கார்க்கியின் பார்வையில்

நாடு வல்லரசு : மக்கள் பராரிகள்!!

 

யார் எப்போது எங்கே எப்படி நடக்க வேண்டும். எப்படி உட்கார வேண்டும். எப்படி உடுத்திக் கொள்ள வேண்டும். எதைத் தின்ன வேண்டும்.
எதைப் பேச வேண்டும் என்பதையெல்லாம் கண்கானிக்கும் ஒரு self appointed moral policeஆக தன்னை பாவித்துக் கொண்டு வாரத்துக்கு
ஒரு அலப்பறையை கூட்டிக் கொண்டிருக்கும் கட்சி தான் பா.ம.க. இந்தக் கட்சியின் சார்பில் மைய்ய சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர்
அன்புமனி.

இவர் போட்ட பிஸ்கட்டுக்கு ஓவராக குலைக்கும் பிரானியைப் போல தனக்கு போடப்பட்ட பதவியின் காரணமாய் ஓவராய் குலைப்பவர். ஊரில் ஒருத்தரையும் விட்டு வைக்காமல் இதில் நொட்டை அதில் நொல்லை
என்று வாரம் தவறாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். அதில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் நபர்களும் ஒன்றும் உத்தம சிகாமனிகள் இல்லை
என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டு விடுவோம் ( இல்லையென்றால் சாருக், ரஜினி போன்றவர்களுக்கு ஆதரவான கட்டுரையாகிவிடும் அபாயம்
இருக்கிறது ). இப்படி போகிற போக்கில் அனானி கமெண்டு ரேஞ்சுக்கு உதார் காட்டுவது தான் நம்ம அன்புமனி ராமதாஸின் பிரதான பணி.

உலகமயமாக்கல் சூழலில் தண்ணீர் மட்டுமல்ல உயிர்காக்கும் மருந்துகளும் அத்தியாவசியமான அடிப்படை மருத்துவமும் கூட ‘கையில் காசு
வாயில் தோசை’ என்பது போல வணிகமயமாகி வருவது பற்றியோ, இதற்கேற்ப அரசு மருத்துவமனைகள் புறக்கணிக்கப்படுவதையோ, உயிர்
காக்கும் மருந்துகள் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் தவிப்பது பற்றியோ, அரசு மருத்துவமனைக் கட்டிடங்களின் சீரழிந்த நிலை பற்றியோ,
குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வரும் அரசு மருத்துவர்கள் பற்றியோ இது வரையில் வாயையோ இல்லை வேறெதாவதையோ திறந்தது
போல் தெரியவில்லை. அமிதாப் சாருக் ரஜினி போன்றவர்களை கண்கானிப்பதில் காட்டும் அக்கறையில் பாதியளவாவது இந்தப் பிரச்சினைகளுக்கு
காட்டியிருப்பாரா என்பதும் தெரிவில்லை.

ஊடக வெளிச்சத்தில் பல்வேறு பில்டப்புகளுடன் அறிவிக்கப்படும் திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருப்பவை
என்பதை நாமெல்லாம் நடைமுறையில் பார்த்திருக்கிறோம். அவ்வாறு “நடைமுறைப்படுத்தப்படும்” திட்டங்களில் ஒன்றான டி.பி ஒழிப்பு எந்த
லட்சனத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது நேற்று NDTVல் வெளியான இந்த செய்தியால் வெட்டவெளிச்சமாய் அம்பலமானது. அது தொடர்ப
஡ன சுட்டி -http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080049499&ch=5/11/2008%202:22:00%20PM.

டி.பி நோய் கண்டு இறந்து போன இக்பாலின் உறவுக்கார பெண்மனி சொன்ன அந்த வார்த்தைகள் கொஞ்சமாவது மனதில் ஈரம் கொண்ட எந்த
மனிதனையும் உலுக்கிப் போடும் வார்த்தைகள்.. – அரசாங்கத்தால் “வறுமைக் கோட்டிற்கு” மேல் உள்ள குடும்பம் என்று வகைப்படுத்தப்பட்ட
குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சொல்கிறாள் – “நாங்கள் தினமும் ஒரே ஒரு வேளை தான் சாப்பிட முடிகிறது. எங்கள் வாழ்வு அப்படித்தான்
இருக்கிறது”

இந்தச் செய்தியில் சுகாதாரத் துறையின் தோல்வி மட்டும் எதிரொலிக்கவில்லை; மாறாக இந்த நாட்டின் அரசு அமைப்பின் கையாலாகாத் தனம்
பகிரங்கமாக பல்லிளிப்பதும் தெளிவாய்த் தெரிகிறது. சுமார் முப்பது சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக அரசு புள்ளி விபரங்கள்
தெரிவிக்கிறது. ஆனால் அந்த வறுமைக்கோட்டிற்கு மேலே இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினராலேயே ஒரு வேளைக்கு மேல் சாப்பிட முடியாவிட்ட
஡ல், அதற்குக் கீழே உள்ளவர்களால் எத்தனை வேளைக்கு சாப்பிட முடியும்?

வறுமைக் கோட்டிற்கு மேல் இருக்கும் குடும்பத்தாலேயே உயிர்காக்கும் மருந்துகள் வாங்க முடியாத நிலை உள்ளதென்றால்; அதற்குக் கீழ் உள்ளவ
ர்கள் நிலை என்ன?

திட்டங்கள் வகுப்பவர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடைமுறையில் உள்ள நிலவரம் என்னவென்பது அதிகாரத்தில்
உள்ளவர்களுக்கு சுத்தமாக விளங்கவில்லை என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.

அன்புமணி போன்ற அரசியல்வாதிகளோ பரபரப்பு / கவர்ச்சி அரசியல் மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்களே ஒழிய மக்களின் மேல் எந்த
அக்கறையும் கொண்டவர்களல்ல என்பது இன்னுமொருமுறை நிரூபனமாகியுள்ளது.

ஒரு வேளை என்றாவது ஒரு நாள் மெய்யாலுமே இந்தியா வல்லரசாகி விடும் வாய்ப்பு இருக்கிறது ( வல்லரசு என்பதற்கு அமெரிக்க
கொண்டிருக்கும் அர்த்தத்தில் ) ஆனால் அன்றைக்கு இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் பஞ்சைப் பராரிகளாக சரியான உணவோ மருந்தோ
அடிப்படை வசதிகளோ இல்லாதவர்களாக தெருவில் தான் அலைந்து கொண்டிருப்பார்கள்.

மே 12, 2008 Posted by | politics | | பின்னூட்டமொன்றை இடுக

   

%d bloggers like this: