கொல்லும் இருள்
இது மௌனமா இல்லை மரணமா
என்று தெரியவில்லை.
வார்த்தைகள் மட்டும் தான் செத்துப் போனதா
இல்லை செயல்கள் கூட செத்துப் போனதா
என்றும் புரியவில்லை..
வயிற்றில் சுரக்கும் அமிலம் எரிக்க சோறில்லாமல்
இங்கே குடல்கள் எரிந்து சாம்பலாகிறது..
கொலைகளின் வெற்றிப் பெருமிதம்
முகத்தில் அறைந்த நரகலாய் நாறுகிறது..
சுவர்களற்ற வெளியில் குளிரும் கூட அலைகிறது
உயிர்கள் தேடி..
குளிரின் ஓய்வுக்குக் காத்திருக்கிறான்
சூரியன்..
விதைத்த விதைகளோ தாம்புக்கயிறுகளாய் முளைக்கிறது
அறுத்ததை விற்றால் பூச்சி மருந்தே மிஞ்சுகிறது
உண்டது மட்டுமல்ல கண்டதும் கூட மலமாய்க்
கழிகிறது..
தெரிக்கும் இரத்தத்துளிகளில் ஓவிய நளினம்
தேடும் கண்கள்..
ஓலங்களின் ஒலியில் சிம்பொனி தேடும்
காதுகள்..
பிணங்களின் நாற்றத்துக்குப் பழகிப் போன
நாசிகள்..
உடல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது..
உணர்வுகள்…..?
3 மறுமொழிகள் »
மறுமொழியவும்
பூ வாசம்..
உன் நினைவுகளின் நீட்சி
என் இதயச் சுவர்களை குத்திக் கிழிக்கிறது..
உன் நினைவுகளினின்று எத்தனை தூரம் விலகுகிறேனோ
அத்தனை நெருக்கமாய் உணர்கிறேன்…
-
அண்மை
- முதலாளித்துவம் நடத்தும் பாடம்
- அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
- ஒரு தேவதையின் மரணம்…!
- மன்மோகன் சிங் என்னும் பொய்யர்
- சில பயணங்கள் சில அனுபங்கள்..
- மீண்டும் வருவோம்…!
- கண்ணாடித் திரை
- நாடு வல்லரசு : மக்கள் பராரிகள்!!
- ஒரு அரசியல் வியாபாரியின் பேட்டியிலிருந்து…
- The Great Global food and financial crisis (Courtesy: USA)!!!
- கொல்லும் இருள்
- பாஸிஸ்டுகளின் வெற்றி !!
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- அக்டோபர் 2008 (2)
- செப்டம்பர் 2008 (2)
- ஆகஸ்ட் 2008 (1)
- மே 2008 (5)
- டிசம்பர் 2007 (3)
- நவம்பர் 2007 (2)
- அக்டோபர் 2007 (8)
- செப்டம்பர் 2007 (1)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS
நன்று
நல்ல கவிதை.
தோழரே வணக்கம்