கார்க்கியின் பார்வையில்

சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!

சாரு நிவேதிதா தொடங்கி.. ஜெயமோகன் வரையுள்ள இலக்கிய கழட்டிகளிடமும்.. வலைப்பூ உலகில் பல வடிவத்தில் (மன/மல)குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் சொறியர்களிடமும் ( மேற்படி கோமான்களுக்கு சொறிந்து விட்டுக் கொண்டிருப்பதே தம் கடன் என வாழும் அல்ப்பைகள்) கேட்கவென்றே சில சந்தேகங்கள் இருக்கிறது..

அதெப்படி உங்களுக்கு மட்டும் உலகமே சமூக/பொருளாதார ரீதியில் கொந்தளிப்பான சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்  பின்நவீனம்/முன்நவீனம்/சைடுநவீனம்/அப்பர் & லோயர் நவீனம் என்று இலக்கிய அரிப்பு தீராமல் இருந்து கொண்டேயிருக்கிறது?

பக்கத்தில் நமது ரத்த சொந்தங்கள் வீடிழந்து நாடிழந்து உறவுகளை இழந்து பராரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் போதும் உங்களால் “குட்டிக்கதை” “புட்டிக்கதை” “காமக்கதை” என்று எந்த கூச்சமும் இல்லாமல் வாந்தியெடுக்க முடிகிறதே எப்படி?

சாதாரண மனிதன் ஒருவன் கூட அநியாய சாவுகளைக் கண்டு உள்ளம் குமுறும் போது உங்கள் “இலக்கிய” எழவெடுத்த மனமோ அதில் கூட அழகியலைத் தேடுகிறதே எப்படி?

எழவு வீட்டின் ஒப்பாரியில் இருக்கும் உலக இசையின் கூறு என்னவென்று தேடும் கூறுகெட்ட புத்தி உங்களுக்கு மட்டும் எப்படி?

அவன் கிள்ளினான் / இவன் ஏசினான் என்கிற ரீதியில் உங்கள் உலகத்தைச் சேர்ந்த சக மிருகங்களோடு மல்லுக்கட்ட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஒரு சதவீதமாவது ஈழத்தில் செத்துப் போன எங்கள் சகோதரனுக்காக ஒரு கவிதையோ / கட்டுரையோ எழுத எடுப்பதில்லையே ஏன்?

தாஸ்தாவெஸ்கி~டால்ஸ்டாய்~மிஷெல் பூக்கோ~இந்திய விவசாயி = இந்த வரிசையில் இறுதியில் வரும் இலக்கியவாதி குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே?

ஏழு நிமிடம் பத்து வினாடிகளில் கடவுளை இசையாய்த் தேடும் உங்கள் காதுகளில் ரை இசையில் இன்பம் தேடும் உங்கள் காதுகளில் முப்பது வருடங்களாய் பக்கத்துத் தீவிலும்~ கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இந்திய வயல் வரப்புகளிலும் ஒலித்து வரும் ஒப்பாரி கேட்க வில்லை அல்லவா? அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால் தான் என்ன?

சிதறும் ரத்தத் துளிகளில் ஓவிய நளினம் தேடும் உங்கள் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொறுகினால் தான் என்ன?

போங்கடா நீங்களும் உங்க இலக்கிய மசிரும்..

ஊரே சாவு வீடாய்க் கிடக்க கொண்டாட்டமாய் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவன் அல்பையென்றால் இந்த இலக்கிய நாதாரிகளோ அறிவார்ந்த அல்பைகளாய் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒக்ரோபர் 31, 2008 - Posted by | Alppaigal, culture

7 பின்னூட்டங்கள் »

 1. This is the ultimate hypocrisy!

  How come you are writing a blog here instead of being out there in Eelam fighting? For that matter, what did you do about Kosovo, Darfur… Maybe these places are far away, how come you never went to Ootthapuram and tried to convince the people who erected a wall to demolish it?

  If you can do anything about things that you supposedly care about, great! Please tell us about it, perhaps one in thousand readers may be inspired to follow suit. If all you can do is to ask why others haven’t done anything about it, perhaps you should start with yourself.

  பின்னூட்டம் by RV | நவம்பர் 2, 2008 | மறுமொழி

 2. கலக்கீடீங்க கார்க்கி..நானும் கடந்த ஒரு மாதமாக இந்த இலக்கிய வியாதிகள் ஏதாவது ஈழ விசயத்தில் எழுதுதானு பார்க்கிறேன்..ம்ஹூம்!..நல்லா கொடுத்தீங்க சூடு!…அதுசரி, ஏகன் விமர்சனத்துக்கு பின்னோட்டம் போடுற ‘தமிழன்’கூட நமக்கு போடலியே ஏன்?..

  பின்னூட்டம் by eganthan | நவம்பர் 2, 2008 | மறுமொழி

 3. Thanks eganathan & RV,

  RV, ஒரு வேளை நான் ஒரு ராம்போவாகவோ டெர்மினேட்டராகவோ இருந்திருந்தால் நீங்கள் சொல்வது போல ஈழம் சென்று ஒரு ‘காட்டு காட்டியிருக்கலாம்’ கொசோவா.. டார்பர் என்ன, ஈராக், ஆப்கான் கூட போயிருந்திருப்பேன்.. என்ன செய்வது.. நானோ வயிற்றுப்பாட்டுக்கு அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் ஒரு சாதாரணன்!

  இருந்தால் ராம்போவாக இரு. இல்லையென்றால் கண்ணீர் விடக்கூட உனக்குத் தகுதியில்லை என்று சொல்கிறீர்கள் – நான் ஹிப்போக்ரட் என்றால்.. நீங்கள் யார்?

  பின்னூட்டம் by kaargipages | நவம்பர் 3, 2008 | மறுமொழி

 4. Thanks eganathan & RV,

  RV, ஒரு வேளை நான் ஒரு ராம்போவாகவோ டெர்மினேட்டராகவோ இருந்திருந்தால் நீங்கள் சொல்வது போல ஈழம் சென்று ஒரு ‘காட்டு காட்டியிருக்கலாம்’ கொசோவா.. டார்பர் என்ன, ஈராக், ஆப்கான் கூட போயிருந்திருப்பேன்.. என்ன செய்வது.. நானோ வயிற்றுப்பாட்டுக்கு அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் ஒரு சாதாரணன்!

  இருந்தால் ராம்போவாக இரு. இல்லையென்றால் கண்ணீர் விடக்கூட உனக்குத் தகுதியில்லை என்று சொல்கிறீர்கள் – நான் ஹிப்போக்ரட் என்றால்.. நீங்கள் யார்?

  பின்னூட்டம் by kaargipages | நவம்பர் 3, 2008 | மறுமொழி

 5. தாராளமாக கண்ணீர் விடலாம். ஏராளமாக விடுங்கள், ஆட்சேபிக்க நான் யார்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது? கண்ணீர் உங்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உங்கள் கண்ணீர் உண்மையானது என்று நானும் நம்புகிறேன்.

  அடுத்தவர்கள் என்ன உணர்ச்சிகளை கொள்ள வேண்டும், என்ன உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏன் உங்கள் கருத்துகளை அவர்கள் மீது திணிக்கிறீர்கள்? சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் உங்களிடம் தான் ராம்போ என்றோ டெர்மினேட்டர் என்றோ சொல்லிக்கொண்டார்களா என்ன? அவர்கள் தாங்கள் அசாதாரண மனிதர்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களா? உங்கள் உள்ளம் குமுறுகிறது, அதைப் பற்றி எழுதினீர்கள், சரி. அடுத்தவர்கள் உள்ளம் குமுறவில்லை என்று உங்களிடம் சொன்னார்களா? அவர்கள் தங்கள் உள்ளக்குமுறலை ப்ளாக் எழுதாவிட்டால் அவர்கள் தமிழர்கள் இல்லையா? நீங்கள் டார்ஃபர் பற்றி எழுதவில்லையே, அதனால் நீங்கள் அந்த படுகொலையை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தமா?

  பின்குறிப்பு: நான் ஜெமோவின் ப்ளாகை படிக்கிறேன், சாருவின் ப்ளாகை படிப்பதில்லை, அதனால் சாரு தன்னை பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார் என்று தெரியாது.

  பின்னூட்டம் by RV | நவம்பர் 3, 2008 | மறுமொழி

 6. RV,

  இவர்களெல்லாம் இலக்கியவாதிகள். பல்லாயிரம் பேர் தங்கள் பக்கங்களைப் படிப்பவர்கள் என்று பீற்றிக் கொள்பவர்கள். ஒருவனின் சிந்தனைப் போக்கும் அதனின்று எழும் படைப்புகளும் அவனைச் சுற்றியுள்ள சமூகத்தின் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும் என்று என்னைப் போன்ற சாதாரணர்கள் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு அல்லவா? இவர்களின் இலக்கிய மனம் இவர்களுக்கு சோறு போடும் சமூகத்தின் அவலத்தால் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதாகவே தெரியவில்லையே?

  ப்ளாக்கில் படுகொலைகளைக் கண்டித்து எழுதாதவனெல்லாம் உணர்சியே அற்றவன் என்று நான் சொல்லவில்லை.. ஏனெனில் இந்த ஊடகமே ஒரு சில குட்டிமுதலாளித்துவ அல்ப்பைகளால் நிறைந்த ஒன்று தான். உங்கள் இலக்கியக் குஞ்சுகள் உலக இசை/ உலக இலக்கியம் / உலக ரசனை என்று உலக அளவில் சஞ்சரிக்கும் பார்வை கொண்டவர்களாய் இருக்கிறார்களே ஏன் கொஞ்சம் கீழிறங்கி தன் சமுதாயத்தைப் பார்க்க மறுக்கிறார்கள்?

  நவ்வா பழத்தின் விலையை வைத்து உலகமயமாக்கலை ஆதரிக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்வு என்பது எப்படி இருக்குமென்றே அறியாத முட்டாள்களாய்த் தானே இருக்கிறார்கள்? ( http://vinavu.wordpress.com/2008/07/26/நவ்வாப்பழம்-ஜெயமோகனுடன/ )

  சமூகத்தினின்று தாம் ஒரு தனித்த அங்கம் என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் அல்லவா.. சாதாரண உழைக்கும் மக்களை விட தாம் உயர்ந்த பிறவிகள் என்கிற நினைப்பில் இருக்கிறார்கள் அல்லவா.. அதைத் தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.. அதாவது இவர்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்ல.. கேடினும் கேடு கெட்ட கழிசடைகள் தாமென்று.

  பின்னூட்டம் by kaargipages | நவம்பர் 3, 2008 | மறுமொழி

 7. உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் இது சரி அல்ல என்று நான் நினைக்கிறேன்.

  தனி மனித சுதந்திரமா இல்லை சமூக பிரக்ஞையா? நான் ஒவ்வொருவருக்கும் அவர் விருப்பப்படும் விஷயங்களை பற்றி எழுத, பேச, படிக்க இருக்கும் உரிமையில் யாரும் தலையிடக்கூடாது என்பதே முக்கியம் என்று நினைக்கிறேன். நீங்கள் “சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதற் கண்டும் சிந்தை இரங்காரடி” என்று எல்லாரும் குமுற வேண்டும் என்று சொல்கிறீர்கள். இது மிகவும் அடிப்படையான வேறுபாடு, பேசி தீர்க்க முடியாது.

  உங்களை hypocrite என்று அழைத்தது கொஞ்சம் அதிகம்தான், அதற்காக வருந்துகிறேன். உங்கள் வார்த்தைகளில் உண்மையான உணர்ச்சிகள் தெரிகின்றன. ஆனால் உங்களால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் நீங்கள் செய்து விட்டீர்களா என்பதையும் பற்றி சிந்தியுங்கள்!

  என்னைப் பற்றியும் சொல்லிவிட வேண்டும் – ஒரு வரியில் சொல்வதென்றால் நான் புலிகளை எதிர்க்கிறேன், ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன். இன்றைய நிலையில் – குறிப்பாக ஊடகங்களில் – புலிகள் = ஈழத் தமிழர்கள் என்ற நிலை இருப்பதால் குழப்பம். நான் புலிகளை பற்றி எழுதிய ஒரு போஸ்ட் – http://koottanchoru.wordpress.com/2008/10/27/புரியாத-புதிர்/

  பின்னூட்டம் by RV | நவம்பர் 3, 2008 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: