கார்க்கியின் பார்வையில்

மீண்டும் வருவோம்…!

பேரிரைச்சலாய் முன்னேறும்..
மௌனமாய்த் தாக்கித் திரும்பும்..

ஒரே வீச்சில் புவிப்பரப்பைக்
கழுவிடத் துடிக்கும் தவிப்போடு
மீண்டும் பேரிரைச்சலாய் முன்னேறும்..

அந்த அலைகள் ஓய்ந்ததேயில்லை..
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
கரைகள் தூய்மை கொள்ளும் வரையில்
அதன் தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்..
கரையின் கசடுகளைத் தன்னுள்
அமிழ்த்தி அமைதியுறும் வரையில்

அந்த அமைதியின் ஆழத்தில்
மௌனமாய் துயில் கொண்டிருக்கும்
கசடுகளின் வரலாறு அறியாத கரைகள்
பின்வாங்கிச் செல்லும் அலைகளைக் கண்டு
ஏளமாய்ச் சிரித்தாலும்
அலைகள் மீண்டும் எழும் – முன்னிலும் வலுவாய்..

இதோ எம்மைக் கண்டு சிரிக்கின்றன சூலங்கள் –
அந்த கரைகளைப் போலவே..
தெற்கில் படரும் சூலத்தின் காவி நிழல் – கரைகளை
நிறைக்கும் கசடுகளாய்ச் சூழ்கிறது..

நாங்கள் அலைகளாய் எழுவோம்
கடைசிச் சூலம் வரையில் தின்று செரிப்போம்..

ஐரோப்பாவை ஆட்டுவித்த அந்த பூதம் இன்னும்
உறங்கவில்லை

நாங்கள் வருவோம்
மீண்டும் வருவோம் – முன்னிலும் வலுவாய்
முன்னிலும் வேகமாய்..
எமக்கு ஓய்வே கிடையாது…

மே 26, 2008 Posted by | கவிதை, politics | 3 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: