கார்க்கியின் பார்வையில்

முதலாளித்துவம் நடத்தும் பாடம்

சமீபமாக காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு செய்திகள் நாம் ஏற்கனவே படித்த சில பாடங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

செய்தி 1) யானைக்கால் வியாதிக்காரனின் காலைப் போல செயற்கையாக வீங்கிப் பெருத்த அமெரிக்கப் பொருளாதாரம் ஊசி பட்ட பலூன் போல வெடித்துச் சிதறியதில் சில கம்பெனிகள் ’நட்டமடைந்தது’. அந்தக் கம்பெனிகளை நட்டத்தில் இருந்து காக்க அதிரடியாக களமிறங்கிய அமெரிக்க அரசு, ஜெனரல் வார்டில் இருந்து எமர்ஜென்ஸி வார்டுக்கு மாறி இருக்கும் முதலாளித்துவ நோயாளியை காப்பாற்ற 700 பில்லியன் டாலரை குளூக்கோஸாக இறக்கியிருக்கிறது. இந்தக் கம்பெனிகள் பெரும்பாலும் நிதிமூலதனம் ஊகவனிகம் போன்ற ஊரான் காசை உள்ளே விட்டுக் கொள்வதன் மூலம் முன்பு பெரிய அளவில் தேட்டை போட்ட கம்பெனிகள் தான்.

அப்படியானால் முன்பு சம்பாதித்த லாபம் இப்போ எங்கே போச்சு? யாரிடம் போச்சு? அந்த லாபமெல்லாம் அந்நிறுவனங்களின் தலைப்பீடங்களில் இருக்கும் ஓரிருவரின் சட்டைப்பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். இப்போது நட்டத்தில் இருந்து காப்பாற்ற வாரியிறைக்கப்படுவது – மக்கள் பணம்!

செய்தி 2)க்கு போகும் முன் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் – கஞ்சிக்கே வக்கில்லாத இல்லாத மக்கள் சைக்கிளில் பயணம் செய்து அல்லலுறுவதைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த ரத்தன் டாடா, அவர்கள் பாதுகாப்பாக பயனம் செய்ய வேண்டுமே என்கிற உயர்ந்த நோக்கில் ஜஸ்ட் ஒரே ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இந்த முடிவை கேட்டதும் இந்தியாவில் ஏழைகளின் ஒரே பங்காளனாக இருக்கும் காமரேட்டுகள் இன்னும் விவசாயத்தை நம்பி பிழைத்துக்கிடக்கும் சில முட்டாள் விவசாயிகளிடமிருந்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி ரத்தன் டாடாவுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

காமரேட்டுகளின் நல்ல உள்ளத்தையும் ரத்தன் டாடாவின் இளகிய மனதையும் புரிந்து கொள்ளாத அந்த முட்டாள் விவசாயிகள் பொங்கிய எழுந்து டாடாவின் பின்புறத்தில் எட்டி உதைத்ததில் மேற்கு வங்கத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு விட்டார். அப்படி தூக்கியெறியப்பட்டவர் நம் மாநிலத்தில் விழ மாட்டாரா என்று மற்ற மாநில முதல்வர்கள் இன்னும் அன்னாந்து பார்த்துக் கிடக்கிறார்கள்.

இப்போ செய்தி 2) அந்திரத்தில் வந்து தனது கனவுக் காரை – இல்லையில்லை – ஏழைகளின் கனவுக்காரை தயாரிக்க டாடா போட்டிருக்கும் ஒரு முக்கிய நிபந்தனை – அவர்கள் சிங்கூரில் கூடாரத்தைக் கலைத்த வகையில் ஏற்பட்ட நட்டத்தை ஆந்திர அரசு ஈடு கட்ட வேண்டும் என்பது – அதாவது மக்கள் பணம்!

இந்த இரண்டு செய்திகளின் மூலமும் நமக்கு முதலாளித்துவம் நடத்தும் பாடம் என்னவெனில் – லாபம் தனியுடைமை! நட்டம் பொதுவுடைமை!

இது குறித்து டெக்கான் க்ரோனிக்கலில் வெளியான செய்தி கீழே –

Nano in AP if Singur loss is paid by state
BY B. KRISHNA PRASAD

Tata Motors is ready to relocate its Nano project to Andhra Pradesh if the government pays for the loss that the company incurred in shifting out of Singur. Tata Motors officials put the figure at Rs 700 crore.
The Chief Minister, Dr Y.S. Rajasekhar Reddy, offered to compensate the loss “to some extent”, about Rs 300 crore.
“The issue of relocation cost got highlighted during the talks,” said a official in the industries department. “Though they had indicated this issue before their visit to the state, we did not anticipate that they were so serious about it.” The government offered cent per cent VAT exemption for the plant, which would work out to more than Rs 100 crore a year and even give land to ancillary units.
With the Tata delegation insisting on total compensation, a visibly disturbed Chief Minister asked his officers not to bother to stretch out for the project.
By Monday evening, Tata Motors officials went “out of contact” with officials of the Chief Minister Office. “The message is clear, they don’t want to talk at this juncture,” said a CMO official.
Earlier on Monday morning, the Tata Motors delegation visited the Vargal mandal in Medak district, about 50 km from the city, to inspect an alternative site. The government offered 600 acres immediately and another 650 acres after acquisition.

ஒக்ரோபர் 7, 2008 - Posted by | medias, politics

5 பின்னூட்டங்கள் »

  1. அன்பரே
    உமக்கு மிக்க நன்றி, இதையெல்லாம் தமிழில் படிக்க ஆன்ந்தமாயிருக்கிறது.
    வாழ்க உமது தமிழ்ப்பணி.

    பின்னூட்டம் by அந்தோணி | ஒக்ரோபர் 7, 2008 | மறுமொழி

  2. தற்போது அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்டுள்ள திவால் நிலைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று புஷ் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப்போகும் ஜான் மக்கெய்ன் கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டில் ஊக வணிகத்தில் ஈடுபடும் பேராசை கொண்டவர்களால் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    அமெரிக்க நிதித்துறையின் தலைமையகம் என்று கூறப்படும் வால்ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவாலாகி வருகின்றன. முதலில் திவாலான பியர் ஸ்டியர்ன்ஸ் வங்கியை ஜே.பி.மோர்கன் சேஸ் எடுத்துக் கொண்டது. ஜே.பி.மோர்கன் சேஸ் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கப்போகிறது என்பதைத் தனியாகக் கவனிக்க வேண்டும்.

    மெரில் லிஞ்ச் நிறுவனத்தை பாங்க் ஆப் அமெரிக்கா எடுத்துக் கொண்டது. தற்போது லேமன் பிரதர்ஸ். இதற்கிடையில் ஒட்டுமொத்த அடமானச் சொத்துகளையும் எடுத்துக் கொள்ள புஷ் நிர்வாகம் நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கேட்டு அதன் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. வால் ஸ்ட்ரீட்டில் இன்னும் எஞ்சியுள்ள பெரிய நிறுவனங்கள் கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவையே.

    ஆனால், சிதம்பரம் மன்மோகன் சிங் போன்ற பொருளாதார புலிகள் இந்தியாவில் ஆண் லைன் வர்த்தகத்தை மேலும் விரிவு படுத்தவும், வங்கிகளில் மேலும் தனியார் மயப்படுத்தவும் துடித்து கொன்டுருக்கிறார்கள்.

    இவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மற்றபடி நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்

    பின்னூட்டம் by lightink | ஒக்ரோபர் 8, 2008 | மறுமொழி

  3. வணக்கம் ,

    தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
    அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

    தமிழ் ஸ்டுடியோ…

    நிகழ்ச்சி பற்றி:

    குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

    தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

    மேலும் விபரங்களுக்கு:

    9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

    உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

    அடலேறு

    பின்னூட்டம் by அடலேறு | ஒக்ரோபர் 10, 2008 | மறுமொழி

  4. நண்பரே , உங்களை ஒரு
    தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும்

    பின்னூட்டம் by அடலேறு | ஒக்ரோபர் 17, 2008 | மறுமொழி

  5. வணக்கம் தோழர்.
    வலையுலகிறகு புதிதாக வந்துள்ளேன்.
    இணைப்பு கொடுக்கவும்.

    நன்றி
    http://porattamtn.wordpress.com

    பின்னூட்டம் by porattamtn | ஒக்ரோபர் 23, 2008 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக