கார்க்கியின் பார்வையில்

அங்காடித் தெரு – விமர்சனங்கள் மேலான விமர்சனம்..!

முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது வித்தியாசமான திரைப்படம்; வித்தியாசமான கதைக் களம்; சாமர்த்தியமான
ஷார்ப்பான வசனங்கள்; தென் தமிழகத்து நாடார் இளைஞர்கள் மேல் அதே சாதி முதலாளிகள் அவிழ்த்து விடும் சுரண்டலை முதன் முறையாக பேசிய படம்; பல பின்னவீனத்துவ குறியீடுகளை கொண்ட படம் (அதெல்லாம் என்னான்னு கேட்காதீங்க – எனக்குத் தெரியாது); நாயகியின் உடல் மொழி ஒரு எட்டாவது உலக அதிசயம்; ஜெயமோகனுக்கு ஜெய் – ம்ம்ம்ம்….இந்தக் கடிவாளமிடப்பட்ட முற்போக்குக் கழுதைகள் சுற்றித் திரியும் ஊரில் அக்கப்போரில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..

படத்தில் சொன்ன விஷயங்களைக் கொண்டு நல்ல பல விமர்சனக் கட்டுரைகள் வலைத்தளங்களில் வெளியானது.. ஆனால் இதில் சொல்லாத சில விஷயங்களும் இருக்கிறது; அல்லது சொன்ன விஷயங்களின் இடைவெளிக்குள் வேறு சில உண்மைகளும்
பொதிந்திருக்கிறது. அதில் ஒன்று சரவணா ஸ்டோ ர்ஸுக்கு எந்த விதத்திலும் குறையாமல் ஊழியர்களை ஒடுக்கிச் சுரண்டும் இன்னொரு கடையினருக்கு டைட்டிலில் நன்றி தெரிவித்திருப்பது. பொதுவில் நாடார் சாதி முதலாளிகள் மிக அடிப்படையிலேயே சுரண்டலும், போலிப் பெருமிதமும் கொண்டவர்களாக இருக்கையில் ஒரு குறிப்பிட்ட கடையை குறி வைத்தது போல திரைக்கதையை அமைத்திருப்பது இன்னொன்று. அடுத்து முக்கியமாக நான் கருதுவது ஒடுக்குமுறையின் மேலான கோபத்துக்கு கச்சிதமாக மடை போட்டு ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் செலுத்தியிருப்பது.

இங்கே பதிவுலகில் அங்காடித் தெரு நாயகன் நாயகிக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து குமுறியவர்களின் குமுறல் உணர்ச்சி எத்தகையது? இந்த உணர்ச்சி ஓரிரு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வடிந்து போய் விடுமா இல்லை அதைத் தாண்டிச் சென்று வினையாற்றுமா? “அடப்பாவமே இவாளெல்லாம் இந்த ம்ருஹங்களை அடச்சி வச்சி கஷ்ட்டப்படுத்தறாளே” என்று மிருகக் காட்சி சாலையின் கூண்டுகளுக்கு முன் நின்று உச்சுக் கொட்டும் பரிதாப உணர்ச்சிக் குரல்களைக் கேட்டிருக்கிறீர்களா? அரசியல் ஏதுமற்ற வெறும் பரிதாபம் தான் அது. டிக்கெட்டுக்கான நேரக் கெடு முடிந்து மிருகக்காட்சி சாலையின் கேட்டைக் கடந்த உடன் வடிந்து போகும் பரிதாப உணர்ச்சி அது. இங்கே திரையரங்கை விட்டு வெளியேறி ஒரு பதிவும் சில பின்னூட்டங்களும் வரையில் தாக்குப் பிடித்து நிற்பது கொஞ்சம் பாராட்டக் கூடியது தான்.

அடப்பாவிகளா சொந்த சாதிக்காரனைக் கூட இந்த அண்ணாச்சிகள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்களே.. என்று பரிதாபம் காட்டுபவர்கள் விஷயத்தின் முழு உண்மையை அறிந்தவர்களல்ல. தமிழ்நாட்டில் சொந்த சாதியினரைத் தான் சுலபத்தில் சுரண்ட முடியும். பிரிக்காலில் ஏழை நாயுடுகள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏழை நாடார்கள், சக்தி குழுமங்களில் ஏழை கவுண்டர்கள்.. இப்படி இங்கே தொழில் நிறுவனங்கள் எல்லாம் சாதிச் சங்கங்களின் கிளைகள் போலத் தானே விளங்குகிறது. திருமாவுக்கு தலித்துகள் எப்படியோ ராமதாஸுக்கு வன்னியர்கள் எப்படியோ அப்படித்தான் அண்ணாச்சிகளுக்கு அவர்களது ஊழியர்கள். அண்ணாச்சிகள் கடும் உழைப்பாளிகள் என்பது உண்மை – அதிகாலையில் எழுந்து மார்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவதில் தொடங்கி இரவு பதினோரு மணிக்கு கடையெடுத்து வைக்கும் வரை அவர்களின் உழைப்பு அசாதாரணமானது – இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அதே சாதியைச் சேர்ந்த எல்லா பணக்கார முதலாளிகளும் அதே அளவு உழைப்பாளிகள் இல்லையென்பதும், அவர்களின் வெற்றிக்கு உழைப்பு மட்டுமே காரணமில்லை என்பதும்.

தமிழகம் முதலாளித்துவம் ஓரளவு வளர்ந்த மாநிலம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மத்திய காலத்திய ஐரோப்பாவைப் போல் அல்லாமல் அந்த மூலதனம் என்பது தனது வளர்ச்சிக்கு நடப்பிலிருக்கும் அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் (பார்ப்பனியத்தை) தனக்குள் சுவீகரித்துக் கொண்டே வளர்ந்துள்ளது. இங்கே உள்ளூர் மூலதனமும் தொழிற்சாலைகளும் சாதிச் சங்கங்களைப் போலவே அணி சேர்ந்து நிற்கிறது.

யார் இந்த சாதிக்காரர்கள்? ஒரு சாதியினர் தொழில்களில் அதிகளவு ஈடுபடுவதால் மட்டுமே அந்த மொத்த சாதியினரும் தொழில்மயமாகி விட்டதாக சொல்லி விடமுடியுமா? ஒரு சாதியின் எல்லா அங்கத்தினரும் சமமான சமூக அந்தஸ்த்து கொண்டவர்களா?

இல்லை என்பது தான் பதில். உதாரணமாக, நாடார்கள் என்று குறிப்பிடுவது முதலில் ஒரே சாதி அல்ல. அது ஒரு அம்ப்ரெல்லா பெயர் (Umbrella name) சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாடார்கள் என்று ஒரு சாதி கிடையாது (அது ஒரு பட்டம் (அ) சிறப்புப் பெயர்). சாணார், கிராமனி, பணிக்கர், ஈழுவ, என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர்களை இணைத்து தான் இன்றைய நாடார் சாதியே உருவாக்கப்பட்டது. அதில் ‘நாடான்’ என்பது அப்பகுதியில் நிலங்களை வைத்திருந்த சிலருக்கு இருந்த சிறப்புப் பெயர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தழுவிய சாதி என்பது வெகு சிலது தான். பார்ப்பனர்கள் பரவலாக தமிழகம் தழுவி இருந்தனர். நாயக்கர்கள், செட்டியார்களும் தமிழகம் தழுவி இருந்தனர். இவர்களுக்கு அதற்கான வரலாற்றுப் பின்புலம் இருந்தது.

இதையெல்லாம் அவ்வளவு எளிதில் இன்றைய நாடார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். செப்புப்பட்டையம் தாமிரப் பட்டயம் என்று தங்களை சந்திர குல ஷத்ரியர்களாக காட்டிக் கொள்ளும் முனைப்பு இன்றைய நாடார்களுக்கு நிறையவே இருக்கிறது – ஆனால் இன்றும் அரசு ஆவணக் காப்பகத்தில் இருக்கும் அன்றைய ஆவனங்களும் கால்டுவெல் போன்றோர் எழுதிய குறிப்புகளும் அவர்களுடைய பாண்டிய குல பெருமைக்கு தடையாகவே இருக்கிறது.

இன்றைக்கு இடைநிலைக் கட்டத்திலிருக்கும் சாதிகள் ஒவ்வொரு வட்டாரத்துக்குட்பட்டவை தான். உதாரணமாக இன்றைக்கு குரும்பர் என்று அழைக்கப்படும் சாதியிலேயே குரும்பர், குரும்பா, குருபா, உள்ளு குருபா, ஹாலு குருபா என்று பல ‘பிரிவுகள்’ இருக்கின்றது. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சார பின்னணி, பொருளாதார பின்னணி இருக்கிறது. ஆனால் நாடார்கள் என்று ஒரே பெயரால் அழைக்கப்படுபவர்கள் மத்தியில் இன்றைக்கு இந்த உட்பிரிவுகள் மிகவும் மெல்லியதாய் இருக்கிறது – அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. தென்மாவட்டங்களில் இருந்த சாணார், கிராமணி போன்றவர்களையும் சேர்த்து இணைத்து ‘மாஸ்’ காட்டுவதில் ஏற்கனவே ஆதிக்க நிலையில் இருந்த நாடார்களின் நலனும் இருந்தது.

இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் நாடார்கள் எல்லோரும் பனையேறிகள் அல்ல. பழைய பனையேறிகள் எல்லோரும் சின்ன மளிகைக்கடை நடத்துவோராகவோ அல்லது பெரும் முதலாளிகளிடம் கூலிக்கு வேலை பார்ப்பவராகவோ தான் இருக்கிறார்கள். டோண்டு சொல்வது போல எல்லா நாடார்களும் அரசை எதிர்பார்க்காமல் சுயமாக தொழில் செய்து தானே சுயம்புவாக முன்னேறி விடவில்லை. ஏற்கனவே ஊரில் நிலம் நீச்சு என்று இருந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழில்களைக் கைப்பற்றியுள்ளனர். ஊரில் பராரியாக இருந்த பனையேறி இங்கும் பராரியாகத் தான் இருக்கிறார். பணம் படைத்த நாடார்களுக்கு பனையேறிகளின் எண்ணிக்கை பலம் தேவை அவ்வளவு தான்; மற்றபடி அவர்கள் வேறு யாரும் தம்மை பனையேறி என்று அழைப்பதையே கூட கேவலமாக கருதிக் கொள்வார்கள்.

மேலும் இந்த நவீன கொத்தடிமைத்தனம் ரங்கநாதன் தெருவோடு முடிந்து விடுவதோ – நாடார்களின் தனிச் சிறப்போ அல்ல. இதை விட கேடு கெட்ட கொத்தடிமைத்தனத்தைக் கண்டிருக்கிறேன். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எம்ஜாலில் இருக்கும் வீரமணி பிஸ்கட் இண்டஸ்ட்ரீஸில் அங்காடித்தெருவில் காட்டியதை விட ஆயிரம் மடங்கு அதிக கொத்தடிமைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அதன் முதலாளி வீரமணி நாடார் – இது நான் நேரில் கண்டது. வீரமணி நாடாரை மிஞ்சும் கொத்தடிமைத் தனத்தை கடப்பா மாவட்டம் கிரானைட் குவாரிகளில் ரெட்டிகளும், கம்மவார் நாயுடுகளும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். பிரிக்காலின் நாயுடு முதலாளியின் கொடுமையும், சக்தி குரூப் கவுண்டர் முதலாளியின் கொடுமைகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. இவர்களுக்கெல்லாம் அப்பன்மார்கள் தான் வால்மார்ட், ஜீ.ஈ, கோக், பெப்சி முதலான பன்னாட்டு முதலாளிகள். சீனத்தில் பல தொழிலாளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சரியான ஊதியம் கூட தராமல் கசக்கிப் பிழிந்து தயாரிக்கப்படும் பொம்மைகளோடு தான் உங்கள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“என்னா இருந்தாலும் இந்த சைனீஸ் கூட்ஸ் எல்லாம் ரொம்ப சீப்பு சார்” என்று சப்புக் கொட்டிக் கொண்டே “அங்காடித் தெரு பார்த்தீங்களா… ராஸ்கல்ஸ் என்னா கொடுமை சார்..?” என்று அங்கலாய்த்துக் கொள்ளும் குரல்களை சமீபமாக நிறைய கேட்கிறேன்.

மூலதனத்துக்கு சாதி, மொழி, இனம், எல்லைகள் என்று எதுவுமே கிடையாது. அங்காடித் தெரு அஞ்சலியின் சோகத்திற்கு எந்த அளவிலும் குறையாத சோகம் அந்த சீனத்துத் தொழிலாளியின் சோகம். உணர்ச்சிக்கு அறிவு கிடையாது. இன்னார் மேல் கோபம் – அதைவிட அதிக அநியாயம் செய்த இன்னொருவர் மேல் கோபமில்லை என்று பகுத்துப் பார்க்கும் அறிவு உணர்ச்சிக்கு இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது போலி உணர்ச்சி. அங்காடித் தெரு அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகத்துக்காக அண்ணாச்சிகளின் மேல் ஆத்திரப்படும் மக்கள் அதை விட அதிக சோகத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மேலும் ஆத்திரப்பட வேண்டும். அப்போது தான் அது நேர்மையான உணர்ச்சியாக இருக்கும்.

திரையரங்கை விட்டு வெளியேறியதும் எழும் கண நேர உணர்ச்சியின் உந்துதலுக்கு ஆயுசு எத்தனை நேரம்? இதே பதிவுலகில் எத்தனையோ
பதிவுகளில் “சுதந்திரச் சந்தையில் விளையும் போட்டியால் சேவைகளின் விலைகள் குறைந்து நுகர்வோருக்கு நலனே விளைகிறது” என்று அதியமான் பேசியபோதெல்லாம், அந்த குறைந்த விலை ‘ரங்கநாதன் தெரு சட்டையின்’ பின்னே வழியும் அஞ்சலியின் கண்ணீரை எத்தனை பேர் கண்டுணர்ந்தீர்கள்?

அங்காடித் தெரு திரைப்படத்தில் எனக்கு இருக்கும் விமர்சனம் ஒன்று தான். நடந்த சம்பவங்களை ஒரு சில தனிநபர்களோடு சுருக்கி
விட்டிருக்கிறார்கள்.. எங்கள் செல்போன் சேவையில் கட்டணம் குறைவு என்று கூவியழைக்கும் விளம்பரங்களுக்குப் பின்னும் ஒரு அண்ணாச்சி இருக்கிறார் – என்ன.. அவரு கொஞ்சம் பெரிய அண்ணாச்சி; பேரு கொஞ்சம் ஸ்டைலா அனில் அம்பானின்னு இருக்கும். குறைந்த விலையில் நிறைந்த நுகர்வு என்பதன் பின்னணியில் தொழிலாளர்களை சுரண்டுவது தான் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகளின் அடித்தளம் என்றால் அதுவே தான் அம்பானிகளின் அடித்தளமும் கூட. என்ன.. அவர்கள் கொஞ்சம் ஹைடெக் என்பதோடு தமக்கு சாதகமாய் அரசு அரசாங்கம் சட்டம் போலீசு என்று சகலத்தையும் வளைக்கும் வல்லமை கொண்ட பெரிய அண்ணாச்சிகள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகனின் உணர்ச்சி கடிவாளம் போட்டது போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தையும் அதன் முதலாளியையும் மாத்திரம் நோக்கிப் பயணப்படுகிறது – அது நேர்மையான உணர்ச்சியாக பொதுவான சுரண்டலை எதிர்த்துக் கிளர்ந்து எழ மறுக்கிறது.

வலைத்தளங்களில் வந்த விமர்சணங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு சில அண்ணாச்சிகளின் மேல் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தாக்குப்பிடிக்கும் செல்லக் கோபமாக சுருங்கி விட்டது தான் வருத்தம். நேர்மையாகப் பார்த்தால் இது உலகளாவிய மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிரான கோபமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இது எட்டி நின்று வேடிக்கை பார்த்து உச்சுக் கொட்டி நகர்ந்து விடும் குட்டிமுதலாளித்துவ போலி உணர்ச்சி. இதற்கு வக்கணை பேச மட்டும் தான் தெரியும்; வினையாற்றத் துப்புமில்லை யோக்கியதையுமில்லை. மிருகக் காட்சி சாலையின் மிருகங்களின் மேல் வெளிப்படும் பரிதாபத்திற்கும் அஞ்சலியின் மேல் இவர்கள் காட்டும் கரிசனத்துக்கும் வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை
தான்.

ஏப்ரல் 5, 2010 - Posted by | Alppaigal, culture, Films, Uncategorized | ,

20 பின்னூட்டங்கள் »

 1. அங்காடி தெரு தோற்றுவித்திருக்கும் இன்ஸ்டென்ட் மனிதாபிமானத்தை யாராவது எழுதுவார்களா என்று காத்துக் கொண்டிருந்தோம்!

  நன்றி!!

  பின்னூட்டம் by வினவு | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 2. //நடந்த சம்பவங்களை ஒரு சில தனிநபர்களோடு சுருக்கி
  விட்டிருக்கிறார்கள்.. எங்கள் செல்போன் சேவையில் கட்டணம் குறைவு என்று கூவியழைக்கும் விளம்பரங்களுக்குப் பின்னும் ஒரு அண்ணாச்சி இருக்கிறார்//

  என் ஜி ஓ படம்? பிரச்சினைகளை மட்டும் பேசுவது அதன் அரசியல் உள்ளடக்கத்தை கவனமாக மறைத்து விடுவது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம் அல்லவா?

  படம் பார்த்த சில தோழர்களும் உங்களது கருத்தையே சொன்னார்கள்

  பின்னூட்டம் by பூச்சாண்டி | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 3. நன்னா ஷோன்னேள் போங்கோ! சென்னை சில்க்ஸ் , ஆர் எம் கே வி , நல்லி மாதிரியான நல்லவங்க கடைலயே இனிமே துணி வாங்குங்கோ..

  பின்னூட்டம் by அதிஷா | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 4. உண்மையான அலசல். நல்ல நேர்மையான பகிர்வு.

  What next என்ற கேள்வியை எழுப்புவதுதான் ஒரு நல்ல படைப்பின் நோக்கம் அந்த அளவில் இது வெற்றி பெறுகிறது.

  பின்னூட்டம் by வடகரை வேலன் | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 5. உணர்வுக​ளை மி​கைப்படுத்திக் காட்டும் ​கோடம்பாக்கத்துக்காரர்களில் வசந்தபாலன் விதிவிலக்கல்ல. உலகப்பட மா​யையில் சிக்கிக்​கொண்டிருக்கிறார் வசந்தபாலன். அவருக்குத் ​​தே​வை ​நெஞ்​சை உலுக்கும் ஒரு தீம். மற்றபடி, சமூகத்தின் மீது கரிசன​மோ, வர்க்கச் சிந்த​னை​யோ கி​டையாது.

  பின்னூட்டம் by மு.வி.நந்தினி | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 6. ட்ராபிக் சிக்னல் ( ஹிந்தி ) தோற்றுவித்த தாக்கம் அங்காடி தெரு ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதை தான் பேசாக வைத்து கதை பண்ணியது, அதில் வேலை செய்த என் நண்பர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தோற்றுவிட்டார்கள். ஜெயமோகனின் நாகர்கோவில் வசனங்கள், திருசெந்தூர் வழக்கத்திற்கு ஈடாகாது. அங்கு ஈயம் உலகம் தொழில் பட்டறை வைத்திருக்கும் மாமா சொன்னது, மொழியால் பூ சுத்துறாங்கப்பு!

  நான் திருப்பூரை சேர்ந்தவன். ஒரு பிரபல சமூகத்தை சேர்ந்தவன். பாட்டாளிகள் வர்க்கம் என்று பறை சாற்ற விருப்பம் இல்லை. அங்கு இன்றும், கிட்டத்தட்ட கொத்தடிமை முறை ( பஸ் வந்து அழைத்து சென்று, திரும்ப டிராப் செய்யும் வசதி, உங்களுக்கு ரூமோடு – அதே கருமமான மெஸ் ), குழந்தை தொழிலாளர் முறை தான். பத்து வயசு பொடியன்ஸ் இன்றும் யாரவது ஆபிசர்கள் வந்து கேட்டால், பதினெட்டு என்று சொல்லும் பாங்கு உண்டு. பனியன் பீசுகளை அடுக்க, சிறு கைகளே உதவுகின்றன. நானும் என் அப்பாவின் தொழில் சாலையில் ( காட்டை வித்து, பனியன் கம்பெனி வைத்தார் ) விடுமுறையில் வேலை செய்துள்ளேன். பணம் செலவாவது தெரியாது. கந்து வட்டிக்காரர்கள் திளைக்கிறார்கள். இன்றும் சென்னை விட திருப்பூரில் சிக்கன் / மட்டன் பிரியாணி விலை அதிகம்.

  சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சிவகாசி சென்ற பொது, தீப்பெட்டி அடுக்கும் ( இன்றும் ) பொடியன்ஸ் பார்த்துள்ளேன். தீப்பெட்டி அடுக்கி சம்பாரித்து மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்த என் மாமா, இப்போது கோடீஸ்வரர், அங்கு அச்சாபீஸ் வைத்திருப்பதும் ஊருக்கு தெரியும். அய்யன் பட்டாசு ஆட்களை பற்றியும் அறிவேன்.

  எழுதி தான் நம் கோவத்தை அடைக்குகிறோம்.

  பின்னூட்டம் by Sureshkumar | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

  • என்ன செய்வது .தொடருந்து சமுகத்தை நினைத்து கொண்டுஇருக்கிறோம்

   பின்னூட்டம் by vaikarai | ஜூலை 23, 2010 | மறுமொழி

 7. ”எப்பவும் போல இவங்க இப்படித்தான் குறை சொல்லிக்கிட்டு இருப்பாங்க” இத படித்தவுடன் இந்த வார்த்தைகள்தான் என் மனதில் ஒலித்தது. நீங்கள் குறிப்பிடும் அந்த உணர்வின் தன்மைகள் மற்றும் பிரச்னை ரங்கநாதன் தெருவோடு சுருங்கி போவது என்பதில் மாற்று கருது இல்லை என்றாலும் நாடார் சாதியின் வரலாற்று பார்வை மற்றும் தற்போதைய நிலை , உழைப்பாளர்களின் உலகளாவிய நிலை என சுற்றி மீண்டும் படத்துக்கு வருகிறது உங்களின் பார்வை.இந்த உச்சு கொட்டி ஓடிவிடும் உணர்வை உங்களின் கட்டுரை எந்த விதத்திலும் அடுத்த நிலைக்கு மாற்றி விடவில்லை . அந்த படத்தில் காட்சிகள் எந்த இடம் வரை சரியாக பயணிக்கிறது எங்கு திசை மாறுகிறது எது சரியான திசை நடைமுறையில் அதன் வெற்றி தோல்விகள் அது சந்திக்கும் பிரச்சனைகள் அதன் பின் உள்ள சட்டம், நீதி அரசு அவர்களுக்கு பின் உள்ள அந்த முதலாளிகள் என சொல்லும் போதுதான் படிபவர்கள் அந்த படத்தின் தன்மையை புரிந்து கொள்ளமுடியும்.இணையத்தில் வாசிக்கும் நண்பர்கள் உங்களின் பார்வையை புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.
  தெரியாத பல விஷயங்களை உங்களின் கட்டுரை வாயிலாக தெரிந்து கொண்டேன் நன்றி .

  பின்னூட்டம் by baskar | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 8. நாலு சாதியில‌ நாலு முத‌லாளிக‌ளை ப‌ற்றி பேசிட்டா, நீங்க‌ ஒரு
  பொதும‌க‌னா நின்னு சாதிக‌ளை க‌ட‌ந்து நாட்டு ந‌ல‌னுக்கு ம‌ட்டும்
  ஜென்ம‌ம் எடுத்தவ‌னாகி விடுவீர்க‌ளா?
  உங்க‌ள் தைரிய‌ம் கோப‌ம் அதிகார‌ம‌ற்ற ப‌ண‌க்கார‌ர்க‌ளிட‌ம் ம‌ட்டுமே!
  இது போன்ற‌ (ப‌ட‌ம்/செய்தி)உந்துத‌ல் கிடைத்தால்,
  கொட்டு க‌ண்ட‌ பேய்க‌ள் தான். அம்பானி, வால் மார்ட்,கோக்
  பேப்சி பேரை சொல்லிவிட்டால், இன்னும் கொஞ்ச‌ம் உல‌க‌ப்பார்வை
  பார‌ட்ட‌ப்ப‌டும்.
  நீங்க‌ள் ப‌ட‌த்தில் சொல்லாம‌ல்,சொல்ல‌ப்ப‌டுவ‌தாய் சொல்லும் ந‌ப‌ர்
  எண்ப‌துக‌ளில், நில‌த்தை விற்று க‌டை தொட‌ங்கிய‌து ப‌ற்றி தொண்னூறின்
  இறுதியில் இப்போதைய‌ முண்ண‌ணி ஏடு `முன்னேறிய‌ உழைப்பாளிக‌ள்`
  என்ற‌ த‌லைப்பில் `காபி பில்ட‌ர் வித்தா, காபி எங்க‌டா, வெறும் பில்ட‌ர்
  ம‌ட்டும்தான‌டா இருக்குன்னு` கேட்டு மிர‌ட்டுர‌ மெட்ராஸா போற‌ன்னு`
  எங்க‌ள் ஊரில் ப‌ய‌ப்பட்டார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஊரில் வ‌ந்து அடிப‌ட்டு, அடிப‌ட்டு
  உழைத்து, உழைத்து இன்று, தெருவில் பாதியை வாங்கி விட்டார்கள் என்ப‌தால்
  வ‌யிறு எரிய‌த்த‌ன் செய்யும்.
  `இந்திய‌ன்` பாத்திட்டு எத்த‌னை பேர் ல‌ஞ்ச‌த்தை ஒழிச்சி, கிழிச்சி எரிஞ்சிங்க‌?
  `முத‌ல்வ‌ன்` பிற‌கு நல்ல‌ ஆட்சி செய்யிர‌வுக‌ள‌த‌ன் ஜெயிக்க‌ராங்க‌?
  பொட்ரோல் ப‌ங்க் அம்பானி ஆண்ட த‌லைமை திர‌ந்த‌ த‌னிக்க‌த‌வில் `உன‌க்கான‌
  ம‌ட்டும்` திருட்டு திட்ட‌த்தில்`திரு`வான‌வ‌ர்க‌ள்? ஆகாய‌த்தில் ஆர்ப்ப‌ரிப்ப‌வ‌ரின்
  ரிமோட் எந்த‌ நாட்டில்? பார்டிசிபொட்ட‌ரி நோட் மூல‌ம் வெளி ப‌ண‌த்தை
  (க‌ண‌க்கில் வ‌ராத‌ வெளி ந‌ட்டுப்ப‌ணம்) ஷேரில் 2007ல் சொருகிய‌தால் யுஎஸ்
  டால‌ர் 20% ச‌ரிந்து 50% திருப்பூர் அழிந்த‌து யாரால்? த‌மிழ் நாட்டில் பெரிய‌
  தொகைக்கு (வ‌ரி க‌ட்டிய‌ ப‌ண்ம்) இட‌ம் வாங்க‌/விற்க‌ முடியுமா?
  நீதி அர‌ச‌ர்க‌ள், நில‌பிர‌புக்‌க‌ளாக‌, அர‌சுசார் ப‌த்திரிக்கை ப‌ட‌ங்க‌ள் காட்டி ஏன்
  வ‌க்காள‌த்து? பாக்ஸய்ட், தாதுக்காக‌ மாவோஸிட்டுக்கும், எம் ஒயூஸ்ட்டுக்கும்
  த‌க‌ராறாம், அருந்த‌திராய் (ந‌ம்ம‌ள‌மாதிரி ஏசில‌ இல்லாம‌) காட்டுக்குள்ள‌ போயிட்டு
  வ‌ந்து சொல்ராங்க‌! ந‌ம்ம‌ ஊர் காவ‌லு தொகுதில‌ வாக்குக‌ள்‌ இல்லாம‌ வேற‌ மாதிரி?
  இடை தேர்த‌ல் எல்லாம் ச‌ட்ட‌ப்புத்த‌க‌ வ‌ரிக‌ளின் மாதிரியாய் ந‌ட‌க்கிற‌து?
  சுர‌ங்க‌ம் தோண்டுண‌முட்டு 4000 கோடியாம், கோடா கிட்ட‌? க‌ர்நாட‌க‌ அர‌சே கையை
  க‌ட்டுதாம் ரெட்டிக‌ளிட்ட‌? 73 ஆயிரம் கோடி சுவிஸ் பேங்க்ல‌ சும்மா சுவிங்க‌ம்
  சுவைச்சிக்கிட்டு, ப‌ல‌ப்ப‌ல‌ வ‌ருச‌ங்க‌ளாய் அங்கே, போட்ட‌வ‌னுங்க‌ திரியுராங்க‌
  ப‌ள‌ ப‌ள‌ப்பா இங்கே?
  விஷ‌ம் கொண்ட‌ அணகோண்டாக்க‌ள் நாட்டையே பின்னி ந‌சுக்கிக் கொண்டிடருக்கிற‌து.
  நாம் இங்கே நாக்க‌லாம் பூச்சியை பூத‌க்க‌ண்ணாடி வ‌ழியாய் திரையிலும், வ‌லையிலும்
  காண்பித்துக் கொண்டு பித்த‌ர்க‌ளாய் மாறிய‌ புத்த‌ர்க‌ளாய்.
  வாருங்க‌ள், வ‌ருங்கால‌த்திற்கு, உண்மையின் வ‌லிமை சொல்வோம்
  ப‌ண‌த்தின் ப‌ல‌கீன‌த்தையும் ம‌ற‌க‌காம‌ல், யாரிட‌மும் மால் வாங்காம‌ல்.

  பின்னூட்டம் by M.S.Vasan | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

  • 🙂

   பின்னூட்டம் by kaargipages | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

  • //நாலு சாதியில‌ நாலு முத‌லாளிக‌ளை ப‌ற்றி பேசிட்டா, நீங்க‌ ஒரு
   பொதும‌க‌னா நின்னு சாதிக‌ளை க‌ட‌ந்து நாட்டு ந‌ல‌னுக்கு ம‌ட்டும்
   ஜென்ம‌ம் எடுத்தவ‌னாகி விடுவீர்க‌ளா?//

   வேற என்னாங்க பண்ணலாம்?

   நல்லா ரோசிச்சு பாத்தும் எனுக்குப் புரியலை – நீங்களாச்சும் சொல்லிக் குடுங்களேன் 😀

   பின்னூட்டம் by kaargipages | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 9. […] This post was mentioned on Twitter by ஒரு பக்கம், டிபிசிடி. டிபிசிடி said: சுரண்டலும், இன்ன பிறவும் ( சாதி வித்தியாசமின்றி) பொருளாசைக் கொண்ட முதலாளிகளின் குணங்கள். http://bit.ly/9wnTBu @antonioanbu […]

  Pingback by Tweets that mention சுரண்டலும், இன்ன பிறவும் ( சாதி வித்தியாசமின்றி) பொருளாசைக் கொண்ட முதலாளிகளின் குணங்கள | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 10. probably you could have split the post into 2 volumes, for me it looks too long

  பின்னூட்டம் by ramji_yahoo | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி

 11. பின்னூட்டமிட்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..!

  பின்னூட்டம் by kaargipages | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 12. ஒரு பிரச்சனையின் மையத்தை விடுத்து விளிம்பில் தொங்கியே புரளி பேசும் பதிவர் கும்பலுக்கும், படத்தை அழகியல் கண்ணோட்டத்தில் பார்த்து மகிழும் வழக்கமான அறிவுஜிவி ரசிகர்களுக்கும் சிறந்தவிமர்சனம் இந்த பதிவு!

  வாழ்த்துக்கள் தோழர் கார்க்கி!

  பின்னூட்டம் by sittharth | ஏப்ரல் 6, 2010 | மறுமொழி

 13. mutrilum marupatta vimersanethai mun vaitha ungaluku nanri,.

  பின்னூட்டம் by aandon | ஏப்ரல் 7, 2010 | மறுமொழி

 14. mutrilum marupatta vimersanathai mun vaitha ungaluku nanri

  பின்னூட்டம் by aandon | ஏப்ரல் 7, 2010 | மறுமொழி

 15. I agree with u , the same thing i felt when i saw the movie .

  பின்னூட்டம் by Mathar | ஏப்ரல் 9, 2010 | மறுமொழி

 16. //திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகனின் உணர்ச்சி கடிவாளம் போட்டது போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தையும் அதன் முதலாளியையும் மாத்திரம் நோக்கிப் பயணப்படுகிறது – அது நேர்மையான உணர்ச்சியாக பொதுவான சுரண்டலை எதிர்த்துக் கிளர்ந்து எழ மறுக்கிறது//
  மிக சரியானது உங்கள் விமர்சனம்
  தோழர்

  வாழ்த்துக்கள் .

  பின்னூட்டம் by தியாகு | ஏப்ரல் 10, 2010 | மறுமொழி

 17. அங்காடித் தெருவை இன்னும் பார்க்க வில்லை.. ஆனாலும், படத்தின் ஒரு சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்ததிலிருந்து என் மனமும் உங்களுக்கு எழுந்த கேள்வியையே கேட்டது..

  எத்தனை பேர் இப்படத்தை தாண்டி யோசித்திருப்பார்கள்?? நேரடி கொத்தடிமைத் தனங்கள் மட்டுமே தெரிந்த நமக்கு, மெல்ல மெல்ல கண்ணுக்குத் தெரியாமல் ‘ஹைட்டெக்’காக கொள்ளை போய் கொண்டிருப்பது உணரப் படாத நிஜமே..

  ஒரு குறிப்பிட்ட சாதியினர் பற்றிய விரிவான விளக்கம் தலைப்பிலிருந்து விலகியே நிற்கிறது… ஆயினும், வரலாற்றை அறிய முடிந்தது..

  ரங்க நாதன் தெரு அல்ல உலகம்.. இன்னும் எங்கள் ஊரில் பண்ணையடிமைத் தனம் நடத்தும் சிறு ஐ.டி நிறுவனங்களை நானறிவேன் தன் சொந்த சாதியனருக்கு வேலை கொடுத்து அடிமைப் படுத்தும் நிலையும் நானறிவேன்..

  நல்லதொரு விமர்சனம். பாராட்டுகள்.

  பின்னூட்டம் by பூ | ஏப்ரல் 21, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: