கார்க்கியின் பார்வையில்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!

அதாவதுங்க.. பம்பாய்ல குண்டு வெடிச்சதுக்கு நாமெல்லாம் சரியாக் கவலப்படலைன்னு கண்டுபிடிச்சி.. எப்படி சரியாக் கவலைப்படனும்னு கமல்
அய்யங்கார்வால் நமக்கெல்லாம் பாடம் நடத்தியிருக்கிறார். அதான் படம்.

மூணு முசுலீம் ‘தீவிரவாதிகள்’ ஒரு இந்து தீவிரவாதி – பின்னே பேலன்ஸ் வேணும்ல?

யாரந்த மூணு முசுலீம் தீவிரவாதிகள்?

அதுல ஒருத்தரரோட மூணு பொண்டாட்டில ஒரு பொண்டாட்டி 2002ல பெஸ்ட் பேக்கரிக்கு பன்னு வாங்க போனப்ப வயிற்றில் குழந்தையோடு
கொன்னுட்டாங்க.. இவரு அதுக்காக நாலு வருசம் ரிவர்ஸ்ல போயி 1998ல கோயமுத்தூர்ல குண்டு வக்கறாரு

அப்புறம் ஒருத்தர் அல் காயிதா ஒருத்தர் அது மாதிரி வேறெதோ ஒரு இயக்கம் – அதாவது இசுலாமிய மேன்மையை நிறுவ தீவிரவாதப் பாதையை
தெரிவு செய்தவர்கள்..

படம் பூரா ஏதோ ஆர்.எஸ்.எஸ் சாகாவுல பயிற்சி பெற்றவர் எடுத்த மாதிரியே இருக்கு.. இதோ.. இசுலாமிய தீவிரவாதத்த நமக்கு புரிய வைக்கிற அக்கறைல
ஒரு வசனமும் வச்சிருக்காங்க. ஒரு முசுலீம் “தீவிரவாதி” சொல்றாரு – “நவாபா இருந்தோம்.. இப்ப நாயா அலையிறோம்” – உங்க காக்கி டவுசர் கண்ணுல
ஆடுது கமல் சாரே…

ம்… சொல்ல மறந்துட்டனே.. அந்த இந்து “தீவிரவாதி” சொல்றாரு – “ஆயுதம் வித்ததைத் தவிற எனக்கு வேறொன்னும் தெரியாதுங்க. என்ன விட்றுங்க”
– ஏதோ பாவம் வயித்துப் பொழப்புக்கு (அந்தாளுக்கு நெசமாளுமே பெரிய வயிறு தான்) ஏ.கே 47ம்.. ஊருகாச் செலவுக்கு ராகெட் லாஞ்சரும் வித்தவர்
போல… இவரு ரொம்பப் பாவம்ங்கர மாதிரியே காட்றாங்க.

முசுலீம் தீவிரவாதியென்றால் அவனுக்கு அயல்நாட்டு பின்புலம் இருக்கும் – இந்துத் தீவிரவாதி ஏதோ பாவம் என்கிற மாதிரியே காட்சிப்படுத்தியிருக்கிறார்..
முசுலீம் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள் முகங்களில் ஒருவித பெருமிதமும் இந்துத்தீவிரவாதியாக காட்டப்படுபவர் முகத்தில் குற்றவுணர்ச்சியும்
காட்டுகிறார். வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கும் விவாதமொன்றில் அன்பர் ஒருவர் கேட்கிறார் – “முசுலீம் தாங்க வெள்நாட்டிலெல்லாம் போய்
குண்டு போடறாங்க.. இந்துக்கள் அது மாதிரி வேற நாட்டில போய் குண்டு வைக்கிறாங்களா”.. அப்போ நேபாளத்தில் புரட்சிக்கு எதிராக மதக்கலவரத்தை
தூண்டிவிட்டு குண்டுவெடிப்புகளில் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளெல்லாம் யார்? விரல் சூப்பும் பாப்பாக்களா?

சரி மெயின் மேட்டருக்கு வருவோம்… நகரத்துல ஐந்து இடத்தில் குண்டு வச்சிருக்கறதாவும் அது எங்கேன்னு சொல்லனும்னா இவிங்கள விடுதல
செய்யனும் என்றும் சொல்றாரு கமல். யாருகிட்டே……? கமிசனர் மோகன்லால் கிட்டே. அவருக்கு ரெண்டு அசிஸ்டெண்ட் அதுல ஒருத்தரு ஆரிஃப்..

இந்த ஆரிஃபை நாம் கவனமா பார்க்கனும். ஏன்னா படத்துல கமல் காட்டிருக்க “நல்ல” முசுலீம் ஆச்சே. ஒரே வார்த்தைல சொல்லனும்னா இந்தாளு
அதிகமா வசனம் பேசாத ‘விஜயகாந்த்’ ரக போலீசு. கமல் என்னா சொல்ல வர்றாருன்னா… ஒரு “நல்ல” முசுலீம்னா இந்துய ச்செ.. இந்திய தேசிய
கோவணத்துல ஓட்ட விழறா மாதிரி தெரிஞ்சாலே தன்னோட ஜட்டிய கழட்டி பாரத மாதாவுக்கு கடன் குடுத்து காப்பாத்தனும்.

இந்த நாலு தீவிரவாதியையும் ஒரு இடத்துக்கு வரவச்சு அவங்களுக்கு மரண தண்டனை விதிப்பது தான் நம்ம கமல் அய்யங்கார்வாலின் ( இன்ஷா
அல்லான்னு ஓரிடத்தில் கமல் சொல்லாலும் படம் பூரா துருத்திக் கொண்டு தெரியும் பூணூலின் காரணமாக அவரை நான் அய்யங்கார்வாலாகத்தான்
பார்க்கிறேன்) திட்டம்.

அந்தோ பரிதாபம்… ஒரே ஒருத்தர் ( அதான், 2002 பெஸ்ட் பேக்கரில மூணாவது சம்சாரத்த பரிகுடுத்ததுக்காக 98ல கோயமுத்தூர்ல குண்டு வெச்சாரே)
மட்டும் தப்பிச்சுடறார்..

விடுவாரா நம்ம அய்யங்காருவாலு….??? விஜயகாந்தே வெட்கப்படும் அளவுக்கு வசனம் பேசறார்.. பேசறார்… பேசறார்.. பேசறார்.. கடேசீல நம்ம “நல்ல
முசுலீம்” ஆரிஃப் “கெட்ட முசுலீமை” சுட்டுக் கொல்லும் வரை பேசறார்…

அத்தனை நேரம் கமல் பேசியதன் விசயம் என்னான்னா.. தீவிரவாதின்னு சொல்லி எவனைக் கைது பண்ணினாலும் விசாரனையே இல்லாம சுட்டுக்
கொன்னுடனுமாம்…

இதுக்கேண்டா ஒன்னேமுக்கா மணிநேரம் ஒக்கார வச்சி படுத்தியெடுக்கறீங்க?

நரேந்திர மோடி செஞ்ச போலி என்கவுண்ட்டர் செய்தியை ஸ்கேன் பண்ணி ஸ்க்ரீன்ல காட்டிருந்தா முப்பது செகண்டுல படம் முடிஞ்சிருக்குமேடா.. அட
குஜராத் போலீசால் கொல்லப்பட்ட சோராபுத்தீன் படத்தையோ இஷ்ராத் ஜஹான் படத்தையோ கூட காட்டியிருந்தால் நாப்பது செக்கண்டுல படமே
முடிஞ்சிருக்குமேடா..

இதோ கமலின் நியாயம் – மோடியின் நியாயம் – ஆர்.எஸ்.எஸின் நியாயம் – கீழே ரத்தவெள்ளத்தில் கிடக்கிறது….! இது நம்மைப்போல் ஒருவன் பற்றிய
படமல்ல.. கமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ நான் என்று மோஹன் பாகவத்தைப் பார்த்தும் நரேந்திர மோடியைப் பார்த்தும் சொல்கிறார்.. அவர்
செல்லுலாய்டில் சொன்னதற்கான செலவை நமது பையில் இருந்து உருவி விடுகிறார்.

Ishrat Jahan

இந்தப் படம் அப்பட்டமான இந்துத்துவத்தை சொன்னது ஒன்றும் ஆச்சர்யமில்லை.. ஏனெனில் கழுதை பேண்டால் விட்டை என்பதைப் போல கமலின் படம்
ஆர்.எஸ்.எஸ் படம் என்று நமக்கும் தெரியும் தானே.. ஆனால் இந்துத்துவ துவேஷம் பொங்கும் காட்சிகளை ரசிகன் ரசித்த விதம் தான் அதிர்ச்சியளிப்பதாக
இருந்தது.. இந்து தீவிரவாதியாய் வரும் சந்தானம் “ஒரு பொண்டாட்டி போனா என்ன.. அதான் இன்னும் ரெண்டு இருக்கே?” என்கிறார்; பார்வையாளன்
சிரிக்கிறான்..

கமல் “நீங்கள் தீவிரவாதின்னு சொல்லி அரெஸ்ட் பன்றீங்க.. அவன் விசாரனை முடிந்து வெளியே வருகிறான்.. நான் அப்படி தப்பிக்கவிடாமல் தண்டனை
கொடுக்கனும்னு சொல்றேன்” என்கிற ரீதியில் பேசிக்கொண்டு போகிறார்.. இங்கே எல்லோரும் கைதட்டுகிறார்கள்.. எவருக்கும் நாடெங்கும் போலி
மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி முசுலீம்களின் நினைவு வரவில்லை!

வயித்துப் பொழப்புக்கு தீவிரவாதியான சந்தானபாரதி (கரம்சந்த் லாலா) வேனில் இருந்து தடுமாறி தடுமாறி இறங்குகிறான்; ரசிகன் உச்சுக் கொட்டுகிறான்.
அரங்கை விட்டு வெளியே வரும் ரசிகன் ஒருவன் சொல்கிறான் – “முசுலீம்னா அது அந்த ஆரிஃப் மாதிரி இருக்கனும்ங்க”.. ஒரு சாதாரண இந்துவை விட
ஒரு முசுலீம் என்றால் அதிகளவு இந்துதேசிய வெறியை வெளிப்படுத்துமாறு கோரும் ஆர்.எஸ்.எஸ் அரசியலை நைசாக தமிழ்நாட்டிலும் திணிப்பதில்
கமல் வெற்றி பெற்று விட்டார்.

செப்ரெம்பர் 23, 2009 - Posted by | Films, medias | ,

5 பின்னூட்டங்கள் »

  1. வணக்கம் தோழர்,
    விமர்சனம் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

    பின்னூட்டம் by சர்வதேசியவாதிகள் | செப்ரெம்பர் 24, 2009 | மறுமொழி

  2. You idiot. You don’t give a damn about thousands of Hindus killed in the bomb blast in the last 5 years. You never talk about the millions of Hindus killed by the islamic invaders in the last 1000 years. You blood sucking idiot you only care about the islamic terrorists. Shame on you

    பின்னூட்டம் by Hindu Theivravathi | செப்ரெம்பர் 24, 2009 | மறுமொழி

  3. மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

    எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

    நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

    கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

    பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.

    பின்னூட்டம் by vrinternationalists | செப்ரெம்பர் 29, 2009 | மறுமொழி

  4. தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

    பின்னூட்டம் by சர்வதேசியவாதிகள் | நவம்பர் 5, 2009 | மறுமொழி

  5. யோவ் அந்தாளு படம் எடுத்தமா,வேலை முடிஞ்சுது என நினைச்சு ஒதுங்கி போய்ட்டாரு. நீங்களெல்லாம் விமர்சனம் பண்ணியே திரும்ப கலவரங்களை உருவாக்கி விட்ருவீங்க போல இருக்கே. போய் வேலையேதும் இருந்தால் பாருங்கையா. உருப்படுவீங்க.

    பின்னூட்டம் by ஈழத்தான் | திசெம்பர் 27, 2009 | மறுமொழி


சர்வதேசியவாதிகள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி