கார்க்கியின் பார்வையில்

ஒரு அரசியல் வியாபாரியின் பேட்டியிலிருந்து…

நம்ம ஊரில் அரசியல் என்பது ஒரு தொழில் என்று எப்போதோ ஆகி விட்டது.. ஆனாலும் இப்படி பச்சையாக ஒப்புக் கொள்ளும் அளவுக்கு
அந்தப் புண் புறையோடிப் போயிருப்பது இன்றைய உலகமயமாக்கலின் உச்சகட்டத்தில் தான். முதலாளித்துவம் எப்படி சமயத்துக்குப் பொருத்தமான
தொழிலில் தனது மூலதனத்தை பாய்ச்சுகிறதோ அதே போல் நேற்றுவரை நடத்தி வந்த கடையில் சரியாக கல்லா கட்டாததால் புதிதாக
அரசியல் பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார்கள் சரத்துக் குமாரும் விஜயகாந்தும்.

ஒரு முறை ஒரு வலைப்பூவில் நடந்த விவாதமொன்றில் செல்வன் என்ற பதிவரிடம் “எம்.ஜி.ஆரின் கொள்கை என்னா?” என்று ஒருவர் கேட்டதற்கு
“அதுவா.. அதான் பாடியிருக்காரே – ‘ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்’ இந்தப் பாடல் தான் தலைவரின் கொள்கையாக இருந்
தது ” என்று பதிலளித்தார். இன்னைக்கு அவரும் விஜயகாந்த்
ஆதரவாளர் தான். அவரிடம் இப்போது போய் விஜயகாந்தின் கொள்கை என்ன என்று கேட்டால் ஒரு வேளை இப்படி பதிலளித்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை – “அதுவா.. அதான் பாடியிருக்காரே – ‘காட்டுறேன் காட்டுறேன் பாத்துக்க பாத்துக்க; என்னெக் காட்டுல மேட்டுல
சேத்துக்க சேத்துக்க’ இந்தப் பாடல் தான் தலைவரின் கொள்கையாக இருக்கும்”

ஆபாசங்களையும் அசிங்கங்களையும் தான் விஜயகாந்து தனது படங்களின் மூலம் சமூகத்தினுள் தினித்து வைத்தான். இவனுக்கு எந்த வகையிலும்
குறையில்லாதவன் தான் சரத்துக்குமார்

இப்படி சினிமாக்களில் தமது ஆபாச சிந்தனைகளைக் கட்டவிழ்த்து விட்ட துட்டு சேர்த்த இந்த இரண்டு அயோக்கியர்களும் தங்கள் அடுத்த
இலக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல்.

சரத்துக்குமார் தனது அரசியல் கட்சி குறித்து எந்த வகையிலான கருத்து வைத்திருக்கிறான் என்பதற்கு கீழே அவன் கொடுத்த பேட்டியில் இருந்து
தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது..

செய்தியாளர் : மதுரையில் மாநாடு நடத்தியதற்கு விளம்பரம் கொடுத்தீர்கள். அதற்குக் கொடுக்க வேண்டிய பில் தொகை லட்சக்கணக்கில் பாக்கி
இருக்கிறதாமே?

சரத்துக்குமார் : “ஒரு புதிய தொழிலை ஆரம்பித்து நடத்தும் போது. சில அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பு. அதிலும் நான் முதன்முதலாக என்
கட்சியின் சார்பில் நடத்திய மாநாட்டு விளம்பரத் தொகை குறித்து உரிய முறையில் ஆடிட்டிங் நடக்கிறது. அது முடிந்ததும், இந்த அசௌகரியங்கள் நிவர்த்தி செய்யப்படும்”

குமுதம் ரிப்போர்ட்டர் – 04.05.2008 இதழில் கொடுத்த பேட்டியில் இருந்து..

மே 10, 2008 - Posted by | politics |

2 பின்னூட்டங்கள் »

  1. ungal aadhangam saridhan…aanal palar padikkum valai poovil avan ivan endru yega vasanam thevaidhana ? arasiyalai thozhilagadhan paarkirargal adhil endha maatru karuththum illai…

    santhosh.

    பின்னூட்டம் by santhosh | மே 11, 2008 | மறுமொழி

  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தோஷ் அவர்களே…

    ஏக வசனத்தை தவிர்த்திருக்கலாம் தான்.. ஆனால் அதைத் தவிர்த்து எழுதும் போது இதை விட கேவலமான கெட்ட வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது.. இதுவே கொஞ்சம் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி எழுதியது தான். 🙂

    பின்னூட்டம் by kaargipages | மே 11, 2008 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: