூட்டமாக போட்டிருந்தேன் அதுவும் இன்னும் கொஞ்சம் ஆப்புமாக சேர்த்து இந்தப் பதிவைக் கருத்துக் காவாளி அணியினர்க்கும் அந்தோனியார் பக்தகோடிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சிவராமனின் தனிப்பட்ட வாழ்க்கையை வினவு தோழர்கள் கட்டுப்படுத்தவியலாது; அவர் ஒரு ஆதரவாளர்; உடன் வேலை செய்யும் சக தோழரல்ல. பல்வேறு சொந்த அரசியல் நிலைப்பாடுகள் கொண்டுள்ள ஒருவர் எமது அரசியலின் அத்தனை நிலைப்பாடுகளையும் அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பதோ எமது தோழர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் அதே நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தோழர்கள் நிர்பந்திப்பதோ சாத்தியமற்றது. பிரச்சினைகளின் அடிப்படையில் இணைவது தான் சாத்தியம். இங்கே இந்த விவகாரத்தில் சிவராமன் தனது சொந்த வாழ்க்கையில் பார்ப்பன அடையாளங்களை (அவர் அவ்வாறு கடைபிடித்து தான் வருகிறார் என்பதை அவரே சொல்லாத வரையில் இது சுகுணாவின் யூகம் என்றே நான் கொள்கிறேன்; அதன் அடிப்படையில் நானும் இதை ஒரு வாதத்துக்காகவே உண்மையென்று வைத்துக் கொண்டே தொடர்கிறேன்) கடைபிடிப்பவராயினும், இந்த பிரச்சினையைப் பொருத்தளவில் நேர்மையாக தனது தனிப்பட்ட இழப்புகளுக்கும் கூட அஞ்சாமல் (நர்சிமிடம் கொடுக்கல் வாங்கல் இருந்த போதும்) முதன் முதலாக தனது கண்டனங்களை வெளிப்படையாக பின்னூட்டங்களில் பதிவு செய்துள்ளார். வினவு தோழர்களுக்கும் அவரே முன்வந்து பதிவுக்கான தரவுகளைக் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அவரது செயல்பாட்டினூடாகவே அவரை நாம் எடை போடுகிறோம். அவரது சொந்த வாழ்க்கையின் அழுத்தங்களையும் தாண்டி இவ்விவகாரத்தில் அவர் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுக்கிறார்; அவர் எமது தோழர்களுக்கு சில தரவுகளைத் தந்துதவுகிறார் எங்கள் தோழர்கள் அதைத் தமது பதிவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.

சுகுணாவின் – மற்றுமுள்ள கூழ்முட்டைகளின் – இதே அளவுகோலை சுகுணாவுக்கு எதிராக இன்னொருவர் கொள்வதானால், அவர் ஜெயேந்திரன்
கைதான சமயத்தில் எழுதிய கட்டுரையை ம.க.இ.க சிறு வெளியீடாக கொண்டுவந்ததைக் கூட “ஒரு குடிகாரனிடமிருந்து எப்படி கட்டுரை எழுதி
வாங்கலாம்.. ம.க.இ.க தனது தோழர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறிகளை வலியுறுத்த்திக் கொண்டே ஒரு குடிகார கபோதியிடம்
கட்டுரை எழுதி வாங்கியிருக்கிறார்களே.. அதுவும் ஆனந்த விகடன் போன்ற ஒரு பார்ப்பன பத்திரிகையில் வேலை செய்கிறார் இப்போது” என்று ஒருவர் சொல்லி விட முடியும்.. அன்று உங்களை எப்படி எடை போட்டார்களோ அப்படியே இன்று சிவராமனை எடை போட்டிருக்கிறார்கள் சுகுணா..

நாளை இதே சிவராமன் பொதுவெளியில் தனது செயல்பாடுகளில் ஒருவேளை பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பாரானால் அவரையும் அம்பலப்படுத்த எமது தோழர்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை – உங்களுக்கும் சந்தேகமிருக்காது என்றே நம்புகிறேன். எனில் இப்போதைய உங்கள் பதிவின் நோக்கம் என்ன? அது நர்சிமின் பார்ப்பன சாதி வெறிக்கு எதிராக பரவலாக கிளம்பியிருக்கும் கருத்துக்களை
மடைமாற்றிவிடுவதே. அந்த அம்சத்தில் இப்போது நீங்கள் தான் பார்ப்பனியத்துக்கு வால்பிடிக்கிறீர்கள்.

இப்போதும் வினவு தளத்தில் எங்கள் அரசியலை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலர் கட்டுரைகளை வைக்கிறார்கள். எமது
பதிவுகளில் தொடர்ந்து ஆதரவுப் பின்னூட்டமிடும் பதிவர் ஒருவர் கோக் பதிவில் தன்னால் இவ்வகை மென்பானங்களை சில சமயங்களில் தவிர்க்க முடியவில்லை என்று நேர்மையாகவே சொல்லியிருக்கிறார் – அந்தக் கருத்து தோழமையுடன் சுட்டிக்காட்டப்பட்டுமுள்ளது.

ஒருவன் பார்ப்பனியவாதியா அல்லவா என்று எடைபோடுவது எப்படி?

என்னைப் பொருத்தளவில் பொதுவெளியில் அவரது செயல்பாடுகளின் பின்னேயான அரசியலைக் கொண்டும் அந்தச் செயலின் பின் உள்ள
வர்க்க நோக்கைக் கொண்டுமே பார்ப்பனவாதியா அல்லவா என்று எடை போடமுடியும். எப்படிப் பார்த்தாலும் எல்லாச் சூழலிலும் நரி பரியாக
வேடமிட்டு விட முடியாது. வேடம் வெளியாகும் நாளில் அதை அம்பலப்படுத்தி விமர்சிக்கும் முதல் நபராக நாமே இருப்போம் – உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் திருப்பூர் பக்கத்தில் இது பற்றி விசாரித்துக் கொள்ளலாம்.

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

சோபாசத்தி எனும் லும்பன் குறித்து –

லீனா விவகாரத்தில் காயம்பட்டுப் போன தனது பின்புறத்தை இப்போது சொரிந்து விட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது இந்த
மேட்டுக்குடிகார லும்பனுக்கு. முல்லையும் லீனாவும் ஒன்றா? இருவரையும் இணைவைப்பது என்பதே நர்சிம் முல்லைக்கு இழைத்த அநீதியைக்
காட்டிலும் பெரிய அநீதி. தனது பதிவில் ம.க.இ.க தோழர்கள் அப்படிப் பேசினார்கள் இப்படிப் பேசினார்கள் என்று நீட்டி முழக்கும் சோ.ச,
அந்த அரங்கத்தில் எமது தோழர்கள் ஒவ்வொருவர் முகத்துக்கு நெருக்கமாகவும் கேமராக்களைப் பிடித்து எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளை வெளியிடலாமே. அவரது பதிவில் எமது தோழர்கள் சொன்னதாக சொல்லப்படும் ஒவ்வொரு வசனத்தையும் தில் இருந்தால் வீடியோ ஆதாரமாக வெளியிடட்டும் என்றே சவால் விடுக்கிறேன்.

எல்லாவற்றையும் வெளியிட அவருக்கு மனத்தடைகள் இருக்கலாம் – ஏனெனில் அப்படி அனைத்தையும் பதிவு செய்துள்ள வீடியோ கிளிப்புகளில் அவர்கள் பேசியதும், ஏசியதும், கூச்சலிட்டதும், விசிலடித்ததும், எமது தோழர்களை அடிக்கப் பாய்ந்ததும் கூட பதிவாகியிருக்கும். குறைந்த பட்சம்
அவர் பதிவில் எழுதியுள்ள கீழ்கண்ட வசனங்களை மட்டுமாவது எடிட் செய்து வெளியிடுமாறு கேட்கிறேன் –

சோபாசக்தி குறித்து சிற்றிலக்கிய வட்டாரத்தில் இயங்கும் எனது நெருங்கிய நன்பனிடம் நேற்றி தமிழச்சி வெளியிட்ட தகவலைச் சொன்னேன். அதில் உண்மையிருக்கலாம் என்று அவனும் என்னிடம் உறுதிப்படுத்தினான் – அதையொத்த வேறு சில தகவல்களையும் கூட பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அதை இந்தப் பதிவில் வைப்பது எனது நோக்கமல்ல; இது கருத்துரிமைக் காவாளித்தனத்தை மட்டும் தோலுரிக்கும் நோக்கத்தோடு
எழுதப்படுவதால். மேற்கொண்டு தொடர்கிறேன் –

லீனாவின் கவிதையின் ‘நான்’ அவரில்லை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு படைப்பை ஒருவர் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அது
நடைமுறையில் உள்ள ஒரு அரசியலின் மேலும் அதன் ஸ்தாபகர்களின் மேலும் மூத்திரம் பெய்கிறது; சாமர்த்தியமாக தனது நலன் சார்ந்த
ஆளுமைகளின் ஆண்குறிகளை லீனா அந்தக் கவிதையில் இழுக்கவில்லை – இது பற்றி குறைந்தபட்சமாக விளக்கம் கேட்பது கூட சோபாவின்
பார்வையில் ‘நர்சிம் வேலையாகி’ விடுகிறது. ஆனால், விளக்கமளிக்க மறுத்ததோடல்லாமல் கேள்யெழுப்புபவர்களை செருப்போடு அடிக்கப் பாய்வது மட்டும் “கருத்துரிமையைக் காப்பது, ஜனநயகத்தைக் காப்பது, முற்போக்கு, கலகம், கன்றாவி.. இத்யாதி இத்யாதி” நல்லா இருக்குடா உங்க
நாயம்..

அவரது இந்தப் பதிவை அவர் வெளியிடும் நேரம் தான் முக்கியமானது – சரியான தருணத்தில் ஒரு பார்ப்பன வெறியனையும் அவன்
ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்த தனித்து நின்று எமது தோழர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பு ஒரு மேட்டுக்குடி சீமாட்டியின் அலுக்கோசுத்தனத்திற்கும், செருப்பைத் தூக்கிக் காட்டியதற்கும், காவல் நிலையத்தில் வைத்து ஒரு கீழ்மட்ட தொழிலாளியை அடிக்கப் பாய்ந்ததற்கும் கிடைத்த எதிவினையை இப்போது பார்ப்பன நரித்தனத்தால் காயம்பட்டுக் கிடக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணோடு இணைவைக்கிறார். இதன் மூலம் இணையத்தில் இயங்கும் வினவுக்கும் ஜனநாயக புரட்சிகர சக்திகளுக்கும் எதிரான சிண்டிகேட்டுக்கு பெட்ரோல்கேனும் தீப்பெட்டியும் சப்ளை செய்து அம்பலப்பட்டுப் போகிறார்.

திருப்பூர் தியாகு குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்று யோசித்தேன்.. அப்புறம் முடிவை மாற்றிக் கொண்டேன்.

அவரு இப்பத்தான் “ஆட்டையை ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்; நீங்க திரும்ப புரோட்ட போடுங்க; குட்டி நீ கோட்ட கவனிடா” என்று முதல் புரோட்டாவில் வாய் வைத்திருக்கிறார்.

விடியவிடியா ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் “உலகின் சகல ஜீவராசிகளுக்கும் மனிதர்களுக்கும் என்றும் மாறாத அன்பையே இயேசு – ச்சீ… ஸோ ஸ்ஸார்ரீ – காரல் மார்க்ஸ் போதித்தார்” என்று துவங்கியிருக்கிறார்.

ரெண்டாவது புரோட்டாவாக – “சுதந்திரம் கருத்துரிமை என்பதற்கு வர்க்க சார்பில்லை” என்றும்

அனேகமாக தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக காரல் மார்க்சுக்கும் இயேசு கிருஸ்துவுக்கும் இடையே குழம்பி விட்டார் என்று
நினைக்கிறேன்.

அவரோடு பின்னால் பொறுமையாக, விளக்கமாக உரையாடி புரியவைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். எனவே இந்த கெடா வெட்டில்
தியாகுவுக்கு பங்கு தருவதற்கில்லை. தோழர்கள் அவரைச் சாடி பின்னூட்டமிட வேண்டாம் – பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

ஜூன் 3, 2010 Posted by | Alppaigal, உண்மைத்தமிழன், கார்பொரேட் ஜெயேந்திரன், நர்சிம், பதிவர் வட்டம், போலி கருத்துரிமை, culture, facist, politics, tamil blogsphere, terrorism | 8 பின்னூட்டங்கள்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

நர்சிமின் பார்ப்பன நரகல் புத்தியை மிகக் கச்சிதமாக அம்பலப்படுத்தியிருக்கும் வினவின் இந்தப் பதிவை முதலில் வாசித்து விடுங்கள். ஏற்கனவே வினவு தளத்தின் பின்னூட்டத்தில் நர்சிமுக்கு எனது கண்டனத்தையும் அப்பதிவுக்கான எனது ஆதரவையும் தெரிவித்துள்ளேன். மீண்டும் அதை இங்கே வலியுறுத்துகிறேன். கண்டனம் எனும் அம்சத்திலும் அதையும் கடந்து நர்சிமின் மன அழுக்கின் சாதியப் பின்னணியையும் வினவு தோழர்கள் ஏற்கனவே சிறப்பாக தோலுரித்திருக்கிறார்கள்.

இப்போது புதிதாக வலைபதிவர்களின் எட்டுப்பட்டி பஞ்சாயத்து  நாட்டாமையான உண்மைத் தமிழன் எனும் பெயரில் எழுதும் சரவணன் சவடமுத்து ஏதோ குடும்பத்தில் சின்னப் பிரச்சினை, இதில் நம்ம குடும்ப மெம்பர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் – வினவு கருத்து சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு அரிய கருத்தை உதிர்த்திருக்கிறார்.

முதலில் வினவு தோழர்கள் வலைபதிவர்கள் இல்லை என்று தீர்ப்பு எழுதும் உரிமையை இவருக்கு கொடுத்தது யார்? ஏதோ வினவு தளத்தை இவர் தான் பின்னூட்டமிட்டு பிரபலப்படுத்தியதாக பீற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் எமது தோழர்களுக்கு உம்மைப் போன்ற பார்ப்பன சொம்பு தூக்கிகளின் அறிமுகத்தை நாங்கள் நாடி நிற்பது எனும் நிலையே எமது அரசியலுக்கு நேர்ந்த ஆகக் கேவலமான இழுக்கு. அவ்வாறிருக்க எமது தோழர்கள் எப்போது உங்கள் அறிமுகத்தை நாடி நின்றார்கள் என்பதையும் உம்மை எப்போது ஒரு ப்ளாட்பார்மாக பயன்படுத்தினார்கள் என்பதையும் விளக்கும் யோக்கியதை உமக்கு இருக்க நியாயமில்லை – ஆனால், கேட்கும் தைரியம் எமக்கு இருக்கிறது.

துக்ளக்கையும் இன்னபிற பார்ப்பன கழிசடைத் தத்துவங்களையும் தூக்கிப்பிடிக்கவும் சக்கீலாவை ஜொள்ளுவிட்டு இரசிக்கவும் உப்புமா
திரைபடங்களுக்கு விமர்சனம் எழுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உமக்கு எப்படி உரிமை இருக்கிறதோ.. அதை விட அதிகமாக மக்கள்
அரசியலைப் பேசவும் மக்கள் விடுதலைக்கான தத்துவத்தை இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் உயர்த்திப்பிடிக்கவும் எமக்கு உரிமை இருக்கிறது.

இப்போது நான் கலைந்து போன பதிவர் சங்கம் எனும் கூழ்முட்டையை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை அந்தக் கூழ்முட்டை பொரித்திருந்து
அதற்கு சரவணன் சவடமுத்து (உண்மைத்தமிழன்) பொறுப்பாளராய் இருந்த்திருந்தால் எமது அரசியலைப் பேசும் உரிமைக்கு என்ன கதி
நேர்ந்திருக்கும்? பதிவர் சங்கம் எனும் அலையில்லாத கடலை விமர்சித்து விட்டதால் எமது தோழர்கள் மேல் வன்மத்தைக் கக்கும் உண்மைத்தமிழன்,
அப்படியான பொறுப்பில் இருந்திருப்பாரேயானால் எம்மேல் தனது வீட்டோ  அதிகாரத்தை செலுத்தி எமது குரல்வளையை நெரிக்கத் தயங்கியிருக்க
மாட்டார்.

இதைத் தான் லீனா விவகாரத்தின் போது ஒரு பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். உமது சுதந்திரம் என்பது எமது உரிமையை மறுக்கும். ‘நடுநிலையான’ கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்ற ஒன்று கிடையவே கிடையாது. லீனா விவகாரத்தில் நேரில் சென்று கேள்வி எழுப்பும் எமது உரிமையை மறுப்பதன் மூலம் தங்கள் கருத்துரிமையை நிலைநாட்டிக் கொண்ட உ.த உள்ளிட்ட லும்பன்கள், இப்போது சகோதரி சந்தன முல்லையை நாக்கூசும் விதத்தில் போலி டோண்டுவுக்கு எந்த வகையிலும் குறையாத வகையில் ஆபாசமாக நர்சிம் எழுதியுள்ளதை ‘குடும்ப பிரச்சினை’ என்று அமுக்கப் பார்க்கிறார்.

வினவு தளத்தில் வெளியான ஒரு பின்னூட்டத்திற்காக வினவு தோழர்களை கூண்டில் ஏற்றுகிறார் ச.சவடமுத்து. அதே வினது தளத்தில் வேறு பல
பதிவுகளில் எமது தோழர்களின் பிறப்பு முதற்கொண்டு இழித்துப் பேசி பின்னூட்டங்களை பார்ப்பன கும்பல் எழுதிக் கொண்டிருந்த போது எதைப்
பிடுங்கிப் போட போயிருந்தார் என்று தெரியவில்லை. வினவு ஆரம்பத்திலிருந்தே எப்படியான பின்னூட்டங்களையும் கூட தடுத்து வைப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி பல சந்தர்பங்களில் சகபதிவர்கள் சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை. இதற்கு நானே ஒரு உதாரணம் – சமீபத்தில் டோண்டுவின் மகள் பற்றி ஒரு தகவலை எவனோ ஒரு லூசு வெளியிட்டதை நான் சுட்டிக் காட்டிய பின் நீக்கியிருக்கிறார்கள். பதிவில் தவறான தகவல்களைச் சுட்டிக் காட்டி வரும் பின்னூட்டங்களை – அது அனானிமஸாக இருந்த போதும் கூட – திருத்தியிருக்கிறார்கள். கமெண்ட் மாடரேஷனை ஆரம்பத்திலிருந்தே கடைபிடிக்காத வினவு தளத்தை அதில்
வெளியார்கள் இடும் பின்னூட்டங்களுக்கு பொறுப்பாக்கி பதிவின் மைய்யமான விசயத்திலிருந்து எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.

நட்பு எனும் பெயரில் இணைந்துள்ள குடும்பமாம். யாரு காதுல சாமி பூ சுத்தறீங்க? யாருக்கும் யாருக்கும் நட்பு? இங்கே இயங்கிக் கொண்டிருக்கும் எல்லோரும் நிஜ உலகில் நிலவும் ஏதோவொரு கருத்தையோ தத்துவத்தையோ அரசியலையோ பிரதிபலித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள் – நீங்கள் துக்ளக்கை பிரதிபலிப்பது போல. அவ்வாறிருக்க நட்பு என்பது ஏற்றுக் கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏற்படுவது தானேயன்றி எதிரெதிர் துருவங்களுக்குள் நட்பு என்று சொல்வது ‘காதுல பூ’ கதை தான்.

தனது எழுத்தின் மூலம் கடுமையான விசத்தைக் கக்கி ஒரு பெண்ணை அவரது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் எழுத்தின்
மூலம் குத்திக் கிழித்துள்ள நர்சிம்மை சும்மா அப்படியே உண்மையார் வருடிக் கொடுக்கிறார். அவுக மாப்பு கேட்டுட்டாகளாம் அது அவுக குடும்ப
மேட்டராம். யோவ் வெண்ணை.. அந்த நாதாறி புனைவு எனும் பெயரில் போலி டோண்டுத்தனமாய் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி எழுதிய
போது எங்கே போய் மேய்ந்து கொண்டிருந்தது உன் புத்தி. ‘குடும்ப பிரச்சினை’ என்று சொல்லிக் கொண்டு நீ இப்போது சொம்பைத் தூக்கிக் கொண்டு கிளம்பி வந்திருக்கிறாயே… அந்தச் சகோதரி அசிங்கப்பட்டு நின்ற போது எங்கே போயிருந்தாய்?

அதான் போலி டோண்டு மூர்த்தி மன்னிப்பு கேட்டு எழுதிக் குடுத்தாச்சில்ல.. அப்புறமும் ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறாய். குடும்பப் பிரச்சினை
என்று விட்டுவிட வேண்டியது தானே.. அவன் விசயத்தில் குடும்ப பிரச்சினை இல்லை – இன்னொரு பெண்ணின் பிரச்சினையின் போது மட்டும் குடும்பப் பிரச்சினையா? உனக்கு ஒரு நாயம் அடுத்தவிங்களுக்கு ஒரு நாயமா? மூஞ்சப் பாரு மூஞ்ச

தனது பதிவு நெடுக “அவர்கள் vs நாம்” எனும் பதத்தைப் பிரயோகிக்கும் ச.சவடமுத்து, “அவர்களை” ஆதரிக்கும் எல்லோரையும் பதிவர்கள் இல்லை
என்று தீர்ப்பெழுதுகிறார் – மறைமுகமாக மிரட்டுகிறார். மேட்டுக்குடி பார்ப்பனியவாதிகளின் காலைக் கழுவிக் குடிக்கும் அடிமைத்தனத்திலிருந்து
எழுகிறது உண்மைத்தமிழனின் வார்த்தைகள். அது நரகல் தோய்ந்த விஷ வரிகள். தன்னையொத்த அல்பைக்கூட்டத்தோடு சிண்டிகேட் அமைத்து
எமது தோழர்களைத் தனிமைப்படுத்தி விட முடியும் என்று பகல்கனவு காண்கிறார். அந்தோ பரிதாபம்… எமது தோழர்களின் பதிவுகளுக்கு வரும் வருகையாளர்களின் எண்ணிக்கையின் உயர்வு என்பது எமது அரசியல் நேர்மையிலிருந்தும் சித்தாந்த வலிமையிலிருந்தும் மக்களின் பால் ஒரு கம்யூனிஸ்டு கொள்ளும் மாறாத காதலின் வெளிப்பாடுகளிலிருந்துமே ஏற்படுகிறது எனும் எளிய உண்மை சவடமுத்துவுக்கு விளங்கவில்லை.

அது விளங்கவும் விளங்காது. தனது டாஸ்மார்க் கடையில் ஈயோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே உருபெற்று எழும் புரட்சிகர அரசியலுக்கான
அங்கீகாரத்தையும் வரவேற்பையும் அவரால் விளங்கிக் கொள்ளவியலாத பொறாமையிலிருந்தே தனது பதிவை எழுதியிருக்கிறார். வினவு தான்
பதிவுலகில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவை ஏற்படுத்துகிறதாம்.. வினவு தனது நர்சிம் பதிவில் தெட்டத் தெளிவாக எப்படி நர்சிமுக்கு
ஆதரவாக பார்ப்பன பதிவர்கள் கள்ளக் கூட்டு அமைத்துள்ளார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளனர். அந்த விவரங்களில் தொனிக்கும் உண்மைக்கு
அருகில் கூட ச.ச.முத்து செல்லவில்லை – அது முடியவும் முடியாது. ஒதுங்கி நின்று சேறடித்துப் பார்க்கிறார்.

தோழர் அசுரன் லீனா விவகாரத்தில் இவர்களின் கள்ளக் கூட்டணியை அம்பலப்படுத்தி எழுதியதில் பலமாக காயம்பட்டுப் போன உண்மைத்தமிழன், இப்போது “அவர்கள் vs நாம்” அரசியலை நடத்துவதன் மூலம் தனது காயங்களுக்கு மருந்திட்டுக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். இவர் பேசும் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் யாருக்கு? மாற்றி மாற்றி சொரிந்து விட்டுக் கொள்ளும் சொம்பு தூக்கிகளுக்கும் லும்பன்களுக்கும் தான். இவர்கள் அமைப்பதாக சொல்லிக் கொண்டிருந்த – கூழ்முட்டையாகிப் போன – பதிவர் சங்கம் என்பதும் கூட உண்மைத்தமிழனை ஒத்த லும்பன்களின் முதுகு சொறிஞர்கள் சங்கம் தான்.

ஆனால் எமது தோழர்களோ பதிவுலகை ஒலிக்காத குரல்கள் ஒலிக்கச் செய்வதற்கான தளமாகக் காண்கிறார்கள். வெகுஜன ஊடகங்களால்
பேசப்படாத மக்களின் வேதனைகளை பதிவு செய்யும் ஒரு மாற்று ஊடகமாக இணையத்தைப் பாவிக்கிறார்கள். புதிதாய் உருவாகும் ஒரு உலகின் பிரதிநிதிகளாய் செத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் காதுகளில் இடியாய் இறங்கிக் கொண்டுள்ளது எமது தோழர்களின் எழுத்துக்கள். இணையத்தில் இயங்கும் எமது தோழர்கள் இத்தனை வருடங்களாக எழுதி, இணையவெளியில் பிரிக்க முடியாதவொரு அங்கமாக நிரந்து நிற்கும் பதிவுகள் அத்தனையுமே இதற்கு சாட்சி.

யாரை யார் பதிவர்கள் இல்லை என்று தீர்மானிப்பது? சாக்கடையில் புரளும் பன்றி அந்தச் சாக்கடையே உலகம் என்று நம்பிக் கொள்ளுமாம்.
மொக்கைப் படங்களுக்கெல்லாம் என்பது பக்கத்தில் விமர்சனம் எழுதுவதும், தம்பி – அண்ணே கூழைத் தனமாய் குழைந்து திரிவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது முதுகில் குத்திக் கொள்வதும், தனது தனிமனித கோழைத்தனங்களூடாய் சமூகத்தைப் பார்த்துப் பதிவதுமே இத்தனை காலமாய் இந்த ச.ச. முத்து (அலைய்ஸ்) உண்மைத்தமிழன் எழுதி வந்துள்ள விசயங்கள். மிஞ்சிய நேரத்தில் துக்ளக் தனமான அரசியல் கருத்துக்களை உளரிக் கொட்டிக் கொண்டிருப்பதே இவரது அலுப்பூட்டும் மெகா சைஸ் பதிவுகளின் சாராம்சம். இப்படி சுகமாய் சொறிந்து கொள்வதே வலைப்பதிவுகள் எனும் அளவில் மட்டுமே வலைப்பதிவுகளையும் பதிவுலகையும் புரிந்து கொண்டுள்ளார். இவர்  தான் எமது தோழர்களை பதிவர்கள் இல்லை என்று தீர்ப்பெழுதுகிறார். நல்ல காமெடி.

நரி நாட்டாமை செஞ்சா கிடைக்கு ரெண்டு கேக்குமாம்..!

(கூகிள் ரீடரில் உ.த பதிவைப் படித்ததால் பின்னூட்டங்களை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் எதையாவது சேர்க்க வேண்டும் என்றால்
சேர்க்கப்படும்)

ஜூன் 1, 2010 Posted by | Alppaigal, கார்பொரேட் ஜெயேந்திரன் | , , , , | 23 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: